Tuesday, 17 November 2015

சித்தர்கள் பெற்றுதந்த(வாங்கிய) வரம் ரசமணி:

சித்தர்கள் பெற்றுதந்த(வாங்கிய) வரம் ரசமணி:

பாதரசத்தை மணியாக கட்டுவதே ரசமணி என்று அழைக்கப்படுகிறது (நீர்மமாக உள்ள உலோகத்தை திண்மமாக மாற்றப்படுகிறது).தற்க்கால அறிவியலில் மற்ற உலோக கலப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை.ஒன்று பாதரசத்தை -39C குளிர்ச்சி படுத்தினால் திண்மமாகும்.வெப்பத்தை அதிகப்படுத்தினால் பழைய நிலையான நீர்மத்திக்கே வந்துவிடும்.மற்ற உலோகத்தோடு கலந்து மணியாக செய்யும் போது,ஆய்வுகூட சோதனையில் உண்மைத்தன்மை தெரிந்துவிடும்.

நம்முடைய சித்தர்கள் தாமிர சத்தும் மற்றும் உப்பு சத்தும் கொண்ட மூலிகை சாறுகள் கொண்டு ரசத்தை மணியாக கட்டினார்கள்.இந்த ரசமணியை       ஆய்வுகூட சோதனைக்கு உட்படுத்தினால் 100% உண்மைத்தன்மை கிடைக்கும்.இப்படி கிடைத்த மணியை உடம்பில் படும்படி அணிதால் எண்ணில் அடங்காத நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

ஏறக்குறைய நம்முடை சித்தர்கள் அனைவருமே பாதரசத்தின் சிறப்பையும்,இதன் பல்வேறு பெயர்களையும் ,ரசத்தை தூய்மை படுத்தும் முறைகளையும் (தோஷம் & சட்டை போன்றவற்றை நீக்குவது) அதை மணியாக எப்படி செய்வது,செய்த மணிக்கு எவ்வாறு குறிப்பிட்ட சக்திகளை அளிப்பது,இதை கொண்டு எவ்வாறு தாழ்ந்த உலோகங்களை(இரும்பு ,செம்பு,ஈயம்,வெள்ளி போன்றவற்றை ) தங்கமக்குவது ,இதனை கொண்டு உடம்பை எவ்வாறு காய கல்பமாக மாற்றுவது,மேலும் தீராத நோய்களை தீர்ப்பது என்பதை சில சித்தர்கள் வெளிப்படியாகவும் ,சில சித்தர்கள் உவமையோடும் பல்வேறு பாடல்களில் பாடிவைத்து உள்ளனர்,

பாதரசத்தின் சிறப்பு பெயர்கள்:          
                 காரம்,சூதம்,புண்ணியம்,கற்பம்,,சாமம்,சத்து,சூரியபகை,சாதி,சூத்திரன்,துள்ளி,ஈசன், வீரியம்,சூழ்ச்சி,நீர்,விண்நீர்,விண்மருந்து,இரசம்,சுக்கிலம்,போகம்,ஞானம்,சுயம்பு,வண்டு,நாகம்,இக்கியம்,விஜயம்,வேத மூல செந்தூரம்,பக்கிரம்,பதினெண்பந்தி ,பாரதம்,கணல்,பூதம்,இன்னும் பலவாறு அழைக்கப்படுகிறது.

பாதரசத்தின் வகைகள்:

ஆறியே சூதமஃ தை ந்துவித் மாகும்                                                   அதன் விவர மேதென்னி லறையக் கேளு                                                 ஊறியே ரசமென்றும் இரசேந் திரமென்றும்                                                                                                                உற்றபா ரதமென்றுஞ் சூதமென்றும்                                                             மீறியே மிசர கமென் றைந் மாச்சு  
                                                        -போகர் 7000

1.இரசம் :சுத்தமானது,குற்றம்மில்லாதது ,லேசான சிகப்புநிறமுடையது.

2.இரசேந்திரன்: சுத்தமானது,குற்றம்மில்லாதது,கருநிறமுடையது.

3.பாரதம்:வெள்ளி நிறமுடையது ,குற்றமுடையது.சுத்தி செய்ய வேண்டும்

4.சூதம் : குற்றமுடையது,தோஷம்முடையது சுத்தி செய்ய வேண்டும்  ,லேசான வெளிர்மஞ்சள் நிறமுடையது.

5.மிரசம்:பாதரசத்தில் கடைசி தரம்,ஏழு வித சட்டையையும் ,தோஷத்தையிம் நீக்கி சுத்தி செய்ய வேண்டும்.

ரசத்தை மணியாக கட்டும் முறை:

விந்துவென்ற சூதத்தில் மந்திரமோ சித்தி                            மேகத்திலோடுகின்ற குளிகை சித்தி                                                  அந்து மென்ற யோகமுதல் ஞான சித்தி                                         அப்பனே காயசித்தி லோகசித்தி                                            சாஸ்திரத்தில் சொல்லாத கருவோசித்தி                                                விந்து கொண்ட வாதத்திலட்டாங்க சித்தி                                           பாரப்பா சூதத்தைக் கட்டினோர்க்கே
                                           - சட்டமுனி வாத காவியம் 1000

விளக்கம்:என்று சொல்லும் சூதத்தினால் மந்திரம், குளிகை, ஞானம், யோகம், காயம், அட்டாங்க சித்திகள் எல்லாம் இந்த சூதமாகிய விந்தினைக் கட்டினவர்க்கு என்று கூறுகிறார்.

பாதரசத்தை மணியாக  ஏறகுறைய எல்லா சித்தர்களுமே விராலி என்ற மூலிகையின் இலையை கூறி உள்ளனர் ,இந்த இலை சாறு வராத வகையை சார்ந்தது ஆகும் ,மேலும் இதில் இருந்து சாறு எடுக்க துருசு சுண்ணத்தை ,இந்த மூலிகை இலை மீது போட்டு பிழியும் போது நிறைய சாறு வரும்.இதனை கொண்டு ரசத்தை கட்டலாம் .

இதுபோல கருவஊமத்தை,ஊமத்தை,கல்தாமரை,குப்பைமேனி,பிரண்டை,கொரக்கர்மமூலி,நத்தைசூரி,அழுகண்ணி,தொழுகண்ணி,நாயுருவி இன்னும் சில மூலிகைகள் உள்ளன மேலும்,மலைகளில் உள்ள ரோமவிருச்சம் ,கணை எருமை விருச்சம்,ஜோதிவிருச்சம் போன்ற பல மூலிகைகள் ரசத்தை கட்டலாம்,

இதே போன்று உயிர்அற்ற மூலிகையின் சாறுகளை கொண்டு கட்டப்படும் ரசமணி மற்றும் ரசமணிக்கு சக்திகள் ஏற்றுவதால் எந்த ஒருபயனும் இல்லை.மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி செய்து அதன் உயிரும்,தெய்விக சக்தியும் கொண்டே செய்யும் ரசமணியே 100% பலன் தரும் என்பதுதான் உண்மை.   

இவ்வாறு கட்டிய மணியை புடம் போட்டு எடுத்து ,நூலில் கோர்த்து உடம்பில் படும்படி அணிந்து கொள்ளலாம்.

இப்படி அணியும் மணியானது,

1.நம் உடம்பில் உள்ள வாத,பித்த,கபத்தை ஒழுங்குபடுத்தி,உடலை சீராக வைக்க உதவும்

2.உடல் எப்பொழுதும் களைப்பு இன்றி சுறுசுறுப்பாக இருக்கும் .

3.இரத்தைத்தை சுத்திகரித்து ,இரத்த ஓட்டத்தை சீராக்கும் ,இதன் மூலம் இரத்த அழுத்தம் என்ற பேச்சிக்கெ இடம் இல்லை.

4.ஞாபக சக்தியை தூண்டி,சிந்தனையை ஒருநிலைபடுத்துகிறது,

5.விந்துவை கட்டிபடுதும் ,இதன்னால் உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபடலாம்.

6.சப்த தாதூக்களையும் சரிவர இயங்க செய்யும்,இதன் மூலம் மனிதனுக்கு நோய் அணுக்காது ,உடலில் நோய் இருந்தாலும் இதை ரசமணி உண்டுவிடும்.

7.உடல் வெப்பநிலையை சமநிலைபடுத்தும்,தோற்ற பொழிவை கொடுக்கும் ,வயதனாலும் இளமைதன்மையை அப்படியே வைத்து இருக்கும்.

8.எளிமையாக சொல்வது என்றால் எந்த நோயையும் வரவிடாது,இருக்கும் நோயையும் தங்கவிடாது.

இது முதல்படிதான்,மேலும் இவ்வாறு தயாரிக்கப்பட ரசமணிக்கு (சக்தி தருவது) சாரணை என்று சொல்லப்படும் மூலிகை சறுக்களை ஊட்டுவதன் மூலம் எண்ணில் அடங்கா சக்திகளை பெறலாம்,
அதாவது சித்தர்கள் வானில் பறந்தார்கள் ,நீரில் நடந்தார்கள் ,கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள்,நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்தில் சென்று வந்தார்கள்,தாழ்ந்த உலோகத்தை தங்கமாக்கினார்கள் ,தீராத நோய்களை தீர்த்தார்கள் மேலும் அஷ்டமா சித்துக்களை பெற்றார்கள்,யோகத்தில் முழுமையடைந்தர்கள் என்றால் இதற்கு இரசமணியின் பங்கும் மகத்தானது என்பதில் மாற்று கருத்து இல்லை (ஆதாரம் போகர் 700) ,இதற்க்கு இவர்கள் ரசத்தை கட்டியவிதம் புடம் போட்ட முறை கண்டிப்பாக வேறுபாடும்.

கல்லான காயசித்தி கற்பமொடுரசவாதம்                                      அஞ்சான குளிகை கல்லான கெளனமாங்குளிகையோடு                             கனமான சர்வநோய் எல்லாம் மைந்தா                                         சொல்லான சூதத்தை விட்டால் வேறு                                     சொல்லுக்கும் வல்லவரார் சொல்லக்கேளு                                சொல்லவே சித்தர்கள் தான் பதிநென்பேரும்                                       சிவவிந்தை கட்டியல்லோ திறமானாரே
                                                        - போகர் 700

விளக்கம்:காயசித்திக்கான கற்பம், தங்க்ம்செய்வதர்க்கான இரசவாத முறைக்கும் கெளனமார்க்கத்தில் செல்வதற்கான மணி உடலில் தோன்றும் நோய்கள் எல்லாம் தீர வென்றால் சூதத்தை விட்டால் வேறு இல்லை இதற்கு மாற்றுக் கூற வல்லார்கள் யார் உள்ளார் என்று கூறி அடுத்துக் கூறுகிறார் 18- சித்தர்களும் சிவவிந்தைக் கட்டியல்லோ சித்தி பெற்றனர் என்று கூறுகிறார். மேற்கண்ட சூதத்திற்கு சிவம் என்ற பெயரும் உள்ளதால் சிவன் விந்து என்றும் அதைக் கட்டி திறம் பெற்றனர் என்றும் பொருள் படுகிறது.

மேலும் சித்தர்கள் சாதாரண மனிதர்களுக்கு உண்டாக்கும் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ரசமணி மற்றும் அதற்க்கு சக்தி ஏற்றும் முறைகளை கூறி உள்ளனர்

        இவ்வகை மணியின் மூலம் அடையும் பயன்கள்

கண்டு கொள்ளு நினைத்த தெல்லாம் கைகொடுக்கும்                        கதியாகும் விதியாகும் சித்தியாகும்                                     பண்டுமுன்னே இருந்த தெல்லாம் பாகமாகும்                               தொண்டுபடும் சகலமும்தான் பாரிலோர்க்கு                                தொல்லுலகில் விந்திறுகும் தொன்மைபாரு                                 உண்மேல் ஸ்திரிகளுந்தான் வசியமாகும்                                  உற்றுனர்ந்து பார்த்தாக்கால் சித்தியாமே
                                              - யாகோப்பு சுண்ணம் - 300

விளக்கம்: நினைத்த தெல்லாம் சித்தியாகும் இதுவே விதியாகும் முன்பு தெரியாதது எல்லாம் தெரியும் சகலமும் சித்தியாகும் இதனால் சுக்கிலாமானது இறுகும் இதனால் பெண்கள் வசியப்படுவர் என்று கூறியவர் உற்று சிந்தையில் உணர்ந்து பார்த்தல் எல்லாம் சித்தியாமே என்று சொல்லுகிறார்

மேலும் கீழ்கண்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் ரசமணியை கொண்டே சரிசெய்யலாம்: 

1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும். 

3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும்.  செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.

4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.

5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..

6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்.

7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.             
        
8.திருமண தடையை நீக்கும்.

9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்

10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.

11.ரசமணி அணிந்தால் காரியசித்தி ,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.

12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.

13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற ஆற்றல்களை அள்ளித்தரும்.
மேலே கூறிய தகவல்கள் அனைத்தும் சித்தர்கள் பாடலில் இருந்து (போகர் 7000,700 மற்றும் பிற நூல்கள்) எடுக்கப்பட்டது ,மேலும் அனுபவம் வாய்ந்த சித்த வைத்தியர்கள்,தற்போது ரசமணி உபயோகப்படுத்தும் நண்பர்கள் ,ரசமணி செய்வதில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் கூறிய தகவல்களில் இருந்து அரை சதவிதம் அதிலும் குறைந்த அளவு மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டு உள்ளது.காரணம் தக்க குரு மூலம் சரியான வழியில் செய்யவும்,நல்ல எண்ணங்களும் வேண்டும் குறிப்பாக குரு அருளும் திரு அருளும் இல்லாமல் ரசமணியை செய்யவோ உபயோகிக்கவோ முடியாது.

.உங்களுக்கு உண்மையாக என்னென்ன தேவையோ அதை தெரிவித்து சரியான உண்மையான ரசமணியை வாங்கி பயன் அடையுங்கள்.

உண்மையான ரசமணியை கண்டறியும் சோதனைகள்:

1.இரும்பு சட்டியில் இட்டு உருக்க உருகிவிடும் பின்பு பழையபடி காட்டிகிவிடும்.

2.கீழே போட்டால் உடையாது ,

3.உள்ளங்கையில் ரசமணியை வைத்து நடுவிரலால் மணியை தொட கரண்ட் ஷாக் போல அடிக்கும்(வாத,பித்த,கப நாடியை கட்டுக்குள் கொண்டு வரும் )        

            “விதியாளி காண்வான் பாரு”
        என்ற சித்தர்களின் கூற்றுப்படி விதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரசமணி வந்து அமையும் மேலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.

2 comments: