Wednesday 3 February 2016

சிறுநீரகத்தை காக்க.

சிறுநீரகத்தை காக்க...

நம் உடலின் சுத்திகரிப்புத் தொழிற்சாலை எது?' எனக் கேட்டால்  ‘சிறுநீரகங்கள்' என்று சுலபமாக பதில் சொல்லிவிடலாம். கூடவே, உடலில் அதிகரிக்கும் தண்ணீர் அளவைக் கட்டுப்படுத்துதல், ரத்தத்தில் கலக்கும் நச்சுக்களை வெளியேற்றுதல் என எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்படும் சிறுநீரகங்களின் நலனில் சிறிது அக்கறை செலுத்தினால், அது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதற்குப் பொருத்தமான, சிறுநீரகங்களைக் காக்கும்  ‘ஜில்’ டிரிங்க் குடித்துப் பழகுங்கள்.

கல்லைக் கரைக்கும் டிரிங்க்

தேவையானவை:

வாழைத்தண்டுச் சாறு - 1 டம்ளர், மோர் - கால் டம்ளர்,
வெள்ளரி விதைப் பொடி - 1 டீஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு.

செய்முறை:-
வாழைத்தண்டுச் சாறுடன் மோரைக் கலந்து, வெள்ளரி விதைப் பொடி மற்றும் இந்துப்பு கலந்து, வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.

குறிப்பு: சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள், தினமும் சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முறை அருந்துவது போதுமானது.

பலன்கள் :-
சிறுநீரகத்தைச் சுத்தம் செய்யும் சிறந்த பானம். இதைத் தொடர்ந்து பருகினால், 5 மி.மீ-க்கும் குறைவாக உள்ள சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றும். சிறுநீரகத்தைச் சுத்திகரித்து, உறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நார்ச்சத்து, நீர்ச்சத்து இருப்பதால், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
பித்தப்பையில் உள்ள கற்களைக் கரைக்கவும் இது உதவும்.
ஊட்டச்சத்துக்களை கிரகிக்கும்போது உருவாகும் யூரியா உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றும்.
வாழைத்தண்டு, முள்ளங்கி, முள்ளங்கி இலை, வெள்ளரிக்காய், நீர் மோர் போன்றவை சிறுநீரகத்தை ஆரோக்கியப்படுத்தும் உணவுகள்.

No comments:

Post a Comment