Sunday, 15 November 2015

நீங்கள் இரண்டாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவரா

நீங்கள் இரண்டாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவரா? 

2- சந்திரன் 

2 தேதி பிறந்தவர்கள் – அமைதியான குணம் படைத்தவர். எதையும் தீர ஆலோசிப்பார்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற குணம் இவர்களுக்கு பிடிக்காது.  

11 தேதி பிறந்தவர்கள் – நினைத்ததை செய்து காட்டும் ஆற்றல் படைத்தவர்கள். வாய் சொல் வீரர். நண்பர்களால் நன்மை ஏற்படும். ஆனால் அதிகமாக யாரை நம்பினாலும் அவர்களால் மனகசப்புக்கு ஆளவார்கள். 

20 தேதி பிறந்தவர்கள் – பூஜ்யத்தில் ராஜ்யம் என்ற சொல்லுக்கு ஏற்ப இவர்கள் வாழ்க்கை அமையும். முதலில் சாதாரணமாக இருந்தாலும், வயதாக வயதாக நல்ல முன்னேற்றம் பெருவார்கள். 

29 தேதி பிறந்தவர்கள் – மனசஞ்சலத்திலேயேதான் இருப்பார்கள். தூக்கத்திலும் பல சிந்தனைகள் இவர்கள் மனதில் ஒடும். தலைவலி அவ்வப்போது ஏற்படும். மற்றவர்களை நம்பியே ஏமாறுவார்கள். எதிலும் கொஞ்சம் அக்கறையும் விட்டு கொடுக்கும் குணமும் இருந்தால், இவர்களை யாராலும் வீழ்த்த முடியாது.     பெயர் எண் –  2   11 எண்ணில் பெயர் அமைந்தால்    – குலதெய்வத்தின் ஆசியால் தான் இவர்கள் வாழ்க்கையே நடக்கும். யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல் பல திறமை இருந்தாலும் பிரச்சனையே ஏற்படும். இந்த எண்ணில் பெயர் அமைந்தோர், அதிக எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.  

20 எண்ணில் பெயர் அமைந்தால் – அதிக மன தைரியத்தை கொடுக்க கூடியது. எதையும் சிந்தித்து செய்தால் வெற்றி கிடைக்கும். கோபத்தில் “எழுபவன் நஷ்டத்தில் அமருவான்“ என்பது போல் அதிகமான உணர்ச்சிகள் தூண்டி சங்கடத்தில் மாட்டிவிடும்.  

29 எண்ணில் பெயர் அமைந்தால் – ஏற்ற – இறக்கமான எண் இது. வீண் வம்பு வழக்குகள், வில்லங்கமான விஷயங்கள் ஏற்படும். சம்பாதிப்பது பாதியளவு, வீண் விரயங்கள்தான் உண்டாக்கும். குடும்பத்தில் நிம்மதியின்மையும் அதனால் சண்டை ச்சசரவுகள் – நண்பர்களின் நம்பிக்கை துரோகம் போன்றவை ஏற்படும். 

38 எண்ணில் பெயர் அமைந்தால் – பொன் – பொருட்கள் சேர்பவர்கள். நினைத்ததை சாதிக்கும் யோகம் ஏற்படும். ஆனால் இந்த எண் ஏற்ற – இறக்கமான வாழ்க்கையை தரும். பொறுமை பொறுமை என்று இருந்தாலும் பெருமை கிடைக்காது. தனக்கு கீழ் நிலையில் இருப்பவர்களால் பாதகத்தை சந்திப்பார்கள். 

47 எண்ணில் பெயர் அமைந்தால் – செயகர்யமான வாழ்க்கை அமையும். எடுக்கும் வேலையில் லாபத்தை பார்ப்பார்கள். ஆனால், என்ன வந்து என்ன பயன்? என்ற சலிப்புதான் மனதில் அதிகமாக இருக்கும். எந்த அளவில் புகழ் கீர்த்தி கிடைக்கிறதோ அந்த அளவில் நிம்மதியில்லாமல் இருப்பார்கள்.  

56 எண்ணில் பெயர் அமைந்தால் – கடுமையான உழைப்பை கொடுக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கொடுக்குமா? என்றால் அந்த அளவுக்கு இருக்காது. அடுத்தவர்களின் நலனுக்காகவே பாடுப்படுவார்கள். இதனால் பாதகங்கள் ஏற்படும். வசதிகள் ஏற ஆரம்பித்தால் ஏறி கொண்டே போகும், இறங்க ஆரம்பித்தால் இறங்கி கொண்டே போகும்.  

65 எண்ணில் பெயர் அமைந்தால் – நல்ல சிந்தனை தெய்வ நம்பிக்கை ஏற்படும். யாரையும் சந்தேகிக்காத குணம் கொண்டவர்கள். நம்பியவர்களுக்கு தன்னால் முடிந்த அளவு உதவும் குணம் ஏற்படுத்தும். ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிரச்சனைகள் ஏற்படுத்தி விடும். 

74 எண்ணில் பெயர் அமைந்தால் – சாதிக்க கூடிய எண்ணாக இருந்தாலும்மனநிம்மதியை கொடு்க்காது. பேச்சாற்றலை கொடுக்கும். ஆனால் எதிர்பார்த்த லாபம் ஏற்படாது. உறவினர்களால் பாதகத்தை தந்து விடும். 

83 எண்ணில் பெயர் அமைந்தால் – நல்ல சௌகர்யங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். கையில் பணம் இல்லை என்றாலும் தைரியமாக எந்த வேலையிலும் இறங்கி அதில் லாபத்தை சம்பாதி்ப்பார்கள். சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைக்கும். 

92 எண்ணில் பெயர் அமைந்தால் – முயற்சித்து கொண்டே இருக்க வேண்டும். நண்பர்களால் லாபமும், நெருங்கிய பந்தத்தால் மனகசப்பும் ஏற்படும். அடுப்பு கரியை ஊதி ஊதி நெருப்பாக்குவது போல், இவர்களை ஊக்குவித்து கொண்டே இருக்க வேண்டும். 

101 எண்ணில் பெயர் அமைந்தால் – பெரிய லாபத்தை கொடு்க்காது. எடுக்கும் செயல் இழுப்பறியில் இருக்கும். எந்த வேலையும் முடியும் தருவாயில் இருந்தாலும் சட்டென்று சாதகமாக வராது.   

இப்போது நாம் இரண்டாம் எண்ணுக்குரிய பிறந்த தேதிக்கான பலனும், பெயர் எண்ணுக்கான பலனும் அறிந்தோம். பிறந்த தேதியை மாற்றும் சக்தியை இறைவன் நமக்கு தரவில்லை என்றாலும் பெயர் எண்ணை நல்ல எண்ணாக மாற்றும் வழியை தந்து இருக்கிறான்.  இதே போன்ற குழந்தைதான் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்து ஒரு குழந்தையை பெற்று கொள்ள இயலாது. ஆனால் இதுபோல் ஒரு நண்பர் வேண்டும் என்று சிந்தித்து தேர்வு செய்வது நம் கையில்தான் உள்ளது. அதுபோல,  பெயர் எண்ணை நமது நன்மைக்கேற்ப மாற்றி கொள்ளலாம். இந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக வருமா? என்று நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், உங்கள் ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சந்திரனின் ஆதிக்கம் எப்படியிருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜாதகம் இல்லாதவர்கள், பிறந்த தேதி, மாதம், வருடத்தின் உடல் எண் – உயிர் எண்ணை பார்த்து பெயர் எண்ணை வைக்க வேண்டும். அபபடி செய்தால்தான் நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் –  வெள்ளை, பச்சை அதிர்ஷ்ட ராசி கல் –  முத்து
அதிர்ஷ்ட எண் – 3, 6.

No comments:

Post a Comment