Thursday, 12 November 2015

பூரி ஜெகன்னாதர் கோவில் அற்புத தகவல்கள் சில ...*

* பூரி ஜெகன்னாதர் கோவில் அற்புத தகவல்கள் சில ...*

1. கோவில் கோபுரத்தின் உச்சியில் கட்டப்பட்டுள்ள கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர்த் திசையில் பறக்கும்.. 

2. கோவில் அமைந்துள்ள நகரமான பூரி என்ற நகரில் நின்று எந்த பக்கத்திலிருந்து பார்த்தாலும் கோவில் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் காண்பவரை நோக்கியே இருக்கும்.

3. பொதுவாக காலையிலிருந்து மாலை வரை காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும், மாலை முதல் இரவு வரை நிலத்திலிருந்து கடல் நோக்கியும் வீசும்.. ஆனால், பூரியில் இதற்கு நேர் எதிராக வீசும் ..

4. இந்த கோவிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு புலப்படுவதில்லை.

5. இந்த கோவில் உள்ள இடத்தின் மீது எந்த விமானங்களும், பறவைகளும் பறப்பதில்லை..

6. இந்த கோவிலில் சமைக்கப்படும் உணவு, ஆண்டு முழுவதும் ஒரே அளவாக இருக்கும். ஆனால், வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தாலும், லட்சக்கணக்கில் கூடினாலும் சமைக்கப்பட்ட உணவு போதாமல் இருந்தது இல்லை, மீந்து இருந்ததும் இல்லை.

7. இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள். அப்படி சமைக்கும் போது, அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன், மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உள்ள உணவு வெந்து விடுமாம்..

No comments:

Post a Comment