Tuesday, 10 November 2015

ஏசுவை இந்துக்கள் கும்பிடலாமா? பகுதி

ஏசுவை இந்துக்கள் கும்பிடலாமா?
பகுதி - 4

பல இந்துக்களின் வீடுகளில் இந்த சிலுவைப் படத்தை வைத்திருப்பார்கள். என் நண்பரது வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்தது. பட்ட காலிலேயே படும் என்பது போல தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அவரது வீட்டுக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது, அவரது வீட்டில் இருந்த இந்த சிலுவைப் படத்தை பார்த்து அவரிடம் ஏன் இந்த சிலுவைப்படத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். நண்பர் ஒருவர் கொடுத்தார் என்று சொன்னார். எப்போதிருந்து என்று கேட்டேன். அவர் சொன்ன தேதி, அவரது வீட்டில் அகாலமாக துயர சம்பவங்கள் நடைபெற ஆரம்பிப்பதற்கு முந்தைய தேதி. இந்த படத்தை யாரிடமாவது கொடுத்து விடுங்கள். படம் இருந்த அந்த இடத்தில் விநாயகர், சரஸ்வதி, லட்சுமி இருக்கும் படத்தை வையுங்கள் என்று சொன்னேன். அல்லது கல்யாண கோலத்தில் இருக்கும் எம்பெருமான் சிவனின் படத்தை வையுங்கள் என்று சொன்னேன். அவர் மறு பேச்சு பேசாமல் அன்றே செய்துவிட்டார். அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது அவரது வாழ்க்கை. சென்ற முறை என்னை பார்த்தபோது, கண்ணீர் மல்க, உங்கள் அறிவுரைக்கு நன்றி என்று தழுதழுத்தார்.

இது ஒரு முறை அல்ல, பல முறை நடந்திருக்கிறது. ஏதோ நண்பர்கள் கொடுத்தார்கள், பரந்த மனம் ஆகிய காரணங்களுக்காக சிலுவை படத்தை வைத்துக்கொண்டுவிட்டு பிறகு துயர சம்பவங்கள் நடந்து, மன நிம்மதி இழந்து, மன அழுத்தத்தில் சிக்கிக்கொண்டவர்களை நான் அறிவேன். மன அழுத்தத்தில் சிக்கிய பின்னால், கிறிஸ்துவர்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து, இவ்வாறு மன அழுதத்தில் சிக்கியதற்கு காரணம் இந்து கடவுள்களை நீ வணங்குவதுதான் காரணம் என்று பொய் சொல்லி முழு கிறிஸ்துவராக மாற்றி, பெயர் எல்லாம் மாற்றி கிறிஸ்துவ போதகராக ஆனவரும் ஒருவர் இருக்கிறார். அவரை பார்த்தபோது நான் இதே விஷயத்தை அவரிடம் தெளிவு படுத்த முயற்சித்தேன். அவர் காதிலேயே விழவில்லை. என்னை ஏதோ கொல்லப்பட வேண்டியவன் என்பது போல பார்த்தார். மூளைச்சலவை முற்றிவிட்டது என்று விலகிவிட்டேன்.

 பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்று அறிந்து மனம் வருந்தினேன். அப்படி நான் விலகியிருக்கக்கூடாது, என்னை என்ன திட்டினாலும் அவரை அங்கிருந்து விலக்கி கொண்டுவந்திருக்க வேண்டும் என்று வருந்தினேன்.

இயேசுவின் கதையை நாம் படித்தால் நம் ஊரில் இருக்கும் நடுகல்களின் கதை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. கோவலன் போன்று தான் செய்யாத குற்றத்துக்காக இயேசு கொல்லப்பட்டதாக அந்த கதை சொல்கிறது. அவர் தீமை செய்துவிடக்கூடாது என்று கருதிய பழங்குடியினர் அவருக்கு கோவில் கட்டி, பிறகு அவரது கதை பலவிதமாக எழுதப்பட்டு, பிறகு அது ஒரு மதமாக ஆகியிருக்கலாம். அப்படி துர்மரணம் அடைந்த ஆன்மாக்களை ஐந்நூறு வருடங்களுக்கு பிறகும் வணங்குதல் தவறு.

இப்போது மேற்கத்திய நாடுகளை எடுத்துப் பார்த்தால், ஏராளமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்று அறிகிறோம். கிறிஸ்துவ நாடுகளில் மிக அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் 25 சதவீத பெண்கள் பல கணவர்கள் மூலம் பிள்ளைகள் பெற்றுகொள்கிறார்கள் என்று அறிகிறோம். ஏராளமான குழந்தைகள் இப்படி மாற்றாந்தாய், மாற்றான் தந்தைகளிடம் வளர்கின்றார்கள். அவர்களால் பல தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள்.
கத்தோலிக்க சர்ச்சில் இருக்கும் பாதிரியார்கள் சர்ச்சுக்கு வரும் சிறுவர்களை பாலுறவு பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

 கன்னியாஸ்திரிகள் சிறுவர்கள் சிறுமியரை பாலுறவு வல்லுறவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சர்ச்சுகள் நடத்தும் அனாதை இல்லங்களில் இருக்கும் சிறுவர்கள் கேட்பாரின்றி பலாதகாரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏராளமான சிறுவர்கள் பாதிரியார்கள் மீதும் கத்தோலிக்க சர்ச் மீதும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதனால், கத்தோலிக்க சர்ச் திவாலாகிவிடும் என்று கருதுகிறார்கள். கத்தோலிக்க சர்ச் மட்டுமின்றி பாப்டிஸ்டு சர்ச், பெந்த கொஸ்தே சர்ச் என்று எல்லா சர்ச்சுகளிலும் இப்படிப்பட்ட கேவலங்கள் தினசரி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தங்கள்து குற்றம் கண்டிபிடிக்கப்படவில்லை என்று கருதிகொண்டிருந்த பாதிரியார்கள், குற்றங்களுக்காக கேவலப்படும்போது சிலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

 மேற்கத்திய நாடுகளில் அறுபது வருடங்களுக்கு முன்னால் நடந்த சர்ச் பாலுறவு பலாத்காரங்களும் இன்றாவது வெளிவருவதற்குக் காரணம் விடாது தீவிர புலன்விசாரணைகள் செய்து இவற்றை வெளிக்கொண்டு வரும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் தான்!
இந்த கிறிஸ்துவ சர்ச்சுகள் பெரும் பலம் வாய்ந்தவையாக ஆகிய பின்னாலிருந்து இன்றுவரை நடந்திருக்கும் அனைத்து குற்றங்களும், பாலுறவு பலாத்காரங்களும் தண்டிக்கப்படவே இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

இவற்றுக்கெல்லாம் காரணம் தவறான வழிபாடுதான். யாரை முன்மாதிரியாக வைக்கிறார்களோ, யாரை வணங்குகிறார்களோ, அந்த பிம்பம் மனதில் ஆழ பதிந்துவிடுகிறது. இயேசு திருமணம் செய்தவரில்லை. இயேசு வன்முறையாளர். தன்னை கும்பிடாதவர்களை கொல்லச்சொன்னவர். மனைவி, மக்கள், பெற்றோர் ஆகியவற்றை விட்டுவிட்டு தன்னை மட்டுமே பின்பற்றச் சொன்னவர். இவை எல்லாம் பைபிளில் இருந்தாலும், பாதிரியார்கள் இவற்றை தினசரி போதிப்பதில்லை என்றாலும், பைபிளை படிக்கும் கிறிஸ்துவர்கள் இவற்றை படிக்கத்தான் செய்வார்கள். குழந்தை ஏசு படம் இருந்தால் கூட, மேரி மாதா, வேளாங்கண்ணி படம் இருந்தால் கூட, இவையெல்லாம் பின்னணியில் இருக்கின்றன என்று நாம் அறிந்துகொள்ளவேண்டும். இவை அவர்களது மனதில் ஆழப்பதிந்து குரூரத்தையும் சமூக விரோத சிந்தனையையும் ஆழ்மனதில் உருவாக்கிவிடுகின்றன.

உலகத்தில் பெரும் போர்களை செய்த கிறிஸ்துவர்கள் செல்லும் இடமெங்கும் இனப்படுகொலையையும் ரத்த ஆறறையும் ஓட வைத்தார்கள். அமெரிக்காவில் இருந்த பழங்குடியினரை கொடூரமான முறைகளில் கொன்றார்கள். ஆப்பிரிக்காவில் இருந்தவர்களை பைபிள் சொல்கிறது என்பதற்காக அடிமைகளாக்கி வேலை வாங்கினார்கள்.  இவையெல்லாம் பைபிளும் இயேசுவும் அவர்களிடையே உருவாக்கிய மன விகாரங்களால் உருவானவையே. ஒரு புறம் கருணை என்று பேசிக்கொண்டே மறுபுறம் நடத்தும் கொலை, பாலுறவு பலாத்காரம் என்பது தீவிரமடைந்துவிட்ட மனவிகாரத்தின் ஒரு பக்க விளைவே.

இயேசு சொன்ன சில நல்ல விஷயங்களை சுவர்களில் எழுதி வைத்து பிரச்சாரம் செய்யும் கிறிஸ்துவ சர்ச்சுகளுக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இல்லை. ஆனால், அவர்கள் மேலும் மேலும் ஆட்களை சேர்ப்பதற்காக இவைகளை எல்லாம் மூடி மறைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். நாம் இயேசுவை சாத்தான் என்றோ தீய சக்தி என்றோ சொல்வதில்லை. ஆனால், கிறிஸ்துவர்கள் இந்து தெய்வங்களை சாத்தான் என்றும் தீய சக்தி என்றும் சொல்ல தயங்குவதில்லை. இதன் மூலம் அவர்களது மன விகாரங்களை மேலும் வலுப்படுத்திக்கொண்டு விடுகிறார்கள்.
தாமரை மலர்களை அசிங்கம் அசிங்கம் என்று மூளைச்சலவை செய்துகொண்டும், ரத்தம் வடியும் உருவங்களை அழகு அழகு என்றும் திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டே இருந்தால், மனம் முழு விகாரமடைந்து சித்தமே கலங்கிவிடும்தானே?

முதலில், நம் வீடுகளில் இருக்கும் அவல ஓவியங்களை அகற்றுவோம். துயர சிந்தனைகளையும், மன அழுத்தத்தையும் விளைவிக்கும் படங்களை அப்புறப்படுத்தி அங்கு கல்யாணக் கோலத்தில், மங்கலகரமான உருவத்தில் இருக்கும் தெய்வ வடிவங்களை வைப்போம். நம் கிறிஸ்துவ நண்பர்களோ இஸ்லாமிய நண்பர்களோ ஏதேனும் படமோ புத்தகமோ கொடுத்தால், நாகரிகமாக மறுப்போம்.
எம்பெருமான் துணையிருக்கட்டும். வாழ்க வளமுடன்.
 வாழ்க வையகம்.வந்தே மாதரம்.

நன்றி :ஆர். கோபால் (தமிழ் ஹிந்து).

No comments:

Post a Comment