காசி யாத்திரை
காசிக்குச் சென்று கங்கையில் காசி யாத்திரைநீராடினால் பாவங்கள் எல்லாம் தொலைந்து விடும் என்ற எண்ணம் காலம் காலமாக இருந்து வருகிறது. அந்தக் காலத்தில் வசதி படைத்தவர்களும் வேதம் கற்றவர்களுமே காசிக்கு தீர்த்த யாத்திரை சென்றனர். இறுதிக் காலத்தை அங்கேயே கழித்து, காசியில் மரணமடைவதையும் பெரும் பேறாகக் கருதினர். பின்னர், வேத மந்திரங்கள் கற்றவர் கள் மட்டுமே காசிக்குச் செல்ல முடியும் என்ற நிலை மாறி, தற்போது நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் காசிக்குத் தீர்த்த யாத்திரை செல்லத் துவங்கி விட்டனர். வருவாய் அதிகரிப்பும் போக்குவரத்து வசதிகள் அதிகரிப்புமே இதற்கு முக்கிய காரணம்.
காசி யாத்திரை செல்வதால் செய்த பாவங்கள் தீர்ந்து நாம் புண்ணியவான்கள் ஆகிவிடுவோமா? மற்ற எத்தனையோ பெரிய புண்ணிய நதிகள் இருக்கும் போது காசிக்குச் சென்று கங்கையில் நீராடுவதால் மட்டும் பலன் கிடைக்கும் என கூறப்படுவது ஏன் என்ற சந்தேகம் நம்மில் பலரிடையே இருக்கிறது. அந்த சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக சில விவரங்களை இங்கே கூறுகிறோம்.
புண்ணிய நதிகளிலும், சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் நீர்நிலைகளிலும் நீராடுவதால், உடல், மனம் இரண்டும் தூய்மை அடைந்து நமக்குப் புண்ணிய பலன்களைத் தருவதோடு, நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்களில் இருந்தும் விடுபட முடிகிறது. மேலும், புண்ணிய நதிகளில் நீராடி தங்களின் முன்னோர்களை வழிபாடு செய்யும்போது அவர்களின் ஆசியும் கிடைக்கிறது.
யாகங்கள் நடத்துவது, குளங்கள் வெட்டுவது, அன்ன சத்திரங்கள் கட்டுவது, கோவில்கள் கட்டுவது, தீர்த்த யாத்திரை செல்வது போன்றவை தர்மகாரியங்களாகக் கருதப்பட்டாலும், இவற்றில் தீர்த்த யாத்திரை செல்வது சிறந்தது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அயோத்தி, வடமதுரை, ஹரித்துவார், காசி (வாரணாசி), அவந்திகா, துவாரகை போன்றவை மோட்சத் தைத் தரக்கூடிய நகரங்கள் என்றாலும், இவற் றுள் சிறந்ததாக காசி சொல்லப்படுகிறது.
இதனால்தான் திருமண நேரங்களில் மாப்பிள்ளை பரதேசம் கிளம்பும்போது பெண் வீட்டார், "காசி யாத்திரை செல்ல வேண்டாம்; பெண்ணை விவாகம் செய்து தருகிறோம்' என்று கூறுகின்றனர்.
காசியில் வடக்கு நோக்கி கங்கை நதி ஓடுவ தால், இங்கு பஞ்சமா பாதகங்கள் பிரவேசிப்பது கிடையாது. அதனால்தான், பஞ்சமா பாதகங்க ளைச் செய்தவர்கள் இந்த காசி நகருக்குள் பிர வேசித்தால், அந்தப் பாவங்கள் அவர்களை விட்டு விலகி ஓடிவிடும் என்பது நீண்ட காலமாக நிலைத்து நிற்கும் கருத்து.
காசி நகரில் வசிப்பவர்கள் புண்ணிய நதிகளில் நீராடவும், தெய்வங்களைத் தரிசிக்கவும் வெளி யில் எங்கும் செல்ல வேண்டாம். காசியிலேயே சகல தீர்த்தங்களும் தெய்வங்களும் இருக்கின்றன என புராணங்கள் கூறுகின்றன. காசியில் மரணம் அடைவது மிகச் சிறந்தது எனக் கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான பிறவிகளில் தியானம் போன்ற சிறப்பான காரியங்களைச் செய்தவர்கள் மோட்சத்தை அடைகிறார்களோ இல்லையோ- காசியில் மரணம் அடைந்தவர் நிச்சயம் மோட்சத்தை அடைவார்.
காசியில் இறந்தவர்களைப் பரிகாசம் செய் பவர்கள் அவர்களின் பாவங்களை அடைவர். காசியில் இறந்தவர்களைப் பூஜிப்பவர்கள் புண்ணியங்களை அடைந்து பின்னர் மோட்சம், ஜீவன் முக்தி போன்ற நிலையையும் அடைகின்ற னர். காசி நகரின் வடபாகத்தில் வாரணா நதியும், தென்பாகத்தில் அஸி நதியும் எல்லைபோல் அமைந்து கங்கை நதியில் கலக்கின்றன. "காசி... காசி...' என்று உச்சரித்துக் கொண்டிருந்தாலே புண்ணியம் கிடைத்துவிடும் என்று பெரியோர் கூறியுள்ளனர்.
பெயரைச் சொல்வதற்கே இவ்வளவு மகிமை இருக்கும்போது, அந்த நகருக்கே சென்று புண்ணிய நதியான கங்கையில் நீராடி சிவ பெருமானை வழிபட்டால் பாவங்கள் நசிந்து போகாதா? "காசியில் நியமங்களுடன் மூன்று நாள் வசித்தவருக்கு அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கிறது' என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது.
காசி நகரில் வாசம் செய்து பின்னர் அங்கு மரணம் அடைந்தவரின் பாவங்களை பைரவர் தண்டனை கொடுத்து விலக்கி மோட்சத்திற்கு அனுப்பி வைப்பார். காசியில் வாசம் செய்து மரணம் அடைந்தவருக்கு யம தண்டனை கிடையாது. காசி நகரில் ஓடும் கங்கை நதியில் புனித நீராடியவர்கள் பத்து அசுவமேத யாகம் செய்ததன் பலன் அடைகின்றனர். ஆகையால் கங்கா ஸ்நானம் உயர்ந்தது என்று புராணங்கள் கூறுகின்றன.
காசியில் செய்ய வேண்டிய புண்ணிய காரியங்கள்
* வேதங்கள் கற்ற பிராமணர்களுக்கு கொஞ்சம் திரவியங்கள் தானம் செய்தால், காசியில் செய்த தானமாகையால் நல்ல கதியை அடைய முடியும்.
* காசியில் விரதம் இருந்து பிராமணர்களுக்கு உணவு அளித்து தக்ஷிணா தானம் முதலியவற்றால் பூஜிப்பவர், சவுதராமணி யாகம் செய்த பலனை அடைகின்றனர்.
* காசியில் சிவபக்தியுடன் ஒரு நாள் விரதம் இருந்தால், நூறு வருடங்கள் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
* காசியில் சிவபெருமானைப் பூஜித்து ஸ்தோத்திரம் செய்பவர்கள் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவர்.
* மற்ற புண்ணிய ஸ்தலங்களில் பலருக்கு அன்னம் அளித்த பலன், காசியில் ஒருவருக்கு அன்னம் அளித்தாலே கிடைத்துவிடும்.
* நன்றாகப் பால் கறக்கக்கூடிய பசுக்களை காசியில் தானம் செய்தால், அவனுடைய ஏழு தலைமுறைகள் பலன் அடையும்.
* காசியில் விஸ்வநாதர், பிந்துமாதவர், டுண்டி கணபதி, பைரவர், காசி தேவதா, கங்கா, பார்வதி, மணிகர்ணிகா, குஹை, தண்டபாணியான யசபதி போன்ற தெய்வங்களைப் பூஜிக்க வேண்டும்.
* இறந்தவர்களின் அஸ்திகளை- எலும்பு களை ஆட்டுத்தோல், கம்பளம், பட்டுத் துணி போன்றவற்றில் இறுகக் கட்டி, பின்னர் தர்ப்பைக் கயிறு சுற்றி, தண்ணீர், பால் போன்றவற்றால் அபிஷேகம் செய்து கங்கை நதியில் போட வேண்டும். இப்படிச் செய்வதால் இறந்தவர் மோட்சத்தை அடைவார்!

No comments:
Post a Comment