Monday, 23 November 2015

எல்லா பௌர்ணமிகளுக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு

எல்லா பௌர்ணமிகளுக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு.
சித்தர்கள் பௌர்ணமியன்று சிவ பூஜை செய்வார்களென பல நூல்களில் குறிப்புண்டு.
வாழ்வில் முன்னேற பௌர்ணமியன்று நாம் செய்யவேண்டிய வழிபாட்டு முறையைப் பற்றி சித்தர்கள் கூறியதாவது ;
ஒரு மூங்கில் கட்டையை (ஓரளவுக்கு பெரியதாய்) எடுத்துக்கொண்டு, அதன் ஒரு பக்கத்தை மரத்துண்டினால் அடைக்க வேண்டும்.
மூங்கில் கட்டைக்குள் உப்பை நிரப்பவும். ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்களை உப்பின் மேலே வைத்து மஞ்சள் துணியால் மூடவும். மேலும், மஞ்சள் துணியால் மூடப்பட்ட பக்கத்தை, வெள்ளை , சிவப்பு மற்றும் பச்சை நிறம் என மூன்று வகையான கயிற்றினால் 48 தடவை சுற்றி (மூன்று நிறக் கயிர்களையும் ஒன்றாக்கிக் கொள்ளவும்) கட்டவும்.
(வெள்ளை நிறம் மஹாலக்ஷ்மியைக் குறிக்கும்
சிவப்பு நிறம் திருஷ்டி / தீய எண்ணங்களில் இருந்து ரட்சிக்கும்
பச்சை நிறம் நல்ல சிந்தனை / லாபகரமான சூழ்நிலையை உருவாக்கும்)
இந்த மூங்கில் கட்டையை வீட்டு பூஜை அறையிலோ, அலுவலகத்திலோ வைத்து தினம் மஞ்சள் நிற மலர்களால் பூஜை செய்யவேண்டும்.
வெற்றிலையை உள்ளங்கையில் வைத்து அதன் மேல் கொஞ்சம் சாம்பல் / விபூதியை வைத்து கீழே கூறியுள்ள ஸ்லோகத்தை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் 108 முறை சொல்லவேண்டும் ;
ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம்
சௌம் ரீம் ஓம் யங்
ய ந ம ஷி வ ய
ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
சர்வ லோக்ஹா வசி வசி ஸ்வாஹா !
108 முறை இந்த மந்திரத்தை சொன்னதும், வீட்டின் / அலுவலகத்தின் வாயிற்ப் படியில் நின்று கையிலுள்ள விபூதியை ஊதிவிட்டு, வெற்றிலையை ஏதேனும் செடியில் போட்டு விட்டு மூங்கில் கட்டைக்கு ஆரத்தி செய்து வழிபாட்டை முடித்துவிடலாம்.
இந்த மூங்கில் வழிபாட்டை பௌர்ணமியன்று ஆரம்பிப்பது நல்லது. மூங்கிலுக்குள் இருக்கும் உப்பை அடுத்த பௌர்ணமியன்று மாற்ற வேண்டும். பழைய உப்பை தண்ணீரில் கரைத்து தென்னைமரத்தில் ஊற்றலாம், மேலும் அதிலுள்ள நாணயங்களை பணப்பெட்டியில் வைக்கலாம்.
பௌர்ணமி தினத்தில் இப்படி செய்து வர செல்வ செழிப்போடு எல்லா வழமும் பெற்று வாழ்வார் என சித்தர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment