Wednesday, 18 November 2015

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

மற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில் கண்டால் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது. பாம்புகள் பயத்தை ஏற்படத்தும் வகையில் இருக்கும் போதிலும் கூட, கனவில் வரும் பாம்புகள் பொதுவாக சிக்கலான ஒன்றாக இருக்கும்.

ஏனெனில் பாம்புகள் கனவில் வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. அதே போல் பல அடுக்கு சின்னங்களையும் அவை குறிக்கும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

உங்களை எச்சரிக்கும் முயற்சியாக இருக்கலாம்
ஆச்சரியங்கள் மூலம் பாம்புகள் தடுமாறும். இவற்றை ரகசியங்களோடு தொடர்புப்படுத்தலாம். “புல்லில் உள்ள பாம்பு” என்றால் நம்ப முடியாத ஒருவர், உங்களை ஏமாற்றக்கூடியவர், உங்களிடம் இருந்து ரகசியத்தை காப்பவர் என குறிப்பிடலாம். சுவாரசியமாக இது வேறு ஒரு நபராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்கு அறிந்த உண்மை ஒன்று இருக்கலாம்; ஆனால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்.

மறைந்திருக்கும் பேரார்வங்களை கொண்டுள்ளீர்களா?
கனவில் வரும் பாம்புகள், அடிப்படையில் நாம் பயப்படக்கூடிய ஆற்றல் மிக்க அறிகுறிகளை குறிக்கும். அதற்கு காரணம் அவை கொண்டுள்ள பலமும், அது கொண்டு வரும் மாற்றமே. சீறி எழும் பாம்பு, அல்லது தூங்கிக் கொண்டிருந்த நிலையில் இருக்கையில் விழிக்கும் பாம்பு, அல்லது சுருண்டிருந்த பாம்பு திடீரென உயிரை பெறுவது போன்றவைகள் எல்லாம் சுலபமாக ஓடத் துவங்கும் உங்களது ஆற்றல், பேரார்வம் மற்றும் உள்நோக்கத்தை குறிக்கும்.

ஆன்மீக வளர்ச்சியைக் குறிக்கும்
கனவுகளில் வரும் பாம்புகள், ஆன்மீக செயல்முறையான, முதுகு தண்டின் அடியில் இருந்து தலையின் உச்சியை அடைந்து, அதற்கு மேல் செல்லும் ஆற்றலான குண்டலினியை விழிக்க வைக்கும் ஒன்று என சில கிழக்கு கலாச்சாரங்கள் நம்புகின்றன. கனவில் வரும் பாம்புகள் உங்கள் அழிவை குறிப்பதற்கு பதிலாக உங்களை மாற்ற முயல்வதாகும். அதனால் அதை எதிர்த்து போராடுவதா, அல்லது ஓடுவதா அல்லது மாற்றத்தை தழுவிக் கொள்வதா போன்றவைகள் எல்லாம் உங்களை பொறுத்தது.

பாம்பு என்பது மயக்கத்தை குறிக்கும்
பொதுவாகவே, கனவில் பாம்பு வந்தால், நீங்கள் ஒரு கஷ்டமான சூழ்நிலையை கையாண்டு கொண்டிருக்கிறீர்கள் அல்லது உங்களது வாழ்க்கையில் உணர்ச்சி ரீதியாக போராடி வருகிறீர்கள் என அர்த்தமாகும். இந்த கனவு பகுப்பாய்வின் நேர்மறையான பக்கத்தை பார்த்தீர்கள் என்றால், பாம்புகளைப் பற்றிய கனவு, நடந்து கொண்டிருக்கும் குணமாக்குதல் மற்றும் மாற்றத்தை குறிக்கும்.

பாம்புகளுடனான உங்களது தனிப்பட்ட சமன்பாடு
கனவில் வரும் பொதுவான விலங்கு என்னவென்று பார்த்தோம் என்றால் அது பாம்பு தான். பாம்பு என்பது சிக்கல் மிகுந்த சின்னங்கள் ஆகும். அதற்கு காரணம் அவை நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டு அர்த்தங்களையும் கொண்டிருக்கும். பாம்பு வரும் கனவின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள பாம்புகளுடனான உங்களது சொந்த அனுபவங்களை கருத வேண்டும். அதேப்போல் உங்களது கலாசாரத்தில் பாம்புகள் எப்படி பார்க்கப்படுகிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, பாம்பை வளர்ப்பு பிராணியாக வைத்துக் கொண்டால், அதை வெறுப்பவருக்கோ அல்லது பயப்படுபவருக்கோ வரும் கனவை விட வளர்ப்பவருக்கு வரும் கனவின் அர்த்தம் வேறு மாதிரியாக இருக்கும்.

பாம்புகள் பயத்தை குறிக்கும்
பலருக்கும் பாம்பு என்றால் குலையே நடுங்கும். கணிக்க முடியாதவை பாம்பு. எந்தவொரு எச்சரிக்கை இன்றியும் அது எப்போது வேண்டுமானாலும் தாக்கும். அதனால் பாம்பு வரும் கனவு உங்கள் வாழ்க்கையில் கணிக்க முடியாத ஒன்றையோ அல்லது உங்களது கட்டுப்பாட்டை மீறிய ஒன்றையோ குறிக்கும். தெரியாத ஒன்றின் மீது நீங்கள் பயம் கொண்டவராக இருப்பீர்கள்.

மறைந்திருக்கும் அச்சுறுத்தல்களை பாம்பு குறிக்கும்
சில நேரங்களில் பாம்புகளை காண்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். அவை புதர்களுக்குள் ஊடுருவி செல்வதால், மறைந்திருக்கும் அச்சுறுத்தல்கள் அல்லது வஞ்சகத்தை அது குறிக்கும். தங்கள் காயை நகர்த்துவதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காக அவர்கள் காத்திருப்பார்கள். உங்களை பாம்பு கடித்தால், உங்கள் நிஜ வாழ்வில் நீங்கள் அறிந்திராத வஞ்சகம் உங்களை சுற்றியுள்ளது என்பதை உங்கள் கனவு எச்சரிக்கும்.

குழந்தை பாம்பு
குழந்தை பாம்பை உங்கள் கனவில் நீங்கள் காண்கிறீர்கள் என்றால் அச்சுறுத்தலை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என அர்த்தமாகும். நீங்கள் பாம்பை கொன்றாலோ அல்லது பாம்பு இறந்தாலோ, உங்களை சுற்றியுள்ள ஆபத்து விலகி விட்டது என அர்த்தமாகும்.

இரக்கமற்ற நபரை பாம்பு குறிக்கும்
உங்களை சுற்றியுள்ள தீய எண்ணம் கொண்ட இரக்கமற்றவரைக் கூட பாம்பு குறிக்கும். அத்தகைய ஆணையோ பெண்ணையோ நம்ப வேண்டாம் என உங்கள் கனவு கூறுகிறது. உங்கள் உணர்வுகளை நன்றாக தெரிந்த ஒருவரிடம் வெளிப்படுத்த பயமாக உள்ளதென்றால், உங்கள் கனவில் பாம்புகள் வரலாம்.

பாம்பு கனவை எப்படி விளக்குவது?
பாம்புகளின் அறிகுறிகள் நேர்மறையானதாக இருக்கலாம் அல்லது எதிர்மறையானதாக இருக்கலாம். அது பாம்பின் மீது உங்களுக்கு உள்ள உணர்வுகளை பொறுத்தது. சில நேரங்களில், பாம்புகள் மீது ஆரம்பம் முதல் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை கடந்து செல்வது கஷ்டமாக இருக்கும். அதனால் உங்கள் கனவைப் பற்றி அதிகமாக நீங்கள் ஆராயலாம்.

ஞானத்தின் மூலம்
ஆசியா மற்றும் பூர்வீக அமெரிக்க கலாச்சாரங்களுக்கு மத்தியில், பாம்பு என்பது ஞானத்தின் மூலமாகும். பாம்பு அதன் தோலை உரித்து, மீண்டும் புது தோலை பெறும் ஆற்றலில் இருந்து தான் இந்த ஞானத்தின் யோசனை தோன்றியது. இந்த அடிப்படையில் ஒருவர் பாம்பைக் பற்றி கனவு கண்டால், புதுப்பித்தல், பிரச்சனையை போக்குதல் மற்றும் நல்ல விஷயங்கள் பற்றியான கனவாகும் அது.

கருவுறும் பாம்பு
கருவுறும் தன்மை, பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் போன்றவற்றை குறிக்கும் உயிரினமாக, பாம்பை பழங்காலத்தில் அனைத்து திசையிலும் வழிபட்டு வந்தனர். உலகத்தை அரவணைத்த படி உள்ள பாம்பு என்பது பொதுவாக உள்ள ஒரு சித்திரமாகும். நார்டிக் ஜோர்முன்கந்தர் முதல் இந்துக்கள் வரை, உலகத்தை ஒன்றாக வைத்திருக்கும் பொறுப்பை பாம்பு கொண்டுள்ளது என இந்த சித்திரம் மூலம் நம்பி வந்துள்ளனர். இந்த அண்ட பாம்பு, முட்டையைச் சுற்றி வளைத்துள்ள வண்ணம் இருப்பதால், கருவுறும் தன்மை மற்றும் மறு பிறப்பு, அண்டத்தின் உருவாக்கம் போன்றவற்றை தெளிவாக இது குறிக்கும்.

அழிக்கும் பாம்பு
கனவில் வரும் மரணம் எப்போதுமே மாற்றத்தை குறிக்கும். கனவில் வரும் பாம்பு உங்களை கடிப்பதன் மூலம், அல்லது கொத்துவதன் மூலம், அல்லது விழுங்குவதன் மூலம், அல்லது வேறு ஏதேனும் வழியில் உங்களை அழிக்க முற்பட்டால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தடுத்து, வாழ்க்கையின் நல்ல விஷயங்கள் (நம்பிக்கை, உறவு, போன்றவைகள்) போவதற்கான ஒரு அழைப்பாக அதனை நீங்கள் கருதலாம். இதை இப்படியும் சொல்லலாம் – வேறு ஒன்றை பெறுவதற்காக மற்றொன்றை இழக்க போகிறீர்கள்.

சுகவீனத்தையும் கூட பாம்புகள் குறிக்கும்
உங்கள் கனவில் பாம்பிற்கு காயம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது சுகமற்று இருந்தாலோ, உங்களுக்குள் ஏதோ ஒன்று சரியாக செயல்படவில்லை என அர்த்தமாகும். அதேப்போல் உங்களை கடிக்க பாம்பு முயற்சி செய்தால், வரப்போகும் சுகவீனத்தை அது குறிக்கலாம். உங்களுக்கு மட்டும் தான் தெரியும் பாம்பு வந்த கனவின் அர்த்தம் என்னவென்று. இத்தகைய அடுக்குகளைப் பார்க்கையில் பல முக்கிய தகவல்களை நாம் பெறலாம் அல்லது ஒன்றையுமே அறிய முடியாமலும் போகலாம். பாம்பு கடிப்பது போல் கனவு காணும் அனைவருக்குமே சுகவீனம் ஏற்படுவதில்லை.

கனவில் வரும் பாம்பைப் பற்றி இஸ்லாமிய மதம் கூறுவது என்ன?
இஸ்லாமிய மதத்தில் பாம்பினை ஒரு தீய உயிரினமாக பார்க்கப்படுகிறது. வரப்போகும் பிரச்சனை அல்லது தெரியாத ஆபத்தை அவை குறிக்கும். உங்கள் கனவில் உங்களை பாம்பு துரத்தினால், கடித்தால் அல்லது வீட்டிற்குள் நுழைந்தால், உடனடி கவனம் தேவைப்படும் அளவிற்கு உங்கள் வாழ்வில் மோசமாக ஏதோ ஒன்று நடக்க போகிறது. மறுபுறம், பாம்பை வெல்வதை போல் கனவு கண்டால், உங்களது கடினமான சூழ்நிலைகளை கையாளக்கூடிய உங்களது தனிப்பட்ட சக்தி மற்றும் ஆற்றலை குறிக்கும்,.

கிறிஸ்துவ மதத்தில் பாம்புகளின் பங்கு
கிறிஸ்துவர்கள் மற்றும் யூதர்கள் பகிர்ந்து கொள்ளும் ஹீப்ரு பைபிளில் பாம்பிற்கு முக்கிய இடமுள்ளது. ஈடன் தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளை, ஞானத்தின் மரத்தில் இருக்கும் கனியை உண்ணுமாறும், அப்படி செய்தால் அவர்கள் சாகாமல் இருப்பார்கள் என்றும், ஒரு பாம்பு ஏமாற்றியது. தோட்டத்தில் இருந்த இந்த பாம்பு பாலியல் ஆசைகளைக் குறிக்கும் என சில விளக்கங்கள் கூறுகிறது. அதனால் தூய்மையை மனிதன் இழந்தான் என்றும் கூறுகிறது. ஆனால் வேறு சிலரோ இந்த பாம்பை ஞானத்தை தூக்கிச் செல்லும் ஒன்றாகவும் கருதுகின்றனர். புதிய கிறிஸ்துவ ஏற்பாட்டில் பாம்புகள் சாத்தானாக கருதப்படுகிறது.

ஒழுக்கமற்ற குணங்களைக் குறிக்கும்
பாம்பைப் பற்றி கனவு என்றால் கிறிஸ்துவ மதமும், யூதர்களின் மதமும் பலவற்றை கூறுகின்றன. அதில் முக்கியமான ஒன்று, பாம்பு என்றால் மோசடியை குறிக்கின்றன, ஒன்று அது நீங்களாகவே இருக்கலாம் அல்லது மற்றவர்களாக இருக்கலாம். பாம்புகளைப் பற்றிய கனவு என்றால் அது பாலியல் ஆசையையும் குறிக்கலாம். குறிப்பாக நீங்கள் வெட்கப்படும் அல்லது தவறு என நினைக்கக்கூடிய ஆசைகள்.

பாம்பைப் பற்றிய கனவுகளைப் பற்றி சீனர்களின் விளக்கம்
சீன ராசி படி, பாம்புகள் புத்திசாலியான உயிரினமாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் கூட அவை மர்மமான ஒரு பிராணியாகும். சற்று சூழ்ச்சி கொண்டவையும் கூட. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மத சித்தாந்தங்களில் பார்க்கப்படுவதை போல் சீனர்கள் இதனை அவ்வளவு தீய உயிரினமாக கருதவில்லை. கனவில் பாம்பு ட்ராகனாக உருமாறினால் அது தனிப்பட்ட வளர்ச்சியின் அறிகுறியாகும். பாம்பு என்பதே சக்தி மற்றும் பலத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. உங்களை பாம்பு தாக்க முற்பட்டால், அதற்கான உங்களின் எதிர்ச்செயல் உங்கள் கனவில் அர்த்தத்தை கூறும். சவால்களை எதிர்கொள்ளும் உங்கள் திறனையும் அது குறிக்கும்.

பாம்புகள் கனவில் வருவதற்கான விளக்கம்
பல கனவுகள் நம் இறந்தகால மற்றும் நிகழ்கால நிகழ்வுகளுக்கு உங்கள் ஆழ்மனதில் உள்ள எதிர்ச்செயலாகும். தொந்தரவளிக்கும் நினைவுகள் அல்லது மோசமான குழந்தை பருவ நினைவுகள் போன்றவைகள் இருந்தால், அவை உங்கள் கனவில் பாம்பாக பிரதிபலிக்கும். அதனால் உங்களது மோசமான முன்னாள் அனுபவங்களை கடந்து செல்ல டைரி எழுதுங்கள் அல்லது மனநல மருத்துவரை சந்தியுங்கள். இதனை சரி செய்யாமல் விட்டு விட்டால், இந்த பிரச்சனைகள் பாம்பின் ரூபத்தில் உங்கள் கனவில் வந்து உங்களை பாடாய் படுத்தும்.

No comments:

Post a Comment