Wednesday, 18 November 2015

சங்கு பூஜை செய்யும் முறை

சங்கு பூஜை செய்யும் முறை;-

வீட்டில் வலம்புரிச் சங்கு வைத்து வழிபட்டால் மகாலட்சுமி நம்மைத்தேடி வருவாள் என்று வேதவாக்கியம் சொல்கிறது.நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடும்.
      
வீட்டில் வாஸ்து குறை காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டுக் காலையில் தெளித்து விட்டால் குறைகள் நீங்கும்.

சங்கு பூஜை செய்யும் முறை:

48 நாள் தினமும் செய்ய விருப்பம் உடையவர்கள் காலை உடற்சுத்தம் செய்துவிட்டு வலம் புரிச் சங்கை சுத்தமான நீரில் அலம்பி சந்தனம் குங்குமம் இட்டு பிளந்தபாகம் வெளிப்பக்கமாக வைத்து மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றி பிறகுஸ்வாகதம்.........ஸ்வாகதம்ஸ்ரீ லட்சுமி குபேராய நம என்று சங்கில் குபேரனை அழைக்க வேண்டும், பிறகுஓம் நவநிதி தேவதாயை நம சகல ஆராதனை சுவர்ச்சிதம் என்று சிவப்பு மலரைப் போட வேண்டும். வலம்புரிச் சங்கின் அளவைப் பொறுத்து தாமிரத் தட்டில் பச்சை அரிசி போட்டு அதன்மேல் சங்கை குபேரன் படத்தின் முன் வைக்க வேண்டும்.
             
மூன்று முக நெய் தீபம் ஒன்று ஏற்றினால் போதும்.பிறகு துளசி,அரளி,சிவப்பு மலர்,மல்லிகை கலந்து பன்னீர் தெளித்து வைத்துக் கொண்டு சங்கைச் சுற்றி மலர் தூவ வேண்டும்.

மும்முறை குபேர காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.பிறகு 16நாமாவளி அர்ச்சனை செய்தல் வேண்டும்.
         
அர்ச்சனை முடிந்த பிறகு குபேர காயத்ரி சொன்ன பிறகு தூப தீபம் காட்டி ஓம் ஸ்ரீம் லட்சுமி சகித குபேராய நம:     மம க்ரஹே அமுதம் நித்யானந்த வாஸம் குரு குரு.. என்று ஆத்ம பிரதட்சிணம் செய்து மலர் போட வேண்டும். கற்கண்டு,பால், அவல் பாயசம் நிவேதித்து நெய் தீபத்தை கற்பூர ஆரத்திக்குப பதிலாக்க் காட்ட வேண்டும்.இறுதியில் ஒரு பெண்ணுக்கு தாம்பூலம் மஞ்சள் தரவேண்டும்.

               எளிமையான இந்த பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்தால் குடும்ப வருமானம் செழிக்கும்.

               6 வெள்ளிக்கிழமைகளில் இந்த பூஜை செய்தால் கடன் தீர வழி ஏற்படும்.

                வியாழக்கிழமை மாலை 5 முதல்7.30 மணி வரை குபேர காலத்தில் செய்து 9 ம் வயாழன்யக்ஞத்துடன் முடிக்க பொருள் சேர வழி உண்டாகும். 8 பவுர்ணமிகள் குபேர அர்ச்சனையுடன் சங்கு பூஜை செய்து வர செல்வம் சேரும்.

No comments:

Post a Comment