குருஷ்ஷேத்திரப் போரில் தர்மர் வணங்கிய "பகலாமுகி"
சத்யுகத்தில் ஒருமுறை மகா பிரளையம் ஏற்பட்டு பூலோகமே அழிந்து விடும் நிலைக்கு வந்தது. இதனால் கவலை கொண்ட விஷ்ணு சௌராஷ்டிரத்தில் ஒரு இடத்தில் சென்று தனிமையில் அமர்ந்தார்.
அப்போது ஆகாய மார்கமாக வந்த ஒரு நட்சத்திர ஒளியும் அவருடைய நாபியில் இருந்து வெளிவந்த ஜோதியும், சேர்ந்து ஒரு தேவி தோன்றினால் .அந்த மகா பிரளயத்தின் சீற்றத்தை அடக்கி உலகை அழிவில் இருந்து காப்பாற்ற தோன்றிய அவளே பகலாமுகி தேவி.
முற்காலத்தில் நாடோடிகளும் மலை வாழ் மக்களும் நிறைந்த மக்கள் இருந்த இடங்களில் தந்திர மந்திர சக்தியை உள்ளடக்கிய ஆலயங்கள் பல இருந்தன. எந்தவித பகட்டும் இல்லாமல் ஒரு கிராம தேவதையின் பீடம் போன்ற அமைப்பை கொண்டு இருந்த இக்கோவில்களில் அக்கால மன்னர்கள் தாங்கள் போரில் வெற்றி பெற வேண்டி வணங்கி பூஜைகளை செய்து வந்தனர்.
அவ்வாறாக மந்திர தந்திர சக்திகளை பெரும் அளவில் நம்பி அத்தகைய கோவில்கள் பலவற்றை அவர் ஆண்டு வந்த மத்யப்ரதேசதில் நிறுவியதாகக் கருதப்படும் மன்னன் விக்கிரமாதித்தன் தனால் நிருவப்பட்டதாகக் கருதப்படுவதே இந்த பகலாமுகி தேவிக்கு அமைக்கப்பட்டுள்ள ஆலயம்.இவ்வாலயம் உஜ்ஜயினியில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள நல்கேடா என்ற சிற்றூரில் நர்மதை நதியின் கரையயில் உள்ளது.இந்த ஆலயத்தில் உள்ள தேவியின் சிலை சுயம்பு வடிவானதாகவும், 2500 வருடங்கள் பழமையானதாகவும் அந்த ஆலயத்தைப் பற்றி சிறு வரலாறு அங்குள்ள ஒரு கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது. உஜ்ஜயினி யை தவிர மத்தியப் பிரதேசத்தின் ததியா எனும் கிராமத்திலும், ஹிமாச்சலப் பிரதேசத்திலும் பகலாமுகிக்கு ஆலயங்கள் உள்ளதாக குறிப்புகள் உள்ளது.
சென்னையிலும் அவளுக்கு ஒரு ஆலயம் உள்ளதான செய்தியும் உள்ளது. 1815 ஆம் ஆண்டில் ஆலயத்தில் உள்ள தேவியின் பிராகாரத்தைச் சுற்றி பதினாறு தூண்கள் இருப்பதாக கல்வெட்டு செய்தி கூறுகின்றது. அந்த பதினான்கு தூண்களும் அந்த ஆலயத்தின் தேவியைக் காத்து நிற்கும் பூத கணங்களாக இருந்திருக்கலாம் என்றும், அல்லது ஒவ்வொரு தூணிலும் பகலாமுகி தேவியின் மந்திர சக்தியை ஆவாஹனம் செய்து வைக்கப்பட்டு அந்த ஆலயத்தின் சக்தியை அதிகரித்து இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
புராணச் செய்திகளின் அடிப்படையில் மகாபாரதப் போரின் பொழுது குருஷ்ஷேத்திரத்தில் நடைபெற்ற யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தர்மர் பகலாமுகி தேவியை இந்த இடத்தில் வந்து வழிபட்டார் என்ற ஒரு செய்தியை இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
தேவியின் ஸ்வரூபம்:
ஒரே கல்லில் மூன்று முகங்களைக் கொண்ட தேவிக்கு ஒரு முகத்தில் மூன்று கண்கள் உள்ளன. ஆகவே மூம்மூர்த்திகளை உள்ளடக்கிய
சிவபெருமானின் அவதாரமே அந்த சிலை என்றும் அர்தநாரீஸ்வரரைக் குறிக்கும் வகையிலேயே அச்சிலை உள்ளது என்றும் கூறுவார்.
மஞ்சள் நிறத்தில் காட்சி தரும் பகலா தேவியின் மேனி பொன்னிரமானது. தங்க நிறத்திலான சிம்மாசனத்தில் அமர்ந்த அவளே மந்திர தந்திர சக்திகளின் தெய்வம் ஆவாள்.
தேவியின் மந்திரம் :
ஓம் ஹலீம் பகலாமுகி
ஆனால் ஒரு நிபந்தனை.இந்த மந்திர உச்சாடனைகள் தகுந்த முறையுடன் அதற்கான விதிகளுடன் உச்சரிக்காவிடில் ஆராதிப்பவரையே
அழித்துவிடும் வல்லமை வாய்ந்ததாகும்.அவளுடைய மந்திர தந்திர சக்தியை நிரூபிக்கும் பொருட்டு ஒரு கதை உள்ளது.அதாவது மதன்
என்றொரு அரக்கன் மிகுந்த சக்திகளை பெற்றவன்.குறிப்பாக வாக்கு சித்தியை பெற்றவன் ஆதலால் எவர் எந்த மந்திரங்களை ஓதினாலும் அது நடைபெறாமல் போகுமாறு தன்னுடைய வாக்கு சித்தியால் அதை தடுத்துக்கொண்டு இருந்தான்.தேவர்களின் மந்திரங்களும் பலிக்காமல் போயின. எனவே பத்து மந்திர தந்திர சக்திகளைத் தரும் தேவிகளான தச மஹா வித்யா தேவிகளில் ஒருவளான பகலாமுகியிடம் சென்று அனைவரும் முறையிட்டனர்.
அன்னையும் அந்த அசுரனுடன் போரிட்டு அவனுடைய வாக்கு சக்தியை அழிக்கும் பொருட்டு அவன் நாக்கை இழுத்து அறுக்க முற்பட்டபோது அந்த அசுரன் பகலாமுகியை மனதார வேண்டினான். இதனால் மனமிரங்கிய தேவி அவன் இறக்கும் முன் அவனுடைய இறுதி ஆசையை நிறைவேற்றுவதாக உறுதி கொடுத்தாள்.அந்த அசுரன் வேண்டிக்கொண்டபடி அவனை வதம் செய்யும் காட்சியுடன் இருக்கும் தன்னை தனது பக்தர்கள் அந்த கோலத்திலேயே வழிபட வேண்டும் என்று கூறி அவனுக்கும் முக்தியும் கொடுத்தாளாம்.
தேவியின் மகிமை :
உண்மையான நம்பிக்கையுடன் அவளை துதிப்பத்தின் மூலம் எதிரிகளின் செயல்கள் அனைத்தும் அடங்கி விடும், தடைகள் விலகிவிடும் ,எடுத்த காரியம் வெற்றி பெரும்,பில்லி சூனியம் போன்ற ஏவலை செய்பவர்களின் வாக்கையும் சிந்தையும் அடியுடன் சிதைக்கசெய்யும்
வல்லமை வாய்ந்தவள் இந்த பகலாமுனி தேவி.
No comments:
Post a Comment