Sunday, 15 November 2015

செய்வினை , ஏவல் , பில்லி , சூனியம், பேய் பிடித்தல் ஜாதக ரீதியாக யாரை பாதிக்கும்?

செய்வினை , ஏவல் , பில்லி , சூனியம், பேய் பிடித்தல் ஜாதக ரீதியாக யாரை பாதிக்கும்?

            ஒருவரின் ஜாதகத்தில் அவரின் வாழ்வை செழிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், 1, 5, 9 ம் அதிபதிகள் ஆவர்.

            #1 ம் பதி (லக்னாதிபதி) மனோ பலத்தை கொடுக்கக் கூடியவர், தடைக்கற்களை படிக்கல்லாக மாற்றும் திறமையுடையவர், வெற்றியை தரக்கூடியவர்.

             # 5ம் பதி (பூர்வ புண்ணியாதிபதி) வைராக்கிய பலத்தை தரக்கூடியவர், பூர்வ புண்ணிய பலத்தாலும், குல தெய்வ அருளாலும், அறிவாலும்  எதையும் சாதிக்கும் திறனுடையவர்.

            # 9ம்பதி ( பாக்கியாதிபதி) தெய்வ அருளையும், குருவின் அருளையும, முன்னோர்களின் புனித ஆன்மாக்களின் பலத்தையும் தரக்கூடியவர், 9ம் பதி பலம் பெற்றவர்களின் வாழக்கை பாதையை எளிதில் கடந்து விடுவர், நமது முயற்சிகள் வெற்றி பெற்றால் அது நாம் செய்த பாக்கியம் எனக் குறிப்பிடுகிறோம். அந்த பாக்கியத்தை கொடுப்பவர்.

            # இம்மூவரும் ஜாதகத்தில் பலமற்று இருப்பவருக்கே செய்வினை, ஏவல்,பில்லி,சூனியம்  இவற்றால் பாதிப்பு  ஏற்படும்.

            # ஒருவரின்  ஜாதகத்தில் ஆறாம் பதி மறைமுக எதிரிகளையும் , நோய், வழக்கு , கடன் இவற்றை கொடுப்பவர், இவர் லக்னத்திற்கு தொடர்பு கொண்டு, லக்னாதிபதி பலமற்று இருப்பதும், லக்னாதிபதியும் , ஆறாம்பதியும் பரிவர்த்தனை பெறும் போதும் ஜாதகர் செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், பேய்பிடித்தல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுவார்.

               # ஆறாம்பதி இரண்டாம் வீட்டை தொடர்பு பெறும் போதும், இரண்டாம் வீட்டில் பாவ கிரகங்கள் இருப்பதும் ஜாதகரின் குடும்பம் செய்வினை , ஏவல், பில்லி, சூனியம், பேய் பிடித்தல் போன்றவற்றால் பாதிக்கப்படும்.

               # ராகு கேது 2,8ல் இருப்பவரும் அவரது குடும்பமும் செய்வினை , ஏவல், பில்லி, சூனியம், பேய்பிடித்தல் போன்ற வற்றால் பாதிபபு ஏற்படும் நிலை ஆகும்

               # செவ் சனி ராகு & செவ் கேது சம்மந்தம் பெற்று 8 ம் பாவம் தொடர்பு பெறுவது செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், பேய்பிடித்தல் இவற்றால் பாதிக்கப்பட்டு கொலை, தற்கொலை செய்பவராவர் .

               # ஆறாம்பதி, எட்டாம்பதி இணைந்து லக்னம் தொடர்பு , லக்னாதிபதி பலம் குறைந்து, சனி அவயோகனாகி லக்னம் அல்லது லக்னாதிபதியை பார்ப்பது செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் , பேய் பிடித்தல் இவற்றால் ஏற்படும் பிரச்சினை தீராத பிரச்சினையாக இருக்கும்.

பாதிப்பு ஏற்படும் காலம்:

                   # ஆறாம் அதிபதி, எட்டாம் அதிபதியின் திசை புத்தி காலங்களில் பாதிப்பு ஏற்படும்

                  # ராகு திசை ராகு புத்தி, சனி புத்தி, கேதுபுத்தி காலங்களில் ஏற்படும்.

                  # கேது திசை கேதுபுத்தி, சனிபுத்தி, செவ் புத்தி, ராகு புத்தி காலங்களில்  ஏற்படும்.

                    # சனி திசை சனி புத்தி, சனி செவ் புத்தி, சனி ராகு புத்தி காலங்களில் ஏற்படும்.

                   # ராகு கேது எட்டில் , பாதகஸ்தானத்தில் இருந்து அவர்களின் சாரம் பெற்ற கிரகங்களின் திசை புத்தியில் ஏற்படும்.
 
                    #  ஆத்மகாரகன் சூரியன் ,மனோகாரகன் சந்திரன், ராகு கேதுவால் கிரகண தோஷம்  அடைந்த ஜாதகருக்கும் பாதிப்பு ஏற்படும்.

                     # ஒன்று, ஐந்து, ஒன்பதாம் அதிபதிகள் பலம் குன்றியிருப்பினும் ஆத்மா பலம் தரும் சூரியன் நல்லவனாகி ஆட்சி உச்சம்  மற்றும் ஸ்தான பலம் பெறும் ஜாதகரை  செய்வினை, ஏவல்,    பில்லி, சூனியம், பேய்பிடித்தல் இவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

பாதிப்பு நீங்கும் காலம்:

                     # லக்னம் & லக்ன யோகதிபதிகள் திசை புத்தியிலும். குரு சுபனாகி கோசாரத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதியை பார்க்கும் காலம் பாிப்பு நீங்கும்.

                   # லக்னம் & பாதகஸ்தானம் சம்மந்தமற்ற பதினொன்றாம் திசை புத்தியில் பாதிப்பு நீங்கும்.

பாதிப்பு நீங்க தெய்வ வழிபாடு:

             # சரபேஸ்வரர் வழிபாடு

              # நரசிம்மர் வழிபாடு

               # சித்தர்கள் வழிபாடு

                  # சரபேஸ்வரர் அல்லது நரசிம்மர் காயத்ரி தினமும் காலை மாலை பூஜை அறையில் விளக்கேற்றி, சாம்பிராணி புகை யிட்டு 108 முறை  ஜபித்து வர பாதிப்பு குறைந்து நீங்குவதற்கான வழி பிறக்கும்.

               # முறைப்படி குல தெய்வ வழிபாடும் செய்வது நலம் தரும்.

சரபேஸ்வரர் காயத்ரி:

    " ஓம் சாலுவே சாய வித்மஹே
      பட்சி ராஜாய தீமஹி
       தந்நோ சரப ப்ரசோதயாத்"

நரசிம்ம காயத்ரி:

        "ஓம் வஜ்ர நகாய வித்மஹே
         தீஷ்ணதம் ஷடராய தீமஹி
          தந்நோ நரசிம்ம ப்ரசோதயாத்.

No comments:

Post a Comment