Wednesday 3 February 2016

காவல்துறைப் பணிகளில் இருப்பவர்கள் ஜாதகங்கள்.

நாட்டைக் காக்கும் காவல்துறை.

நாட்டையும், வீட்டையும் காக்கும் பெருமைமிகு காவல்துறைப் பணி மற்ற பணிகளைப் போன்றதல்ல. அது நாட்டைக்காக்கும் ஒரு பொறுப்பு மிக்க பணியாகும். நாட்டையும், நாட்டு மக்களையும் குற்றச் செயல்கள் புரிபவரிடம் இருந்து காத்து, சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் தலையாய கடைமையை உடைத்தாய் இருக்கிறது காவலர் பணி. நாட்டின்பால் ஏற்பட வேண்டிய ஆழமான, தியாக உணர்வும், பொறுப்புணர்வும் கொண்ட அதிகாரிகளைக் கொண்டது நமது இந்திய காவல்துறை. மக்கள், சட்டத்தை உடைத்துக் குற்றங்கள் செய்வதில் இருந்து அவர்களைத் தடுக்கும் முக்கியத் துறையாகும்.

இக் காரகங்கள் அனைத்துமே, செவ்வாய் மற்றும் குருவின் முக்கிய காரகங்கள் ஆகும். சட்டம், தியாகம், பொறுப்புணர்ச்சி, காத்தல் ஆகியவை குருவின் காரகங்களாகும். செவ்வாய் தைரியம், வீரம் மற்றும் சீருடைப் பணி ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும், அதுவே குற்றச் செயல்களுக்கும் காரணமாகிறது. எனவே இக் காரகங்கள் பலம் பெறும் போது, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவைக்கிறது. கொலைகார்ர்கள், கொள்ளையர்கள், கூலிப்படைகள், ஆள்கடத்துபவர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் ஆகியவர்களை உருவாக்குவது செவ்வாய் மற்றும் சனியின் தாக்கமே ஆகும்.

இத்தகைய குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, குற்றங்களைத் தடுப்பதே காவல்துறை அதிகாரிகளின் தலையாய கடமையாகிறது.

காவல்துறைப் பணிகளில் இருப்பவர்கள் ஜாதகங்களில், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களின் தாக்கம்  முக்கியமானதாக இருப்பதைக் காணலாம். ஆயினும், சனியின் தாக்கத்தையும் நாம் ஒதுக்கிவிட முடியாது. செவ்வாய் குரு மற்றும் சனியின் ஒன்றிணைந்த தாக்கங்கள் மற்றும் அவற்றின் கர்ம ஸ்தானத்துடனான தொடர்பு ஜாதகரை காவல்துறைப் பணிக்குத் தள்ளிவிடுகிறது எனலாம்.

இலக்னத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். அதுவே ஜாதகரின் தனித்திறன், உடலமைப்பு மற்றும் அவர் பொறுப்பு மிக்க பதவிக்குப் பொருத்தமானவரா ? – என்பதை உணர்த்துவதே இலக்னமாகும்.

அடுத்து, 6 ஆம் வீடு சட்டம் மற்றும் வழக்குகளைக் குறிகாட்டுகிறது. எனவே, 6 ஆம் வீடு இதற்குக் கூடுதலாக முக்கியப் பங்கு வகிக்கிறது.

இரண்டு மற்றும் 11 ஆம் வீடுகள் செல்வநிலை மற்றும் வருமானத்தைக் குறிகாட்டுகிறது. 10 ஆம் வீடு, 10 ஆம் அதிபதி, 10 இல் உள்ள கிரகம் மற்றும் நவாம்சத்தில் 10 ஆம் வீட்டில் உள்ள கிரகம், 10 ஆம் வீட்டைப் பார்க்கும் கிரகங்கள் ஆகிய அனைத்தின் தாக்கங்களும் அறியப்பட வேண்டும்.

சிம்மம் இலக்னமாகி, செவ்வாய், குரு இணைந்து இருக்க, மேற்சொன்ன மற்ற வீடுகளும் அனுகூலமாக அமைய ஜாதகர் புகழ் பெற்ற, வெற்றிகரமான, பிரபலமான, கடமை உணர்வுள்ள, கம்பீரமான மற்றும் கடினமான காவல்துறை அதிகாரியாகத் திகழ்வார்.

இதில், சனியும் சமமான முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், சனி பொதுஜனங்களைக் குறிக்கும், நாட்டு மக்களையும் குறிக்கும். அரசுப்பணியைக் குறிப்பதுவும் அதுவே ஆகும். நாட்டின் அமைதி காக்கும் அரசின் முக்கிய அங்கமே காவல்துறை ஆகும்.

இவ்வாறாக, 10 ஆம் இடத்தோடு 2 மற்றும் 11 ஆம் வீடுகளும், செவ்வாய், குரு மற்றும் சனியின் தொடர்புற வேண்டும்.

இராசி மற்றும் நவாம்சத்தில் நெருப்பு இராசிகளின் தொடர்பும் அவசியம் ஆகிறது. 2, 10 மற்றும் 11 ஆம் அதிபதிகளின், இராசி அல்லது நவாம்சத்தில் மேஷ, சிம்ம, தனுசு ஆகிய இராசிகளில் இடம் பெறுவது, காவல்துறை அதிகாரிகளின் ஜாதகத்தில் பலமாகக் குறிகாட்டுப்படுகிறது, விருச்சிக இராசியான நெருப்பு இராசி இல்லை எனினும், அதன் அதிபதி செவ்வாய், வெப்ப கிரகம் ஆதலால் அதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

உண்மையில் அரசைக் குறிக்கும் சூரியனும் காவல்துறைப் பணிக்கு உதவும் காரகர் ஆகிறார். காவல்துறை, அரசின் முழு அதிகாரத்திற்கு உரியது மற்றும் பலம் மிக்க  சக்தியையும் உடைத்ததாய் இருக்கிறது.

ஆத்ம காரகன், ஆத்ம காரகனின் சாரம் ஆகியவையும் முக்கிய பொறுப்பாகின்றன.
      
மேலே சொல்லப்பட்ட காரணிகளைத் தொகுத்துக் காணலாம்

1.   இலக்னம் – தனித்திறன், உயர்வுநிலை அல்லது ஏற்றநிலை, உடல் தகுதி மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.

2.   (அ) 10 ஆம் வீடு – தொழில் வீடு.
      (ஆ). 2 ஆம் வீடு – வருமான வழி.
      (இ). 11 ஆம் வீடு – வாழ்வாதாரம்.
      (ஈ). 9 ஆம் பாவம் – தொழிலுக்கு உதவும் அதிர்ஷ்டம்.(பாக்கியம்) தொழில்      மற்றும் சொத்து வருமானங்கள்.

3.    6 ஆம் பாவம் – வழக்கு, குற்றம், சண்டை. விபத்துக்கள், திருட்டுக் குற்றங்கள், கடன்கள், பாக்கிகள், சேவைகள், பதவி உயர்வுகள், பதவி இறக்கங்கள், பதவி       நீடித்தல், பதவி மாற்றங்கள் மற்றும் நீக்கங்கள்.

4.  குறிகாட்டிகள் – செவ்வாய், குரு, சனி ஆகியோர்.
  
5.  கை கொடுப்பவர் – சூரியன்.
  
6.   இராசி மற்றும் நவாம்சத்தில் – மேஷ, சிம்ம, விருச்சிக மற்றும் தனுசு    இராசிகள்.
  
7.   நட்சத்திரங்கள் – கிருத்திகை, மிருக சிரீடம், புனர்பூசம், பூசம், உத்திரம்,    சித்திரை, விசாகம், அனுஷம், உத்திராடம், அவிட்டம் மற்றும் பூரட்டாதி.
  
8.   அரசுவேலை  -- சூரியன் – சந்திரன் தாக்கம், 1 மற்றும் 6 அல்லது 10 ஆம் வீடு ஒன்று அல்லது வேறு வழிகளில் தொடர்பு கொள்ளுதல்.
 
9.  ஆத்ம காரகன் – (அ). ஆத்மகாரகன் இடம் பெறும் இராசி, நவாம்சம் மற்றும்     நட்சத்திரங்கள்.   (ஆ). ஆத்ம காரகனின்  சுய வீடுகள். (இ) . ஆத்ம காரகன்   இடம் பெற்ற வீடு.

No comments:

Post a Comment