கடன் படுத்தும் பாடு
நிலக் கடன்
வீட்டுக் கடன்
கல்விக் கடன்
நன்றிக் கடன்
பிறவிக் கடன்
நோய்க் கடன்
தொழில் கடன்
வாகனக் கடன்
வங்கிகக் கடன்
நேர்த்திக் கடன்
ஏமாற்றுக் கடன்
பிள்ளைக் கடன்
கல்யாணக் கடன்
சாப்பாட்டுக் கடன்
போறுகாலக் கடன்
தவனைக் கடன்கள்
" மரம் ஏறி கைவிட்டாவன் சொத்தான்
கடன் வாங்கி கடன் கொடுத்தவன் கொட்டான் "
" கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினன்
இலங்கை வேந்தன் " என்பார்கள்.
"கடன் கொடுத்தார் கலங்கும் காலமிது "
வரவுக்கு மீறிய செலவால் கடன், பொருட்கள் வாங்குவதன் மூலம் கடன், ஆனால் ஒரு கடன் அடைபடும் முன்னரே மற்றுமொரு கடனை வாங்கி நிரந்தர கடனாளி ஆகின்றனர்கள்.
கிரடிட் கார்டு மூலம் கடன் வாங்குதல் கடன் அதிகமாகிக் கொண்டே போய்விடுவார்கள்.
90 % சதவீதம் மக்கள் கடனாலேயே வாழ்வு அமைந்துவிடுகின்றது.
இனறு் வாழ்வே கடனே என்று அனேகம்பேர் வாழ்வு அமைந்திருக்கிறது.
ஆம் இந்த கடன் மனிதர்களை பல. அவமானங்கள், பல உயிர்கள் பலி, பொருட்கள், நிலம், வீடு வாகனம், மனைவி, மக்கள், உறவு, நண்பர்கள் அனைத்தையும் இழந்து நிர்கதியாய் தவிக்க வைக்கின்றது.
வாழ்க்கை முழுவதும் கடன் கடன் யாருக்கு எளிதில் கிடைக்கும்.யாருக்கு கடன் சீக்கிரம் அடைபடும். யார் அபராதம் கட்டுவார்கள்
ஏன்? கடன்வாங்குறோம் ? என்பது அனைவரும் அறிவேம்.
ஜோதிடத்தில் கடனுக்கு என்ன கிரக நிலைகள் என்பதை ஆராய்வேம்.
லக்னத்தில் 5-ஆம் அதிபதி பாபிகள் இணைவு பார்வைவிட்டால் ஜாதகன் கடன் படுவர்.
லக்கினாதிபதி அஸ்தமனம், பகை, நீசம், பாபிகள் தொடர்பு 6,8,12 ல் அல்லது 9-ஆம் அதிபதி மாரகாதிபதியுடன் கூடினால் உலகில் உயர்பதவியில் இருந்தாலும் கடன் படுவார்கள்.
6-ஆம் அதிபதி 8-ல் பாதிக்கப்பட்டிருந்தால் நோயினால் கடன்பட்டு கடன் படுவர்கள்.
6-ஆம் அதிபதி 11-ல் இருந்தால் மீளாக்கடன் காரணக வழக்குகள் சந்திப்பார்கள்.
லக்கினாதிபதி 12-ல், 2-ல் பாவிகள், 10-ஆம் அதிபதியுடன் 6-ஆம் இணைந்தோ பார்த்தோ இருந்தால் ஜாதகர் /ஜாதகி கடன் படுவர்கள்.
லக்கினத்தில், இரண்டில் 6-ஆம் அதிபதி இருக்க. 11-ஆம் அதிபதி 6-8-12-ல் இருக்க. 2-ஆம் அதிபதிக்கு 6-ஆம் அதிபதி பலமுடன் இருந்தால் ஜாதகனுக்கு எளிதில் கடன் கிடைக்கும்.
லக்னம், லாபம், தனம் ஆகிய ஆதிபதிகளில் ஒருவர் சர ராசியில் இருந்தால் எப்போதும் வாழ்நாள் முழுவதும் கடனாளியாக வாழ்வார்கள்
6-ஆம் அதிபதி 6-ல் நிற்க அவர் திசை நற்பலன் தரும். ஆனால் 2 -ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தால் பொருள் நஷ்டமும் பெருங்கடனும் அவரது புத்தியில் ஏற்பம்.
12-ஆம் அதிபதி 2-ல் நிற்கவும், 2-ஆம் அதிபதி 6-ல் இருக்க, 9-ஆம் அதிபதி பலவீனமடைந்திருக்க பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் கடன்னாராகவே வாழ்வார்.
2-ஆம் அதிபதி நீச்சம், அஸ்தமனம் அடைந்திருந்தால் ஜாதகர் /ஜாதகி எப்போதும் கடனாளிதான்.
2-ஆம் அதிபதி பாவிகளுடன் கூடி 6-ல் இருந்தால் கடனால் கஷ்டப்படுவர்கள்.
பாவிகளுடன் கூடிய லக்கினாதிபதி 6-8-12-ல் இருந்தாலும், 6-8-12-ஆம் அதிபதிகள் தொடர்பிருந்தால் கடன்படுவர்கள்.
6-ஆம் அதிபதி 4-7-10-ல் உச்சமடையவும். 9-ஆம்
12-ல் இருந்தாலும், 8-9-ஆம் அதிபதி 12-ல் இருக்க. அவர்களை 12-ஆம் அதிபதி பார்த்தாலும் கடன் படுவர்ககள்.
6-ஆம் அதிபதி, 2-ஆம் அதிபதி கூடி 12-ல் உச்சம் அடைந்தால் தீராக்கடன் ஏற்ப்படும்.
லக்கினாதிபதி இருக்கும் நாவம்சதிபதி 6-8-12-ல் சுபர்களுடன் சுகமாய் இருந்தாலும் கடனால் கஷ்டப்படுவார்கள்.
லக்கினாதிபதி நவாம்சத்தில் 6 அல்லது 8-ஆம் அதிபதியுடன் சேர்ந்திருந்தால் கடன் ஏற்படும். இவர்களே 9-ல் பாவிகளுடன் இருந்தாலும் தந்தையால் கடன், வழக்குகள் உண்டாகும்.
குடும்பாதி பஞ்சமாதி குலவிய ஆறுஎட்டு திடமிலா விரயந்தனில் சேயென
உதித்தகாளை
அடங்கிடும் சொல்லைக்கேளாய் அரைகாசு
கையில்வையான்
கடன்கார னாவானென்று கலைமுனி அருள்
செய்தாரே
2-5-ஆம் அதிபதி இணைந்து 6-8-12-ல் பலவீனமாக இருந்தால் கையில் காசு எதுவும் இருக்காது. கடன்காரனாவார்கள்.
லக்கினம், லாபம், தனம் ஆகிய அதிபதிகள் சர ராசியில் இருந்தால் கடனாளிதான்.
பாவியுடன் லக்கினாதிபதி, இரண்டில் இருந்தால் கடன் படுவர்கள்.
4-ஆம் அதிபதி செவ்வாய் இணைந்து பலம் பெற்று, ஏழில் சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் நிலம், வீடு, வசதிகள் அமையும் ஆனால் நிலத்தின் பேரில் கடன் ஏற்ப்படும்.
குரு எட்டில், ஏழுக்குடையவர் பன்னிரண்டில் இருக்க, சந்திரனுக்கு ஆறுக்குடையவர் உச்சம் பெற்று இருந்தால் வாழ்நாள் முழுவதும் கடனாளியாவர்கள்.
ஆறுக்குடையவர் நான்கில் இருக்க, நான்காம் வீடு பகை வீடாக அமைந்தால் தாயுடன் சண்டையும், பூர்வீக சொத்துக்களை அடகு வைத்துக் கடன்படுவர்கள்
யார் அபராதம் கட்டுவார்கள் ?
12-ஆம் அதிபதி 2-ல், 11- ஆம் அதிபதி12-ல், 2-ஆம் அதிபதி நீச்சமுடன் இருந்தாலும்.
2 -ஆம் அதிபதி சூரியனுடன் இணைந்து நீச்சம் பெற்று இருந்தாலும்.
2-ல் சனி இருந்தாலும் அஷ்டமாதிபதியுடன் இருந்தாலும்.
லக்கினாதிபதி பலமற்று சூரியனுடன் கூட, 2-ஆம் அதிபதி 12-ல் நீச்சமுடன் இருந்தாலும்.
11-ஆம் அதிபதி பாவிகளுடன் கூடி 8-ல் இருந்தாலும்.
இவர்கள் அபராதம் கட்டுவார்கள் !!
கடன் தீரும் வழி !
4-5-8-12-ல் சுபர்கள் சம்பந்தம் ஏற்பட்டு இருந்தால் இவர்களின் புத்தி காலங்களில் கடன் அடைபடும்.
6-ஆம் அதிபதிக்கு குருவின் தொடர்பு பார்வையிருந்தால் கடன் அடைபடும்.
11- ஆம் அதிபதிக்கும், 6-ஆம் அதிபதிக்கும் தொடர்பிருந்தால் கடன் அடைபடும்.
நல்ல நாள், திதி, நட்சத்திரம் பார்த்த பிறகே கடன் வாங்க வேண்டும்.அவ்வாறு வாங்கினால் கடன் விரைவில் அடைபடும்.
உங்களுடைய ஜாதகத்தில் 2-6-9-11-12-ஆம் அதிபதிகளின் நிலைகளை ஆராய்ந்து நல்ல காலங்களில் கடன் பெற்றால் விரைவில் கடன் அடைபடும்.
11-ஆம் அதிபதி பலமுடன் இருந்தால் கடன் கண்டிப்பாக அடைபடும்.6-ஆம் அதிபதி திசா, புத்தி, 11-ஆம் அதிபதி புத்தி, அந்திர காலங்களில் கடன் அடைபடும்.
6-ஆம் அதிபதி பலமுடன் அமைந்து சுபர் பார்வை, இணைவு, இருபுறம் சுபர்கள் இருந்தால் 6-ஆம் திசா, புத்தியில் கடன் அடைபடும்.
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, மகம் இந்த பன்னிரண்டு நட்சதிர நாளில் பணம் கொடுத்தால் திரும்ப கிடைக்காது. வாங்கினால் திருப்பி கொடுக்க முடியாது. கொடுக்க, வாங்க இந்த நட்சத்திர நாளில் தவிர்க்கவும்.
கடன் வாங்கும் நாளில் கார்த்திகை, மூலம், புனர்பூசம், விட்டம், ஜன்ம நட்சத்திரங்களில் வரும் நாளில் கடன் வாங்கக்கூடாது.
கடன் வாங்கும் காலங்களில் சந்திரன் செவ்வாயுடனோ, சனியுடனோ இணையும் காலம் கடன் வாங்கினால் கடன் அடைபடாது.
அனுசம், அசுவினி, நட்சத்திரங்களில் சந்திரன் லக்கினத்தில் இருக்கும் நாளிலும், செவ்வாய் சனி, ஞாயிற்றுக்கிழமை நவமி, சதுர்த்தி திதிகளில் ஏதாவது அஒன்று உள்ளள நளிலும், குளிகன் உதயமாகும் நேரத்திலும், சனி பிரதோஷத்திலும், சர லக்கினத்திலும் சூரிய, சந்திர கிரகணம் விலகும் நேரங்களிலும், வாங்கியகடனை சிறு தொகையைக் கொடுத்தால் கடன் தொகை விரைவில் முழுக்கடன் அடைந்துவிடும்.
கடன் நிவர்த்தி பெற வழிபாடுகள்
கடன் தொல்லையில் சிக்கி தவிப்பவர்களுக்கு திருச்சேறை சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் சிவ பொருமான் ருண விமோசன லிங்கேஸ்வரராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
மார்க்கண்டேய மகரிஷி ஆத்மார்த்த மூர்த்தியாக உட்பிரகாரத்தில் விநாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் அமைத்து பூஜை நிறைவுற்ற போது, அவருடைய குறைகள் நிவர்த்தியாகின. பூர்வ ஜென்ம கடன்கள் அவருக்கு இருந்ததாகவும்,இந்த லிங்கத்தை வழிபட, அவருடைய பூர்வ ஜென்ம கடன்கள் நிவர்த்தியானதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
நமக்கு ஏற்பட்ட பூர்வ ஜென்ம கடன்களும், தற்சமயம் ஏற்பட்டுள்ள கடன்களும் நிவர்த்தியாகும்.
ருண விமோசன லிங்கேஸ்வரரை வழிபட்டால் நிவர்த்தியாகும்.இவருக்கு 11-திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து 11-வது திங்கட்கிழமை அபிசேகம் செய்து வழிபட, கடன் நிவர்த்தியாகும்.11-வது திங்கள் அபிசேகம் செய்த பின் 21-ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கடன் பிரச்சனைகள் நிவர்த்தியாகி சுப பலன் கிடைக்கும்.
போன் : 0435-2468431 -
செல் -9443737759, 9442637759 தொடர்பு கொண்டால் விபரங்கள் கிடைக்கும்.
திருச்சேறை, கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவில் உள்ளது. பஸ் வசதி உள்ளது.
No comments:
Post a Comment