Saturday, 14 November 2015

ஆறாதாரங்களைபார்வையிடல்

ஆறாதாரங்களைபார்வையிடல்.

நாடிகள் 72000 மேல் நம்மில் இருக்கின்றன.அவற்றில் முக்கியமானவை-10. அதிலும் மிக முக்கியம் 3.
இடா,பிங்களா மற்றும் சுஷும்னா.

எல்லாமே அதில் இருக்கிறது. மற்றவர்களிடமிருந்து ஒரு யோகி எப்படி வித்தியாசப்படுகிறார் என்றால் அவருடைய சுவாசம் சுஷம்னையில் நடை பெறும்.

மூலாதார சக்ரம்/ பிருதிவி தத்துவம்- சாகிநி தேவி அதிபதி/ நால் இதழ் தாமரை/ வரதா-ஸ்ரீ-ஷண்டா-சரஸ்வதி என்ற 4 பரிவார தேவதைகள். va-s'a-sha-sa என்னும் 4 அக்ஷாரங்கள் 4 இதழ்களிலும் இருக்கும்.
ஸா கினி தேவிக்கு முக்தாந்நம் பிரியம்.
இன்னும் கணபதி/இந்திரன் இதன் அதிபதிகளாக சொல்ல படுகிறார்கள்.

பரமேசுவரன் சக்தியுடன் காமேஸ்வரன்-காமேசுவரியாகஎழுந்தருளி ஷ்ருஷ்டியின் முதல் படி ஆரம்பம்.

புலன் நுகர்ச்சியில் தள்ளும் படி. இதில்தான் அநேகமாக எல்லோரும் இருக்கிறோம். இந்த சக்கிரதை தாண்டி குண்டலினி சக்தி மேலே ஏற வேண்டும்.
ஹம்ஸ:ஸோஹம் என்ற அஜபா மந்திரம் காம தக னத்தை நடத்தும்-உபாஸநை மூலம். மூலா தாரத்தில் தோன்றும் காமம் அநாஹத சக் கிரத்தில் தகனம் செய்ய படுளிரது.
பஞ் சா க்ஶர மந்திரத்தில் இந்த இடம் பிரணாவத்தை குறிக்கும்.
free will இங்கே இறைவனால் தர பட்டு இருக்கிறது. காமம் தகந மானால்தான் சுவாதீஷ்டானம் என்ற பேச்சே!

ஆறு மனமே ஆறு
=================
ஆறு சக்கிரங்கள் நம் உடலில் இயங்குபவை என்று கணக்கு.
அட்ச கோடு தீர்க்க கோடு போல இவை கற்பனையில் சொல்லப்பட்டுள்ள சக்கிரங்கள். அதை ஒரு வித சென்டர் என்றோ ஏரியா என்றோ பொருள் கொள்ளலாம்.

மூலாதாரம் என்பது முதுகெலும்பு முடியும் இடத்தில் உள்ளது .
இந்த சக்கரம் எருவாய்க்கு (குதம் )இரண்டு விரல் கட்டை மேலும் கருவாய்க்கு (குறி) இரண்டு விரல் கட்டைக்கு கீழேயும் உள்ளது.
இதுவே முதல் ஆதாரமாகவும் எல்லா ஆதாரங்களுக்கு அடிப்படை முதல் ஆதாரமாக இருப்பதோடு குண்டலினி என்ற பிரம்ம சக்தி கேந்திரமாகவும், (பிராணன் , நாதம் , ஹம்சம் ) என்ற பிராண மந்திரமும் தோன்றும் இடம் என்றும் முடுகுதண்டின் (எலும்பின் ) கீழும் அமைந்த விடமாகும்.

பஞ்ச ( ஐம் பூதங்களில்) ஒன்றான மண் , (லம்) பிரித்வி , இதன் நிறம் மஞ்சள் . இதன் அதி தேவதை மஹா கணபதியாக இருப்பதால் பிரணவ சப்தமாகவும் ஓங்கார வடிவமாகவும் , ஓங்கார உற்பத்தி தலமாகவும் விளங்குகிறது.

இந்த மூலாதார சக்கரத்திற்கு வடிவம் வட்டத்தின் உள் அமைந்த முக்கோணமும் அதன் நடுவில் நான்கு இதழ்களும், அந்த இதழ்களில் ஒவ்வொன்றிலும் வல வரிசையாக
மனம் ,
புத்தி,
சித்தம் ,
அஹங்காரம் ,
வ , ச ,ஷ, ஸ ,
என்ற நான்கு அக்ஷரங்களும் , நான்கு தத்துவங்களாக இடம் பெற்று உள்ளன.

இங்கிருந்து சுழுமுனை என்ற " ஒலி" மற்றும் "ஒளி" வடிவமான நாடி புறப்பட்டு முதுகுத்தண்டின் வழியே முகுளம் என்ற உறுப்பு வழியே கபாலம் அடைகிறது

ஸ்வாதிஷ்டானம் என்ற சக்கரம் மூலாதாரத்திற்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாவது சக்கரமாகும்.

சுவாசம் என்ற பிராணனின் இருப்பிடம் குண்டலினியின் பிராண வடிவில்
தன் சக்திகள் இங்கே கேந்த்ரமாக தன்னை வியாபித்துக் கொண்டிருக்கும் குறி ஸ்தானமாகும்.
இதன் உருவம் சதுரம் ஆகும்.
சதுரத்தை தன்னுள் அடக்கி வெளிவட்டமாகவும், வட்டத்தை ஒட்டியவாறு சுற்றிலும் ஆறு இதழ்களை கொண்டதாக உள்ளது.
இந்த ஆறு இதழ்களிலும் ஸ , ஹ , ம், ய, ர, ல என்ற ஆறு எழுத்துக்களும்
ஆறு தளங்களாக , ஆறு யோக நாடிகளாக மையம் கொண்டுள்ளது.
பஞ்சாக்ஷரத்தின் முதல் எழுத்தான "ந" எழுத்தின் சப்த பரிமாண எழுச்சி உடையதாகவும் , ரம் என்ற பீஜாக்ஷர அக்னி ரூபமாகவும் திகழுமிடமாகும்

'தொப்புள்' என்றும் 'நாபி' என்றும் குறிக்கப்படும் கேந்திரம் முழுவதும் பரவி நிற்பதும், முதுகுத்தண்டின் கீழிருந்து மேலாக மூன்றாவது ஆதார இணைப்புபாதையாகும்.
இதன் உருவம் வட்டமும், வட்டத்தினுள் அமைந்த மேல்நோக்கிய இரு கொம்புவடிவ பிறைச்சந்திரன் உருவத்தை கொண்டதாகும்.
வட்டத்தினுள் வெளியே தொட்டபடி பத்து தளங்கள் கொண்ட (இதழ்கள்) ஒவ்வொன்றிலும் (டட, ணத , தத, தந , பப) என்ற பத்து அக்ஷரங்களைக் கொண்டுள்ளது. இதுவே பத்து யோக நாடிகளாய் மிளிருகின்றது.

பஞ்சாக்ஷரத்தின் இரண்டாம் எழுத்தின் "ம " என்ற சப்த பரிமாண எழுச்சியின் பிறப்பிடமாகின்றது. அப்பு எனப்படும் நீர் தததுவமாகும்.
இப்பகுதி 1008நாடிகளின் பிறப்பிடமும் மூலாதானமும் ஆகும்.
நாபிகமலமென்றும், அதன் வேராக இருப்பதும் ஆகும்.
கீழ் மூன்று, மேல் மூன்று, என ஆறு ஆதாரங்களை பிரிப்பதில்
( மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் , மணிபூரகம்) இம்மூன்றும் கீழ் ஆதாரங்களாக திகழ்கிறது.

அத்துடன் அபானன் என்ற மலக்கற்று இந்த கீழ் மூன்று ஆதாரங்களையும் மையப்படுத்தி வியாபித்து நின்று கீழ்நோக்கி வெளியேறும் வாயு ஸ்தானங்கள் ஆகும்.

யோக சித்தி பெற அபானன் என்ற கீழ் நோக்கிய வாயுவை பிராணனுடன்
(மேல் நோக்கி பயணிப்பது) கலந்து மேலேற்றுகையில் , குண்டலினி பயணத்தில் மேலெழச்செய்யும் யுக்தியின் பிரதான கிரியை ஆகும்.
அடுத்ததாக இதய கமலம் என்று அழைக்கப்பெறும் மார்புபகுதி முழுதும் வியாபித்திருக்கும் அனாகதம் என்ற ஆதாரச் சக்கரம் பல முக்கியச் சிறப்பத் தன்மைகளை கொண்டதென சித்த புருஷர்கள் விவரிக்கின்றனர்.

மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் , மணிப்பூரகம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறாக இருந்தாலும் சஹஸ்ராரம் என்ற 7 வது ஆதாரமே இறுதி ஆதாரமாகும்.
ஏனைய ஆறு ஆதாரங்களுக்கும் நிலைக்களனாய் இருந்துகொண்டு பிராண ஆராதனையில் தன் இயக்கத்தை நிலை நிறுத்துகிறது.
மேல் மூன்று சஹஸ்ராரம்,ஆக்ஞை,விசுத்தி, கீழ் மூன்று மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் , மணிப்பூரகம் இவ்விரண்டிற்கும் மைய கேந்திரமாக அனாகதம் ஒளிர்கின்றது.
ஏனைய ஆதாரங்களை இயக்குவதன் மூலம் பிராண ஆதாரனை செய்திடினும் இயல்பாகவே சதா சர்வகாலமும் பிராண ஆதாரனையினை செய்து கொண்டிருப்பது அனாகதமே.
அனாகதம் என்றால் அனாதி, சதா ஓங்கார ஒலியினை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதாகும்.

ஸ்வாதிஷ்டானம் 52 அக்னி கலைகளையும் , மணிபூரகம் 52 சூரிய கலைகளைக் கொண்டதுபோல,அனாகதம் 54 சூரிய கலைகளைக்கொண்டு ஜோதி வடிவானதாகவும், இறைவன் ருத்ர ரூபியாய் இங்கே வீற்றிருத்தாலும், பஞ்சாக்ஷ்ரங்களின் நடு எழுத்தாய் விளங்கும் "சி " , நெருப்பின் பஞ்ச பூத தத்துவமாகவும், எல்லாவற்றிலும் மேலாக எப்போதும் அனாதியாய் ஓங்கார சப்தத்தையும் (உடல் முழுதும் சிரசு வரை) மின்னலின் கண் தோன்றும் இடி சப்தத்தையும் எழுப்பிக்கொண்டே இருப்பதோடு ஒவ்வொரு அணுவிலும் அதன் அதிர்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.

இந்த ஆதாரத்தை அறிந்து அதனுள் பிரவேசித்து விட்ட எந்த சாதகரும் மேலும் அடுத்தடுத்த ஆதாரங்களை அடைந்து மேம்படுவார்களேயன்றி அவர்களுக்கு கீழிறக்கமில்லை என்று ரிஷிகள் வர்ணித்துள்ளனர்.
சாதகர்கள் அனாகத கேந்திரத்திற்கு தன்னை வியாபித்துக்கொள்ளும்போது கீழாதரங்களில் தாம் பெற்ற அனைத்து அனுபவங்களையும் ஆழ்ந்துணரும் சித்த வடிவாக ஒளியாய் சூட்சம ஒலி உந்துதலால் மேல் மேல்நோக்கி பயணித்து சிவசக்தி சங்கமத்தில் உருவாகும்.

ஆராவமுதை பருகும் நிலைக்கு ஆட்படுத்தபடுவார்கள் . இதுவே அனாகத தளத்தின் சிறப்பு வாய்ந்த தலமாக இருப்பது கண்கூடும்.
ஒளி, ஒலி இரண்டின் அனைத்து பரிமாணங்களில் ஒருசேரத் திகழும் ஆதாரமும் ஆகும். வட்டத்தின் நடுவே முக்கோணமும் , வட்டத்தின் வெளியே 12 யோக நாடிகளைக் கொண்டதாகவும்,
அக்ஷர (க,க2,க3,க4, ங ,ச1,ச2, ஜ3,ஜ4, ஞ,ட1,ட2) தளங்களை உடையதாகவும் உள்ளது.
ஆகாச தத்துவிறக்கமான "விசுத்தி" என்ற கழுத்து (கண்டம்) பகுதி முழுதும் நிறைந்து நிலவும் ஆதார சக்கரமாகும்.
இதன் வடிவம் அறுகோண வடிவின் மத்தியில் 16 தளங்கள் (இதழ்கள்) கொண்ட வட்டவடிவம் கொண்டதாகும்.
பஞ்சாக்ஷரத்தின் நான்காவது. எழுத்தான "வ" காரமாய் , "ஹம்" என்ற பீஜமாகவும் திகழுகின்ற ஆதாரமாகும் .
16 தளங்களில் 51 அக்ஷரங்களில் 16 உயிரெழுத்துக்களை கொண்டும் 72 சந்திர கலை அமிர்தஸ்தலமாகும் . அமிர்தம் பரவும் இடமுமாகும்.
ஆக்ஞையினின்றும் பெருகும் பரமானந்தத்தை ஜீவர்களுக்கு விநியோகிக்கும் தலமாகும்
சதாசிவனாரும் , மனோன்மணியாய் விளங்கும் ஞானத் தாயும் , கூடி மகிழும் ஆக்ஞை புருவ மத்தி அல்லது புருவ நடு ஸ்தானமே "ஆக்ஞை" என்ற ஆறாவது தலமாகும்.
இத்தலம் ஆறு ஆதாரங்களின் கடைசி என்றாலும் இதற்கடுத்தும் 7வது ஆதாரமான சஹஸ்ராரம் என்ற ஆதாரமே இறுதி ஆதாரமாகும்.
ஆக்ஞையின் வடிவம் வட்டமும்
அதன் வெளிப்புறத்தில் வலமும் இடமமுமாக ஒட்டி இரண்டு தளங்களும் அதில் ( 'ஹ','க்ஷ') என்ற இரு அக்ஷ்ரங்களுடையதாயும் திகழ்கின்றது.

பஞ்சாக்ஷரத்தில் கடைசி அக்ஷரமான ய என்ற யகார எழுத்தையும் அதன் தத்துவமாகவும் விளங்குகிறது. 64 சந்திர கலைகளை பெற்றும் ,
மனத்தின் பால் அடைக்கலம் கொண்ட அறிவு , புத்தி, அதன் சேர்க்கையான ஆன்மாவின் தொடர்பாகவும், ஆன்மாவின் வெளிப்பாடாய் திகழ்ந்து
கன்மாவின் வடிகாலான தொழில்படும் சித்தம் என்ற உள் மன வெளி அல்லது, அகமான மண்டலமே இந்த ஆக்ஞை ஆதாரம் என சான்றோர் கூறுவார்கள்

ஓம் என்ற பீஜத்தை கொண்டதும் வெளுப்பு அல்லது நிறமற்ற மிகுந்த குளிர் ஒளி வடிவமும் ஆகும்
மூலாதாரம் முதல் ஆக்ஞை வரை ஆறு சக்கரங்கள் ஆதாரமாய்த் திகழ்கின்ற போது , மூன்று நாடிகளால் இவை ( இடகலை , பிங்கலை, சுழுமுனை)கள் இரண்டிரண்டாய் பின்னப்படுகின்றன. இரண்டு சக்கரங்கள் சேருமிடம் ஒவ்வொன்றும் ஒரு முடிச்சு (கிரந்தி) எனப்படும். மூன்று கண்டங்கள் எனவும் கூறப்படுகின்றது. ஆதாரங்கள் ஆறும் கடந்தால் அங்கிருந்து அதாவது புருவ மத்தியில் இருந்து "பிரம்ம ரந்திரம்" என்ற பகுதி வரை எட்டு பகுதிகள் உள்ளன என்று சித்தர்கள் கூறுகின்றனர். இவைகள் இந்து, ரோதினி , நாதம், நாதாந்தம் , சக்தி , வியாபினி, சுமணி, மனோன்மணி என்ற பெயர்களை உடைய தான எட்டு கலைகளும் இவைகளே.

இவ்வாறு ஆறு ஆதாரங்களுக்குப்பின் ஏழாவதாக ஆயிரம் இதழ் தாமரை என்றும் சஹஸ்ராரம் என்றும் கூறப்படும் சிரசின் உச்சி பாகமும், மனித உடலின் தலைக்கு மேல் பரவெளியோடு தொடர்புடையதும்காஸ்மிக் எனர்ஜி எனப்படும் பிரபஞ்ச சக்தியோடு நம்மை இணைக்கும் சஹஸ்ராரம் என்றும் 7வது தளமாகும். யோக வெற்றியினால் வரிசையாக ஆறு ஆதாரங்களைக் கடந்து ஏழாவது ஆதாரமான சஹஸ்ராரம் அடையும்போது மேற் சொன்ன அனைத்து சித்திகளும் பேரானந்த அனுபவமும் கிட்டுமென ரிஷிகள் கூறுகின்றனர். " வாசி" என்ற ஜீவனுக்கு ஆதாரமான உயிர்க்காற்றை இடகலை-பிங்கலை (இடம், வலமாக) ஏற்றி இறக்கி கும்பகம் மற்றும் (அகக்கும்பகம், புறக்கும்பகம்) என்பது போன்ற பல்வேறு பயிற்சிகளை முறையாகச் செய்வதே பிராணாயாமம் எனப்படும் பிராண ஆகுதி ஆகும். இதன் மூலமே கடினமான மற்றும் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதன் மூலமே பிராணனை உணர்ந்து குண்டலினி சக்தியினை கீழிருந்து மேலேற்றி சஹஸ்ராரத்தை அடைவதற்கான வழிகளின் முதன்மையானதெனக் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment