ப்ராணாயாம லக்ஷணம்
“ப்ராணாயாமPranayama 2ஸ்த்ரய: ப்ரோக்தா ரேசபூரக கும்பகா: | வாமநாஸா புடேசைவ பூரயேத்பூரக: ஸ்ம்ருத: ||’
ப்ராணாயாமம் ரேசகம், பூரகம், கும்பகம் என்று மூன்று வகை.
இடது மூக்கு த்வாரம் வழியாக காற்றை உள்ளிழுப்ப்தை பூரகம் என்பர்.
“கும்பகோ நிஸ்சலா ஸ்வாஸ ஸ்தாவத்காலம் ஸமந்த்ரகம் | தக்ஷணாஸா புடேனைவ ரேசயே த்ரேசக: ஸ்ம்ருத; ||’
மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும் நேரம் காற்றை நிறுத்தி வைப்பது கும்பகம்.
வலது மூக்கு த்வாரத்திலிருந்து ஸ்வாஸத்தை விடுவது ரேசகம்.
“ஸவ்யாஹ்ருதீம் ஸப்ரணவாம் காயத்ரீம் ஸிரஸாஸஹ | த்ரி:படேதாயத ப்ராண: ப்ராணாயாம ஸ்ஸஉச்யதே ||”
ப்ராணாயாமம் செய்யும் பொழுது ஓம்கார வ்யாஹ்ருதி காயத்ரீ ஸிரோமந்த்ர சகிதமாக ஜபிக்கின்ற காலம் ப்ராணவாயுவை நிறுத்தி வைப்பதை ப்ராணாயாமம் எனப்படும்.
“பஞ்சாங்குளீபிர்நாஸாக்ர பீடனம் ப்ரணவாபிதா | முத்ரேயம் ஸர்வபாபக்னீ வானப்ரஸ்த க்ருஹஸ்தயோ: ||”
ஐந்து விரல்களால் மூக்கின் நுனியை பந்திப்பதை ப்ரணவ முத்ரை என்பப்படும். இந்த முத்ரை க்ரஹஸ்தர்களுக்கு, வானப்ரஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
“கனிஷ்டானாமி காங்குஷ்டை ர்நாஸாக்ரஸ்யச பீடனம் | ஓம்கார முத்ரா ஸாப்ரோக்தா யதேஸ்ச ப்ரஹ்மசாரிண: ||”
பெருவிரல், சிறுவிரல், மோதிர விரல்களினால் மூக்கை பிடித்துக் கொண்டு ப்ரஹ்மசாரிகள், யதிகள் ப்ராணாயாமம் செய்ய வேண்டும். இது ஓம்காரமுத்ரை எனப்படும்.
No comments:
Post a Comment