வெற்றி தரும் அரிய மந்திரம் !!!
வெற்றி பெற்ற வழி பலரும் இன்று வெற்றி பெற்று கொண்டிருக்கும் வழி
இந்த வழியை பெறுவதற்கு நீங்கள் ஆகாயத்தை வில்லாக வளைக்க வேண்டாம். மணலை கயிறாக திரிக்க வேண்டாம். தனியான ஒரு இடம் அது உங்கள் அறையாக இருக்கலாம். தெருமுனையாக இருக்கலாம். அரைமணி நேரத்தை அதற்கென்று ஒதுக்கி விடுங்கள். காலையோ, மாலையோ, இரவோ எதுவாகவும் இருக்கலாம்
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா”
இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் ஆழமாக, மிக ஆழமாக இருபது நிமிட நேரம் தொடர்ச்சியாக சொல்லுங்கள்.
சில நாட்களிலேயே உங்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுவதை அறிவீர்கள். மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று சிலர் சொல்லலாம். அதற்கான பதிலை தேடி மனதை அலையவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆற்று சுழலில் அகப்பட்டு வெளியில் வர முயற்சிப்பவனுக்கு கையில் கிடைக்கும் கட்டை போன்றது இந்த மந்திரம்.
No comments:
Post a Comment