Tuesday, 5 September 2017

தந்திர யோகத்தின் 24 குறியீடுகள்

# தந்திர யோகத்தின் 24 குறியீடுகள் :-

எந்த ஒரு படிப்பாக இருந்தாலும் அதற்கென ஒரு பாடத் திட்டம் (சிலபஸ்) இருக்கிறது அல்லவா? தந்திர யோகத்திற்கும் இவ்வாறு ஒரு பாடத் திட்டத்தை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

தந்திர யோகத்தை முழுமையாகக் கற்றுக் கொள்ள நினைக்கும் ஒருவர் இந்த பாடத்திட்டத்தின்படி 24 வகையான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய திருக்கும். இவற்றையே தந்திர யோகத்தின் 24 குறியீடுகள் என்று கூறுகிறார்கள். அவை எவை எவை என்பதை சுருக்கமாகக் காணலாம்.

# இந்து ஆகமங்கள் கூறும் ஏழு குறியீடுகள் :-

தந்திர யோகத்தின் முதல் ஏழு குறியீடு களை இந்து ஆகமங்களான சைவ ஆகமங்கள், வைஷ்ணவ ஆகமங்கள், சாக்த ஆகமங்கள் ஆகியவற்றிலிருந்தே கற்றுக்கொள்ள முடியும்.

முதல் ஏழு குறியீடுகள் குறித்த விளக்கங் கள் ஆகமங்களில் பெரும்பாலும் சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் வடிவிலேயே இருக்கின்றன. சிவன் குருவாகவும், பார்வதிதேவி சிஷ்யை யாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆகமங்கள் கூறும் ஏழு குறியீடுகள் எவை?

1. படைப்பு

இந்த பிரபஞ்சம் எவ்வாறு படைக்கப் பட்டது? கிரகங்களும் பூமியும் எவ்வாறு உண்டாயின? உயிரினங்கள் எவ்வாறு உருவாகின என்பது போன்ற பல கேள்விகளுக்கான விடைகளைக் கூறுவதே முதலாம் குறியீடு!

2. அழிவு

உருவான அனைத்திற்குமே அழிவு என்ற முடிவு கட்டாயம் உண்டு. பிரபஞ்சத்தின் அழிவு, உலகத்தின் அழிவு, உயிர்களின் அழிவு போன்றவை எவ்வாறு நிகழும் என்பதை இந்த இரண்டாம் குறியீடு விளக்கமாக எடுத்துரைக்கின்றது.

3. வழிபாட்டு முறைகள்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வகையான வழிபாட்டு முறைகள் உள்ளன. வெவ்வேறு ஆகமங்களில் இவை விவரிக்கப்பட்டுள்ளன.

4. சாதனை

ஆண்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க விதிகள், பெண்களுக்கான ஒழுக்க முறைகள், சம்சாரிகள், துறவிகள், தலைவர்கள்,
அரசர்கள் என ஒவ்வொரு வகையினரும் பின்பற்ற வேண்டிய ஒழுக்க முறைகளை இந்த சாதனை எனும் நான்காம் குறியீடு விளக்குகிறது.

5. புனஸ்கரணம்

ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சடங்கு முறைகளைக் கூறுவதே "புனஸ் கரணம்' என்ற தந்திர யோகக் குறியீடு. சைவ ஆகமங்களில் ஒருவகை புனஸ்கரணமும், வைணவ ஆகமங்களில் வேறுவகை புனஸ் கரணங்களும், சாக்த, பௌத்த ஆகமங் களில் மிகவும் வேறுபட்ட வேறுவகையான சடங்கு முறைகளும் தரப்பட்டுள்ளன. ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக உள்ளாரோ, அந்த மத ஆகமங்கள் கூறும் புனஸ்கரணங் களே அவருக்கு விதிக்கப் பட்டவை.

6. ஷட் கர்மங்கள்

"ஷட்' என்றால் "ஆறு' என்று பொருள். தந்திர யோகம் பயிலுபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஆறு வகையான வித்தைகளையே ஷட் கர்மங்கள் என வகைப்படுத்தி யுள்ளனர். பிற ஆகமங்களை விட சாக்த ஆகமங்களிலேயே இந்த  ஷட் கர்மங்கள் குறித்த விரிவான விளக்கங்கள் உள்ளன.

இதில் கூறப்பட்டுள்ள ஆறு வகையான கருமங்களும் பிளாக் மாஜிக் எனப்படும் எதிர்மறை வித்தைகளாகும். தந்திர யோகத்தை நல்ல வழியில் பயன்படுத்தி முக்தி நிலையை அடைய விரும்புகிறவர்கள் இந்த கர்மங்களின் பக்கமே திரும்ப மாட்டார்கள்.

தந்திர யோகத்தை தீய வழிகளில் பயன் படுத்தி பணம், புகழ் ஆகியவற்றை அடைய விரும்பும்  கீழான மனோபாவம் கொண்டவர் கள் இந்த ஷட் கர்மங்களை மட்டுமே  இறுகப் பற்றிக் கொள்கிறார்கள். இது பாவ கர்மாக்களைக் கொண்டு சேர்க்கும். ஆன்மிக வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.

தந்திர யோகம் கூறும் ஆறு வகையான கர்மங்கள் (வித்தைகள்) எவை என்பதை சுருக்கமாகக் காணலாம்.

கர்மம்- 1 சாந்தி

தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்தும் தந்திர வித்தையே "சாந்தி' எனப் படுகிறது. தந்திர யோக வழிபாடுகளில்- குறிப்பாக சாக்த மத வழிபாடுகளில் பல உக்கிரமான தெய்வங்களை (காளி) வழிபடுகிறார்கள்.

இந்த உக்கிரமான தெய்வங்களின் உக்கிரத்தைக் குறைத்து, சாந்தப்படுத்தி நமது கோரிக்கைகளுக்கு அவர்களை செவி சாய்க்க வைக்கும் வழிமுறைகளைக் கற்றுத் தரும் வித்தையே சாந்தி என்ற கர்மம்.

கர்மம்- 2 வசீகரணம்

வசீகரணம் என்றால் வசியப்படுத்துதல். மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை வசியப்படுத்தும் முறைகளோடு இயற்கை, சிறு தெய்வங்கள் ஆகியவற்றை வசியப்படுத்தும் முறைகளும் வசீகரணத்தில் விளக்கப்படுகின்றன.

கர்மம்- 3 மாரணம்

தனது பகைவர்களுக்கு மரணத்தை விளைவிக்கும் மாந்திரீக முறையே மாரணம் எனப்படுகிறது.

கர்மம்- 4 உச்சாடனம்

தீய சக்திகளை- பேய், பிசாசுகளை விரட்டும் மாந்திரீக முறையே உச்சாடனம்.

கர்மம்- 5 ஸ்தம்பனம்

தனது தந்திர யோக வலிமையால் எதிரி களை ஸ்தம்பிக்கச் செய்வது- அவர்களது செயல்களை முடக்குவதே ஸ்தம்பனமாகும். மனிதர்களை மட்டுமின்றி பிற உயிர்களை யும், சிறு தேவதைகளையும்கூட ஸ்தம்பிக்கச் செய்யும் வழிமுறைகள் உள்ளன.

கர்மம்- 6 வித்வேஷணம்

கொடூரமான- தீய ரத்தவெறியை உருவாக் கும் மாந்திரீகப் பயிற்சி வித்வேஷணம் எனப் படுகிறது. மனிதர்களிடம் மட்டுமின்றி, பிற உயிர்களிடத்தும் இந்தப் பயிற்சியால் ரத்தவெறியை உருவாக்க முடியும். உதாரணமாக ஒரு யானைக்கு மதம் பிடிக்கச் செய்து எதிரியைக் கொல்ல ஏவிவிட முடியும்.

இந்த ஷட் கர்மங்கள் அனைத்துமே பாவ கர்மாக்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.  வாம முறையில் செல்பவர்கள் மட்டுமே இவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். தட்சிண முறை தந்திர யோகத்தில் இந்த ஷட் கர்மங்களுக்கு இடமில்லை.

7. தியான யோகம்

தந்திர யோகத்தின் ஏழாவது குறியீடான தியான யோகம், தியானம் குறித்தும் யோக சாதனைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறது.

யாமளைகள் கூறும் எட்டு குறியீடுகள்

தந்திர யோகத்தின் முதல் ஏழு குறியீடுகளும் ஆகமங்களில் விளக்கப்பட்டுள் ளன. அடுத்த எட்டு குறியீடுகள் (8 முதல் 15 வரை) யாமளைகளில் விவரிக்கப்பட்டுள்ளன. அவை எவை என்பதை சுருக்கமாகக் காணலாம்.

8. படைப்பு பற்றிய விளக்கங்கள்

யாமளைகள் கூறும் படைப்பு பற்றிய விளக்கங்களில் சில இன்றைய நவீன விஞ்ஞானம் கூறும் விளக்கங்களுக்கு ஒத்து வருகின்றன. சில விளக்கங்கள் நவீன அறிவியலால் சாத்தியமற்றவை என ஒதுக்கத்தக்கதாக உள்ளன.

9. கோள்கள், விண்மீன்கள் பற்றிய வர்ணனைகள்

நவீன டெலஸ்கோப்புகள், கருவிகள் எதுவுமின்றி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது ஞானிகள் கோள்கள் குறித்தும் விண்மீன்கள் குறித்தும் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். அவை குறித்து யாமளைகள் விளக்குகின்றன.

10. தினசரி சமயச் சடங்குகள்

ஒவ்வொரு மதத்தினரும் தினசரி செய்ய வேண்டிய பூஜைகள், சடங்குகள் இந்த 10-ஆம் குறியீட்டில் விளக்கப்படுகின்றன.

11. பரிணாம வளர்ச்சி

நவீன விஞ்ஞானத்தில் 18-ஆம் நூற்றாண் டில்தான் பரிணாம வளர்ச்சி  தத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது. சார்லஸ் டார்வினை பரிணாம வளர்ச்சியின் பிதாமகன் என்று கொண்டாடுகிறோம். ஆனால் டார்வினுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்ட யாமளைகளில் பரிணாம வளர்ச்சித் தத்துவம் விளக்கப்பட்டுள்ளது.

12. சூத்திரங்கள்

கணிதம், வான இயல், கட்டடக் கலை போன்ற பல துறைகளில் பயன்படக்கூடிய பலவிதமான சூத்திரங்கள் (ஃபார்முலாக்கள்) இந்த 12-ஆவது குறியீட்டில் தரப்பட்டுள் ளன. நமது கோவில்கள், நாம் பயன்படுத்தும் யந்திரங்கள் போன்றவை இந்த சூத்திரங் களின் அடிப்படையிலேயே அமைக்கப்படு கின்றன.

13. வர்ண பேதம்

வர்ண பேதங்கள் எவ்வாறு உருவாகின- ஒவ்வொரு வர்ணத்தவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிமுறைகள் ஆகியவை இதில் விளக்கப்படுகின்றன.

14. சாதி பேத தர்மங்கள்: (தர்ம விதிகள்)

15. யுக தர்மங்கள்

ஒவ்வொரு யுகத்திலும் மனிதர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகள்.

தந்திர யோகக் குறியீடுகள் 1 முதல் 7 வரை ஆகமங்களிலும்; 8 முதல் 15 வரை யாமளைகளிலும் கூறப்பட்டுள்ளன என்பதைக் கண்டோம். மீதமுள்ள குறியீடு கள் (16 முதல் 24 வரை) நிகமங்களிலும், பிற தந்திர யோக நூல்களிலும் விளக்கப்பட்டுள் ளன. நிகமங்களில் பார்வதி குருவாகவும் சிவன் சீடனாகவும் உருவகம் செய்யப் பட்டுள்ளனர்.

16. மந்திரங்கள்

பல்வேறு மந்திரங்கள், அவற்றின் செயல் முறைகள், எந்த மந்திரத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பனவற்றை இந்த குறியீடு  விளக்குகிறது.

17. யந்திரங்கள்

கோடுகள், எழுத்துகள், எண்கள் ஆகியவற்றால் பலவகையான யந்திரங்களை உருவாக்க முடியம். உதாரணமாக ஸ்ரீ சக்கரத்தைக் கூறலாம். இந்த யந்திரங்கள் அபரிமிதமான சக்தியை உருவாக்குபவை. இந்த யந்திரங்களை அமைக்கும் முறைகள், உருவேற்றும் வழிகள், பலன்கள் ஆகியவை இந்த 17-ஆவது குறியீட்டில் உள்ளன.

18. கடவுள்கள் மற்றும் அவர்களது துணைவியர் பற்றிய வர்ணனைகள்

நமது கலாசாரத்தில் சக்தியையே கடவுள் களாக உருவகப்படுத்தியுள்ளனர். சக்தி பல வடிவங்களாகவும், பல நிலைகளிலும் உள்ளது. ஒவ்வொரு வகையான சக்தியும் ஒவ்வொரு கடவுளாக உருவகப் படுத்தப் பட்டுள்ளது.

எந்த ஒரு சக்தியாக இருந்தாலும் அதனுள் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரு சக்திகள் மறைந்துள்ளன. இந்த இரண்டும் இணையும்போதே சக்தி செயல்படத் துவங்கும். (உதாரணமாக மின்சார சக்தி).

நவீன விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப் பட்டதாகக் கருதப்படும் இந்த நேர் சக்தி, எதிர்சக்தி தத்துவம் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்னரே நமது முன்னோர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் நமது இந்தியக் கடவுள்கள் அனைவருமே ஆண் (நேர்சக்தி), பெண் (எதிர்சக்தி) என ஜோடி ஜோடியாக உள்ளனர்.

இந்தக் கடவுள்கள், அவர்களது துணை ஆகியவற்றை விளக்குவதே 18-ஆவது குறியீடு.

19. தீர்த்த தலங்களும் அவற்றின் தன்மைகளும்

மலைகள், ஆறுகள், கடல்கள் ஆகியவற்றின் அருகிலுள்ள சில இடங் களில் சக்தியின் அளவும், வெளிப்பாடும் மிகமிக அதிக நிலையில் இருக்கும். இந்த இடங்களையே தீர்த்த தலங்களாக நமது முன்னோர்கள் அமைத்தனர்.

ஒவ்வொரு தீர்த்த தலத்தின் சக்திநிலை, அந்த சக்தியின் தன்மைகள்,  அந்த இடத்திற்குச் சென்று வழிபடும் முறைகள், அதன் நன்மைகள் ஆகியவற்றை இந்த 19-ஆவது குறியீடு விளக்குகின்றது.

20. விரத அனுஷ்டானங்கள்

விரதங்களுக்கு இந்திய கலாச்சாரத்தில் மிக முக்கியமான இடமுண்டு. விரதங்களால் நமது சக்திநிலை உயரும். உடலும் மனமும் பண்படும். இந்த விரதங்களை அனுஷ்டிக்கும் முறைகளை 20-ஆவது குறியீட்டில் காணலாம்.

21. புனிதமானவை- புனிதமற்றவை

இந்திய கலாச்சாரத்தில் மட்டுமின்றி, தொன்மையான அனைத்து கலாச்சாரங்களிலும் சில பொருட்களைப் புனிதமானவை எனக் கொண்டாடும் வழக்கமும்; சிலவற்றை புனிதமற்றவை   என விலக்கி வைக்கும் பழக்கமும் உள்ளது. எவை எவை புனிதமானவை- எவை         எவை புனிதமற்றவை என்பதையும் அதற்கான காரணங்களையும் தந்திர யோகத்தின் 21-ஆவது குறியீடு  பட்டியலிடுகிறது.

22. அரசர்களுக்கான தர்ம நெறிகள்

"அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி' என்பது பழமொழி. ஒரு நாட்டை ஆளும் அரசன் தர்மநெறிகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தால்தான் அந்த நாடும் மக்களும் நலமாக இருக்க முடியும். அரசர்களுக்கான தர்மங்கள், நெறிகள் 22-ஆம் குறியீட்டில் விளக்கப் பட்டுள்ளன.

23. சாதாரண மக்களுக்கான தர்ம நெறிகள்

24. ஞானம் குறித்த விளக்கங்கள்

தந்திர யோகம் கற்றுக்கொள்ள விரும்பும் ஒருவர் இந்த 24 குறியீடுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment