Wednesday, 18 November 2015

அனுமன் இமயமலையில் தேடிய சஞ்சீவினி மூலிகை

அனுமன் இமயமலையில் தேடிய சஞ்சீவினி மூலிகை,

விஞ்ஞானிகள் கண்டுபிடி ப்பு! – ஆச்ச‍ரியத் தகவல்

ரோடியோலா எனும் அதிசய மூலிகை.
இராமாயணத்தில் போரில் உயிரிழந்த‌ லட் சுமணனை மீண்டும் உயிர் பெறச் செய்ய அனுமன் சஞ்சீவி எனும் மூலிகைகள் நிறைந்த மலையைத் தூக்கிச் சென்றதாக ஒரு பகுதி வரும்.
கிட்டத்தட்ட அந்த சஞ்சீவினியைப் போன் ற அபூர் வமான மூலிகை ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் இமய மலையில் கண்டு பிடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண கா லத்தில், அனுமனால் தேடப்பட்ட
சஞ்சீவினி மூலிகையா க இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஆனால் அது புராணத்தி ல் சொல்லப்படும் ‘சஞ்சீ வினி’யேதானா என்பது இன்ன மும் முடிவாக வில்லை. இந்த அபூர்வ மூலிகை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இமயமலை போன்ற உயர மான சிகரங்களில் வாழத் தேவையான சக்தியையும் தரும் என்று சொல்லப்படுகிறது.
இமயமலையில் உயிர் வாழ்வ தற்கு மிகவும் சிரமப்படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாது காக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகை யை அறிஞர்கள் கண்டறிந்து ள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகு தியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்தமூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றா லும், லடாக் பகுதிவாசிகள் இத ன் இலைகளை உணவுப் பொரு ளாகப்பயன்படுத்தி வருகின்றன ர்.
லே பகுதியில் உள்ள மலைப் பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்க ளை ஆராய்ந்து வரும் நிலையில், இதனை ‘சஞ்சீவினி’ மூலிகை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேலும், இந்த மூலிகையால் நம்மை அணுக்கதிர்களில் இருந்தும் காத்துக்கொள்ள லாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து இம யத்தின் அருகில் உள்ள லே பகுதியில் இருக்கும் ‘டிஃபெ ன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹை ஆல்டிட்யூட் ரிசர்ச் ’ (திஹர்) எனும் அமைப்பின் இயக்குநர் ஆர்.பி.ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:

“இந்த மூலிகைக்குப் பெயர் ‘ரோடியோலா’ என்பதாகும். இது லடாக்பகுதியில் ‘சோலோ’ என்று அழைக்கப்படுகி றது. அப்பகுதி மக்கள் இதைத் தங்களின் உணவுகளில் பயன்படுத்துகிறார்கள். இந்த மூலிகை சுமார் 5,400 மீட்டர் உயரம் உள்ள சியாசென் பனிமலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு மிகவும் பயன்படும்.

இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாது காக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகிய வற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலி ல் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள் ளது என்று கூறுகின்றனர்.

இதனை உண்பதன் மூலம் ராணுவ வீரர்களால் பனிச் சிகரங்களில் பல நாட்கள் தங்களின் சக்தியை இழந்துவிடாமல் தாக்குப் பிடிக்க முடியும். இந்த மூலிகை அமெரிக்கா மற்றும் சீனாவிலும் காணப்படுகிற து.
இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணு வ வீரர்களுக்கு இந்த மூலிகை உத வியாக இருக்கும், மேலும், ரோடி யோலா மூலிகை குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற் றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

சீனப் பாரம்பரிய மருத்து வத்தில் இது மலை சார்ந்த நோய்களைத் தீர்ப்பதற்காகவும், மங்கோலியாவி ல் காசநோய் மற்றும் புற்றுநோயைக் குணப்படுத் துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலி கையை திஹர் ஆய்வு மையத்தில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப் போ கிறோம். அப்படி வளர்ப்பதன் மூலம் இந்த மூலிகையின் எண்ணிக் கையையும் அதிகரிக்க முடியும்”. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment