ஆதி கணபதி மந்த்ரம்.
கணபதியின் பல மந்திரங்களை பார்த்திருக்கிறோம்.
இது மிக வலிமையான மந்திரம். சித்தர்களின் வழி நமக்கு அளிக்கப்பட்ட பெருஞ்செல்வம்.
எந்த மந்திரமும் ஸித்தியாவது ஒருவரின் ஜாதகத்தின் 1, 5 மற்றும் 9 ஆம் இடங்களை பொறுத்து அமையும்.சிலருக்கு 100 முறை சொல்ல ஸித்தியாகும். சிலருக்கு கோடி முறை சொல்ல வேண்டியிருக்கும்.
உங்களுடைய இஷ்ட சித்தரை நினைத்து இதை செய்யலாம்.
ஒங்க் றீங்க் அங்க் உங்க் சிங்க்
க(3)ண தே(3)வாய நமஹ:
ஸர்வ து(3)ரித பூ(4)த வாதைகளும் நஸி மஸி
ஒரு தாம்பளம் அல்லது பெரிய வாழை இலையில் கணபதியின் பிரதிமையை ஸ்தாபிக்கவும். எளிய ஷோடச நாம் அர்ச்சனை செய்து பூஜிக்கவும்.
இந்த மந்திரத்தை குறைந்தது 7 1/2 நாழிகைகள் ஜபித்து ஒவ்வொரு ஆவர்த்தியிலும் திரு நீறை எடுத்து கணபதியின் பிரதிமை மீது தூவி வழிபட வேண்டும்.எவ்வலவு முறை சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லி விபூதியை மந்திரித்து தூவுங்கள்.
நடுவில் பேச , சாப்பிட எழுந்திருக்க கூடாது. முழுத்தனிமையில் செய்ய வேண்டும் உங்கள் பூஜை அறையில். ஒரு நாள் முழுக்க செய்வது பரம விசேஷம்.
பின்னர் பூஜை அறையை மூடி விடுங்கள். மறு நாள் புனர் பூஜை செய்து இந்த சேகரித்த விபூதியை பயன் படுத்துங்கள்.
பல ப்ரச்னைகள் நீங்கி விடும்.ப்ராரப்த கர்மத்தை கூட அகற்றும் சக்தி உள்ளது என்பது ஆன்றோர் வாக்கு
இதற்கான யந்திரம் 5 முனைகள் கொண்ட நட்சத்ரம். மஞ்சளில் பிள்ளையாரை செய்து கூட வழிபடலாம். முன்னதாக இந்த நட்சத்ரத்தை கூட எழுதி(விபூதியில் அல்லது மஞ்சள் தூளில்) அதன் மீது வினாயகர் பிரதிமையை வைத்து ஜபத்தை செய்யலாம்.
No comments:
Post a Comment