Tuesday, 10 November 2015

நீங்களும்வாழ்வில் ஜெயிக்க வேண்டாமா? - பித்ரு ஹோமம் செய்யுங்கள்..

நீங்களும்வாழ்வில் ஜெயிக்க வேண்டாமா? - பித்ரு ஹோமம் செய்யுங்கள்..
இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் வாழ்வில் ஒரு நல்ல நிலை அடைய வேண்டும். ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எதற்கு? நம் குடும்பமும், நம்மை சுற்றி இருக்கும் அனைவரிடமும் நல்ல பேரும்  , புகழும் பெற வேண்டும் என்பதற்காக.

ஒரு உதாரணத்துக்கு நீங்கள் ஒரு சக்கரவர்த்தி என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள். ஒரு தந்தையாக உங்கள் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம், அவர ஆசைப்படும் அத்தனையும் கிடைக்க வைப்பீர்கள். இந்த உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆத்மாவும் அதைபோன்று வலிவு உள்ளவையே. அதுவே உங்கள் பெற்றோர்கள், தாத்தா , பாட்டி என்றால்.... அவர்களை நீங்கள் முறையான வழிபாடு செய்தால்... அவர்களின் அத்தனை சக்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு கிடைக்க அவர்கள் முழு ஆசீர்வாதம் கிடைக்கும். நம்மில் எத்தனை பேருக்கு அப்படி தோன்றுகிறது...?  பித்ரு ஹோமம் பற்றிய இந்தக் கட்டுரை , உங்கள் நன்மைக்காக...  

நம்மை பெற்றவர் இல்லையே என்ற கவலையை விட்டுத் தள்ளுங்கள்.. உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்...

நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அவர்களை நமது சாதாரணக் கண் கொண்டு அடையாளம் தெரிந்து, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிட இயலாது என்பதால்தான் அவர்களுக்காக ஹோமம் வளர்த்து. யாகம் அனுசரித்து பஞ்சபூதங்களையும் முன்நிறுத்தி உரிய மந்திரங்களோடு வணங்குகிறோம். இதுவே 'பித்ரு ஹோமம்'.

சிருஷ்டியின் போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியை தொடங்குகிறாரோ, . அதேபோன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக உற்பவிக்கும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.

புரட்டாசி மாத மஹாளயபட்ச அம்மாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உட்பட அனைத்து தேவதைகளும் ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், சமுத்திரங்களிலும், காசி இராமேஸ்வரம், கயை போன்ற புண்ணியதலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.

நமது மூதாதையர்களுக்கே உரித்தான இந்தத் தர்ப்பண பூஜையானது பித்ருக்களுக்கு மட்டுமின்றி, வம்சாவளியிலுள்ள நமக்கும் தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது. இதனாலேயே மஹாளயபட்சத்தில் கொடுக்கப்படும் பெற்றோருக்கான அல்லது முன்னோருக்கான திதிவழிபாடு மிகவும் சிறப்புடைய தாய் விளங்குகிறது.

பொதுவாக வலது ஆள்காட்டி (குருவிரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிரவிரல்) இடையிலுள்ள 'பித்ரு பூம்ய' ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது. சாதாரணமாக, அம்மாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே 'பித்ரு லோக அந்தர ஆக்ரஷன' சக்தியின் தெய்வீகத் தன்மையாகும். மஹாளயபட்ச அமாவசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிமிதமாகப் பெருகுகின்றது.
http://arcotroadtimes.com/wp-content/uploads/2009/07/aiy-temple-1.jpg
பித்ருக்களுக்கு தர்ப்பணமிடும் போது பசுந்தயிர் கொண்டு தர்ப்பணமிடுவது வெகு விசேஷமானது. மேலும் அவர்களுக்கு ஆத்ம திருப்தியளிப்பதாய் கருதப்படுவது அடயங்களாகும் . பித்ரு லோகத்திலுள்ள மூலிகையாய் விளங்குவது புடலங்காயே; இதன் நிழலில் தான் பித்ரு - தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.

ஆக, அதியற்புதமான - தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள். திவசங்கள். படையல்களை முறையாக அளித்து பல்லாயிரக்கணக்கான நம் கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தரும் மஹாளயபட்ச் தர்ப்பண தான தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காண்போமாக!

நமது மேலும் இரண்டு சிறப்புக் கட்டுரைகள் : நாம் இந்த கட்டுரைகளை மீண்டும் மீண்டும் பரிந்துரை செய்வது ... இதைப் படிக்கும் அன்பர்களில் யாரேனும் ஒருவராவது இதை மேற்கொண்டு வாழ்வில் வளம் பெற வேண்டும் என்ற எண்ணத்திற்காக மட்டுமே.

திலா ஹோமம் செய்வது ... பித்ருக்களின் மனம் குளிர வைக்க...

பரிகாரங்கள் செய்வது எப்படி?

தீவினைகள் மூன்று வகைப்படும். வந்தவை, வந்திருப்பவை, வரவிருப்பவை. இவற்றைத் தொலைக்கக்கூடியது நாமஜபம்.
நோய் வந்தால் சில மருந்துகளை உட்கொண்டு நோயை நீக்கிக்கொள்கிறோம். மேலும் வரவிருக்கும் நோயையும் சில மருந்துகளைச் சாப்பிடுவதனால் முன்பே தவிர்த்துக்கொண்டுவிடவும் இயலும் அல்லவா?
அதுபோல், வரவிருக்கும் தீவினைகளையும் இறைவனிடம் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வதால், போதிய அளவு மேற்கொள்ளப்படும் ஜபம், தியானம் போன்ற தவ சாதனைகளினால் விலக்கிக்கொண்டுவிடலாம்.அல்லது வெகுவாகக் குறைத்துக் கொண்டுவிடலாம். சில பரிகாரங்கள், தான தர்மங்கள் போன்றவற்றாலும் துன்பங்களை நீக்கிக்கொள்ள முடியும். பொதுவாக மாசில்லாத பக்தி கொண்டவர்கள், துன்பங்கள் நீங்கவேண்டும் என்றுகூட இறைவனிடம் வேண்டுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் துன்பம் சூழ்ந்தபோதும் அதைத் தாங்கும் சக்தியையும் இறைவன் அருளால் பெறுகிறார்கள்.

No comments:

Post a Comment