Friday, 13 November 2015

முன்னோர் வழங்கிய மூலிகை

முன்னோர் வழங்கிய மூலிகை:

சுண்டைஉண்டால் நுண் புழுவால் உண்டான நோளிகள், வலி நோய்கள் போகும். சுண்டைவற்றலை பயன்படுத்தினால் சுவையின்மை, வயிற்றில் உள்ள புழு,நிணக்கழிச்சல், சீதக்கட்டு, மார்ச்சளி,செரியாக்க ழிச்சல், மூலம் நீங்கும். பசியை அதி க ரிக்கும். தொடர்ந்து சுண் டைக்காய் வற்றலை சாப்பிட்டுவந்தால் உடல் சூட்டால் ஏற்படும் ஏப்பம், வயி றுவி ழுதல், வயிற் றுவலி மற்றும் வயிறு தொடர்பான நோளிய்கள் நீங்கும்.ரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரை பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச் சுற்றல், வாந்தி, மயக்கம், நீங்கும். மார்ச்சளி, தொண்டைக்கட்டு, சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, வெந்தயம் முதலியவற்றை இளம் வறுப்பாக வறுத்து தேவையான அளவு உப்பு கலந்து பொடித்து கொள்ளவேண்டும். இந்த பொடியை உணவில் கலந்து சாப்பிட பசி மந்தம், சுவையின்மை மலக்குடல் கிருமிகள் நீங்கும். ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும். பால் சுண்டையை சமைத்து உண்டு வந்தால் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர் பூச்சி முதலியன போகும். சுண்டை செடியின் வேர்ப்பட்டையை பொடிசெய்து தேங்காய் குடுவையில் வைத்து ஒரு சிட்டிகை மூக்கிட்டு உள்ளே இழுக்க நீரேற்றம், மண்டைக்குடச்சல், ஒற்றைத்தலைவலி, மூக்கில் நீர் பாய்தல் நிற்கும். சுண்டைவேர் ஒருகைப்பிடி எடுத்து அரைலிட்டர் தண்ணீரில் போட்டு 200மிலியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி குடிக்க, வலியுடன் ஏற்பட்ட காய்ச்சல் தீரும். சுண்டைவேர், தும்பைவேர், இலுப்பைபிண்ணாக்கு சமஅளவு எடுத்து, இடித்து பொடிசெய்து முகர இழுப்பு நோய் தணிந்து குணம்ஏற்படும். சுண்டைவற்றல் கறிவேம்பு, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் இவற்றை ஒரே அளவாக எடுத்து அதை தனித் தனியாக இளவறுப்பாக வறுத்து சூரணமாக செளிணித கொள்ளவேண்டும். இதில் 3 சிட்டிகை அளவில் காலை மாலை மோரில் சாப்பிட மூலம், மார்ச்சளி நீங்கும். சுண் டைக்காய் வற்றலை சிற்றாமணக் கெண் ணெயில் வறுத்து, இதனுடன் மிளகு, சீரகம், கறிவேம்பு, வெந்தயம் இவைகளை வறு த்து பொடித்து கொண்டு சாப்பிட மந்தம், செரியாமை, மூ இதைத்தான் "நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம் விசுவா தத்தின் விளைவும்போம் வஞ்சியரே! வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டை காயைக் சுவைப்பவர்க்குக் காண் பித்தஅ ரோசகம் போம் பேராப் புழுச்சாகும் உற்ற கிராணியறும் உட்பசியாஞ் சத்தியமாளிணிப் பண்டைக் குதஆமம் பற்றுமிங்கு யாரையுந்தான் சுண்டைக்காளிணி வற்றலுண்ணச் சொல் என்கின்றார் அகத்தியர் பெருமான். 'உருவைக் கொண்டு எள்ளாமை வேண்டும்' என்பது ஆன்றோர் வாக்கு. ஒருவரின் உருவத்தை கொண்டு அவரை மதிப்பிடாமல் அவரின் அறிவு. ஆற்றல் முதலி லியவற்றை கொண்டு ஒருவரை மதிப்பிட வேண்டும். அந்த வகை யில் நமக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும் சுண்டைக்காயை, சுண்டைக் காய்தானே என ஏளனம் செய்யாமல் முன்னோர் சொல்லிய வழியில் பயன்படுத்தி வாழ்வை நலமாக்கி நோயின்றி வாழ்வோம்.

No comments:

Post a Comment