Saturday, 14 November 2015

முருகன்

முருகன்

முருகன் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது ஆறு முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.

இவருக்கு கணங்களின் அதிபதியான கணபதி அண்ணனாகவும், வைணவக் கடவுளான திருமால் மாமனாகவும் அறியப்படுகிறார்கள். மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.

தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது.

* பெயர்க் காரணம்
"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

* வேறு பெயர்கள்
# முருகன் - அழகுடையவன்.
# குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.
# குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி # இருப்பவன் .
# காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன்.
# சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்.
# சேனாதிபதி - சேனைகளின் தலைவன்.
# வேலன் - வேலினை ஏந்தியவன்.
# சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்.
# கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.
# கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
# சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்.
# தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.
# வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.
# சுப்பிரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.
# ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
# சிவகுமரன் - சிவனுடைய மகன்.
# வேலாயுதன், சிங்கார வேலன் - வேல் என்ற ஆயுதத்தினை உடையவன்
# ஆண்டியப்பன் - ஆண்டியாக நின்றவன்
# அயிலவன்-வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.
போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.

* முருகன் குறித்த பழமொழிகள்
- வேலை வணங்குவதே வேலை.
- சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
- வயலூர் இருக்க அயலூர் தேவையா?
- காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
- அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
- முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
- சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
- கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
- கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
- பழனி பழனின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
- சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
- செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
- திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
- வேலனுக்கு ஆனை சாட்சி.
- வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
- செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.

* அறுபடை வீடுகள்
~ திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
~ திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
~ பழனி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
~ சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
~ திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
~ பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது.

No comments:

Post a Comment