நரகாசுரன்
இராவணனை வீழ்த்தி அயோத்திக்கு ராமர், சீதையுடன் திரும்பிய நாளாகவும் தீபாவளி குறித்து மற்றொரு புராணக் கதை கூறப்படுகிறது.
அமாவாசை நாளில் ராமர் அயோத்திக்கு வருவதை அறிந்த மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வரவேற்றதாலேயே தீப ஒளித் திருநாளாகக் கொண்டாடப்படுவதாக அந்தக் கதை தெரிவிக்கிறது.
இதற்கு வால்மீகி ராமாயணத்தில் குறிப்புக்கள் உண்டு என்று சொல்கிறது ஒரு தளம்.
இந்து தொன்மவியலின் படி திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் ஆவார். இவர் தன்னுடைய பெற்றோர்களால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை கொன்றதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.
பாரதப்போரில் பகதத்தன் என்ற வீரன் தன்னுடைய சுப்ர தீபம் என்ற யானையில் அமர்ந்து பெரு சேதத்தை ஏற்படுத்தினான்.பன்னிரண்டாம் நாள் யுத்தம் என்று நினைவு.அவனுக்காகத்தான் முதலில் நான் பாரதப்பதிவையே செய்தேன்! பகதத்தன் இந்த நரகாசுரனுக்கு பேரன்.
பகதத்தன் ஆதிவராக மூர்த்திக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவனான நரகாசுரனின் மகனாகக் கூறப்படுகின்றான். இந்திரனுடன் அரக்கர்கள் யுத்தத்தில் ஈடுபட்ட போது அவர்களைத் தோற்கடித்து இந்திரனுக்கு வெற்றியைத் தந்து அவனிடத்தில் நட்புரிமை பெற்றிருந்தான்.
இவனது நகரம் பிரக்ஜோதிஷபுரம் - கிழக்குத் தாரகை நகரம் - இன்றைய (அசாம்) குவஹாத்தி நகரத்தின் பழைய உருவம்.
மூப்பால் அவனது நெற்றியின் மடிப்புகள் கீழே தொங்கிக்கொண்டிருந்தன. தன் கண்களை மறைக்காமல் இருக்க அவற்றைத் தூக்கித் துணியால் கட்டிக்கொண்டு யுத்தத்தில் இறங்கிய பகதத்தன், குருசேத்திரப் போரில் துரியோதனன் படைக்கு ஆதரவாய் விளங்கியவன்.
"தார் ஆர் ஓடைத் திலக நுதல் சயிலம் பதினாயிரம் சூழ வாராநின்ற மத கயத்தின் வன் போர் வலியும், மன வலியும், சேரார் வணங்கும் பகதத்தன் திண் தோள் வலியும், சிலை வலியும், பாராநின்ற கடோற்கசன் தன் படையின் தளர்வும் பார்த்தானே." நான்காம் நாள் போர்ச் சுருக்கம்.
அவனது யானை சுப்ரதீபம் வீரத்தில் அவனுக்கு இணையானது. பாண்டவப் படைகளை ஏறி மிதித்துக் கூழாக்கியது. பகதத்தன் விடுவித்த சக்தி ஆயுதத்தைக் கண்ணன் தன் மார்பில் ஏற்றதாலேயே அர்ச்சுனன் உயிர் பிழைத்தான். கண்ணனும் அர்ச்சுனனும் தங்கள் திறமைகள் அத்தனையும் பயன் படுத்தித்தான் அவனைக் கொல்ல முடிந்தது.[1].
நரகாசுரனின் மரணத்தினை தேவர்கள் கொண்டாடியது போல மக்களும் கொண்டாட வேண்டும் என்று சத்யபாமா கிருஷ்ணரிடம் வரம் வாங்கியதால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. [1]
விஷ்ணு அவதாரமான கிருஷ்ணர், கொடிய நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் நாளே தீபாவளியாம்.
பிரக்யோதிஷ்பூர் என்ற பகுதியின் மன்னனாக இருந்த நரகாசுரன், பொதுமக்களுக்கும், தேவர்களுக்கும் எண்ணற்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.
பூதேவியின் மகனான நரகாசுரன், பிரம்மாவை வேண்டி கடும் தவம் இருந்து, தனது தாயைத் தவிர வேறு யார் கையாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றவன். கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான்.
நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், தேவர்களும், கடவுள்களும் கிருஷ்ணரைச் சந்தித்து முறையிட்டனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
நரகாசுரன் பானாசுரனுடன் இணைந்து கெட்டவனாகி விட்டான். பலத்திலும் புத்தியிலும் நிகரற்று விளங்கினான். பூமியில் இருந்த அனைத்து ராஜ்யங்களையும் பிடித்து விட்டான். பின்னர் ஸ்வர்க லோகம் சென்று சண்டையிட்டான். இந்திரனும் தோற்றொடினான்.
இப்படியாக வானுக்கும் பூமிக்கும் அதிபதியாகினான் நரகசுரன்.
தேவர்கள் அனைவரும் மஹா விஷ்னுவிடம் முறையிட அவரும் தாம் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் பொழுது அவனை கொல்வதாக வாக்களித்தார்.அதுவும் பூ தேவியின் மூலம். அவள் சத்ய பாமாவாக அவதாரம் செய்வாள்.
இங்கே காலம் இடிக்கிற கணக்கும் உண்டு. ராமாவதாரத்தில் இந்த அரக்கனை பற்றி குறிப்புக்கள் இல்லை.
கிருஷ்ண அவதாரத்தில் தான் சண்டை ஆகிறது.
அதிதியின் காதணிகளை நரகாசுரன் கவர்ந்து செல்கிறான். அதை கெட்ட சத்ய பாமா கிருஷ்ணரிடம் அவனை அழிக்க சொல்கிறாள்.
தேவர்கள் அனைவரும் மஹா விஷ்னுவிடம் முறையிட அவரும் தாம் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் பொழுது அவனை கொல்வதாக வாக்களித்தார்.அதுவும் பூ தேவியின் மூலம். அவள் சத்ய பாமாவாக அவதாரம் செய்வாள்.
இங்கே காலம் இடிக்கிற கணக்கும் உண்டு. ராமாவதாரத்தில் இந்த அரக்கனை பற்றி குறிப்புக்கள் இல்லை.
கிருஷ்ண அவதாரத்தில் தான் சண்டை ஆகிறது.
அதிதியின் காதணிகளை நரகாசுரன் கவர்ந்து செல்கிறான். அதை கெட்ட சத்ய பாமா கிருஷ்ணரிடம் அவனை அழிக்க சொல்கிறாள்.
அவனிடம் 11 அக்ஷௌரணி சேனை இருந்தது. முரா என்ற போர் தலைவனும் இருந்தான். கிருஷ்ணருக்கு முராரி என்ற பெயர், முரா வை கொன்றதால் ஏற்பட்டது. மேலும் அந்த 11 அக்ஷௌரணி சேனையையும் அழித்து நரகாசுரனையும் அழித்தார்.
அவன் முன்னர் கவர்ந்து வந்திருந்த 16000 பெண்களையும் விவாகம் செய்து கொண்டார்.இப்படி அவனை கொன்றதும் கிருஷ்ணர் அவன் மகனை அரசனாக்கி முடி சூட்டி விழா நடத்தி விட்டு தன் நாடு திரும்பினார்.
அவன் முன்னர் கவர்ந்து வந்திருந்த 16000 பெண்களையும் விவாகம் செய்து கொண்டார்.இப்படி அவனை கொன்றதும் கிருஷ்ணர் அவன் மகனை அரசனாக்கி முடி சூட்டி விழா நடத்தி விட்டு தன் நாடு திரும்பினார்.
நரகாசுரனை பற்றிய குறிப்புக்கள் காளிகா புராணம், பாகவதம்,ராமாயனம் ,பாரதம், சத பத ப்ராமணம் இவற்றில் இருப்பதாக விக்கி சொல்கிறது.
நேரமும் த்ராணியும் உல்ளவர்கள் சென்று பார்த்து கொல்ளலாம்!
நேரமும் த்ராணியும் உல்ளவர்கள் சென்று பார்த்து கொல்ளலாம்!
இன்னொரு செய்தி சொல்கிறது- நரகாசுரன் காமாக்யா தேவியை மணந்து கொள்ள விருப்பப்பட்டிருக்கிறான். அவளோ இவனுடைய பிறப்பின் ரகசியம் அறிந்தவளாதலால் கொல்ல மனமின்றி அவனுடன் ஒரு பந்தய்ம் செய்தாள். அதன் படி நீலாஞ்சல் மலையின் அடிவாரத்திலிருந்து தன் கோவில் வரைக்கும் ஒரு ஏணிப்படியை கட்டி விட்டால் அவனை மணந்து கொள்பதாக கூறினாள்.நேரம் அன்று இரவில் இருந்து விடியும் முன்னர்-சேவல் கூவும் வரை.
அவனும் கட்ட ஆரம்பித்தான். இந்த விளையாட்டு விபரீதமாகி விடும் என்று உணர்ந்தாள் தேவி. அவ்வளவு விரைவாக அவன் ஏணிப்படியை கட்டி கொண்டிருந்தான்! விடியும் முன் என்பது சேவல் கூவும் கனக்கு.
அவளே ஒரு மாய சேவலை ஏற்படுத்தி கூவ விட்டு விட்டாள் . அது கூவவும் அந்த ஏணிப்படியை முடிக்காமல் விட்டு சென்றான் நரகன். பின்னர் அவனுக்கு தெரிய ப்வந்ததும் அந்த சேவலை தேடிப்பிடித்து கொன்றான்!
// Now the place is known as Kukurakata situated in the district of Darrang. The incomplete staircase is known as Mekhelauja Path.//
// Now the place is known as Kukurakata situated in the district of Darrang. The incomplete staircase is known as Mekhelauja Path.//
நரகாசுரனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற போரின் போது, நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணர் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனை குறிவைத்து ஏவுகிறார். நகராசுகரன் வீழ்கிறான்.
பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார்.
நரகாசுரன் கவர்ந்துகொண்டுபோன தேவர்களின் உடைமைகள் முதலானவற்றுடன் புறப்பட்ட கண்ணன், நரகாசுரனின் மகனான பகதத்தனுக்கு முடி சூட்டிவிட்டு தன் நாடு திரும்பினார். நரகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட அந்த நாளைத்தான் ‘தீபாவளி’ என்று கொண்டாடுகிறோம். நரகனை சம்ஹாரம் செய்த நாளானதால், ‘நரக சதுர்த்தசி’ என்றும் தீபாவளி அழைக்கப்படுகிறது. நரகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட பிரக்ஜோதிஷபுரம் என்பது, அஸ்ஸாமில் உள்ளது. நரகாசுர சம்ஹாரம் என்பது, நம்மிடம் உள்ள தீய குணங்களை நீக்கி, கண்ணன் நம்மை ஆட்கொள்வதையே குறிக்கும்.
கண்ணன் நரகாசுரனின் கோட்டைகளை தாக்கி உடைத்து உள்ளே புகுந்ததாகப் பார்த்தோமல்லவா? அது, பஞ்ச பூதங்களால் ஆன நமது உடம்பின் உள்ளே புகுந்து தீயவற்றை விலக்கி நமக்கு அருள்புரிகிறார் கண்ணன் என்பதையே குறிக்கிறது. அக்கோட்டைகளின் விவரங்களை பார்ப்போமா?
கிரி துர்கம் என்பது மண்ணையும், அக்னி துர்கம் என்பது தீயையும், ஜல துர்கம் என்பது நீரையும், வாயு துர்கம் என்பது காற்றையும் குறிக்கின்றன. பஞ்சபூதங்களில் இந்த நான்கையும் சொல்லியிருப்பதால் முறைப்படி மற்றொரு பூதமான ஆகாயமும் இதில் சேரும். பஞ்ச பூதங்களாலான நம் உடம்பில் இறைவனைக் குடியேற்ற வேண்டும். இறைவனுக்கு நம் உள்ளத்தில் இருக்க இடம் கொடுத்தால், அவன் நம் உள்ளத்திலுள்ள அறியாமையைப் பிடுங்குவான் என்பதே தீபாவளியின் உட்பொருள். இதைத்தான் ரமண மகரிஷி, தீய எண்ணங்கள்தான் நரகன். அவன் குடியிருக்கும் வீடுதான் நம் உடம்பு. அந்த மாயாவியை அழித்து, தானாக ஆவது அதாவது, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி எனக் கூறுகிறார்.
கண்ணனால் நரகாசுரன் சம்ஹரிக்கப்பட்டதை கண்ட நரகாசுரனின் தாய்க்கு துக்கம் மேலிட்டது. ‘‘என் பிள்ளை போன துக்கம் எனக்கு இருந்தாலும், உலகில் உள்ளவர்களுக்கு எவ்வித துக்கமும் இருக்கக் கூடாது. அன்று எல்லோரும் மங்கல நீராடி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்’’ என்று அவள் வேண்டிக் கொண்டதாகவும் ஒரு கதை உண்டு.
அதாவது, ‘‘நாம் துன்பப்பட்டாலும் உலகம் நலமாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் இந்த தீபாவளியைக் கொண்டாடுவதன் பயன்’’ என்பது காஞ்சி மகாசுவாமிகள் வாக்கு.
மது, கைடபர் என்ற அரக்கர்கள் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்றார். அபபோது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பொற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.
பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.
நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.
நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப் படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.
தீபாவளி நரகாசுரன் என்ற தீமையை அழித்த நாள். அதனால் அன்று தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.
புராண வரலாறு எதுவானாலும், தீபாவளியை உவகையுடன் கொண்டாடுவோம். வாழ்வில் உன்னதம் பெறுவோம்.
No comments:
Post a Comment