Friday, 13 November 2015

கண் திருஷ்டி

கண் திருஷ்டி

இன்றைய சூழ்நிலையில் நாம் கஷ்டப்பட்டு உழைத்தாலும் மற்றவர்களின் கண் திருஷ்டியால் பெரும் அவதிக்கு உள்ளாகிறோம்

கண்திருஷ்டி என்பது மற்றவர்கள் நம் மீது காட்டும் நெகட்டிவ் எனர்ஜி தான் அவை நம்மை தாக்கும் பொழூது  நெகட்டிவ் எனர்ஜின் வீரியத்தை பொருத்து நம் உடல் நிலை செல்வநிலை தொழில்  மற்றும் குடும்பத்தை ஆட்டி படைக்கும்

கிரக நிலை சரி இல்லாதவர்களுக்கு சொல்லவே வேண்டாம் நிலைமை படு மோசமாகி விடும்

இவ்வளவு சொல்றிங்க இதை சரி செய்யவே முடியாதானு நீங்க சொல்றது கேட்குது

மிக மிக எளிய வழியில் இதை சரி செய்யலாம்

இரண்டு முறைகள் தருகிறேன்

1,கண் திருஷ்டி படாமல் நம்மை பாதுகாக்க

தினமும் வீட்டில் இருந்து கிளம்பும் முன் வர மிளகாய் (மிளகாய் வற்றல்) ஒன்றை ஒரு காகிதத்தில் மடித்து உங்கள் பர்ஸ் அல்லது பேக் இவற்றில் வைத்து கொள்ளுங்கள் வீடு திரும்பியதும் நீங்களோ அல்லது வீட்டில் உள்ள மற்றவர்களோ அந்த மிளகாயை தீ குச்சியில் பற்ற வைத்து எரித்து விடவும் இதை வீட்டிற்க்குள் செய்ய வேண்டாம் இதை நீங்கள் எங்கு சென்று வந்தாலும் தொடர்ச்சியாக செய்து வரவும் மாற்றத்தை உணர்வீர்கள்

2,கண் திருஷ்டியால் பாதிக்க பட்டவர்களுக்கு

தினமும் குளிக்கும் போது இந்து உப்பு இது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் பொடியாக வாங்க வேண்டாம் கல் போன்று கடினமாக இருப்பதை வாங்கி பொடி செய்து குளிக்கும் போது தலை தவிர உடலில் பூசி குளிக்கவும் மற்றும் வீடு துடைக்கும் பொழுது இந்துப்பு மற்றும் பஞ்ச காவ்யம் இவற்றை நீரில் கலக்கி வீடு துடைக்கவும்

மற்றும் பல மூலிகை மூலம் புகை போடும் முறையும் உள்ளது

மேற்கூறியவற்றை செய்தாலே உடனடி பலன் தெரியும்

No comments:

Post a Comment