திருமணத்தடை நீக்கும் சக்தி வாய்ந்த எளிய பரிகாரங்கள்
உரிய வயது வந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆணோ பெண்ணோ யாரும் இந்தப் பரிகாரங்களைச் செய்து பலனடையலாம்.
1.ஏதேனும் ஒரு ஞாயிறு,செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று அம்பாள் ஆலயம் சென்று தேவியின் திருவடியில் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்று மந்திரம் ஜெபித்தபடியே குங்குமம் இடவும்.பின் சில நிமிடங்கள் அம்மன் முன் அமர்ந்து அந்தக் குங்குமத்தை எடுத்து ஒரு குங்குமச் சிமிழில் வைத்து வீட்டிற்கு எடுத்து வந்து அந்தக் குங்குமத்தைக் குளித்து முடித்த பின் தினமும் அணிந்து வர விரைவில் திருமணமாகும்.
இதை ஆலயத்தில் செய்ய முடியாதவர்கள் கீழ்க்கண்ட முறைப்படி வீட்டிலேயே செய்து பலன் பெறலாம்.
விளக்கேற்றி பஞ்சு அல்லது தாமரைத்தண்டுத் திரியில் கொஞ்சம் ஜவ்வாது தடவி அந்தத் திரியைக் கொண்டு விளக்கேற்றி "ஓம் ஆனைமுகன் வருக கலைமகள்,மலைமகள்,திருமகள் வருக தேவர்கள் யாவரும் சேர்ந்திங்கு வருக" என்ற துதியை 3 தடவை ஜெபித்து விளக்கிற்கு சாம்பிராணி அல்லது ஊதுவத்தி தூபம் காண்பித்து விளக்கின் பாதத்தில் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்று மந்திரம் ஜெபித்தபடியே குங்குமம் இடவும்.பின் சில நிமிடங்கள் விளக்கின் மும் அமர்ந்து விரைவில் நல்ல இடத்தில் திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டியபின் அந்தக் குங்குமத்தை வழித்து எடுத்து ஒரு குங்குமச் சிமிழில் வைத்துக் கொண்டு அந்தக் குங்குமத்தைக் குளித்து முடித்த பின் தினமும் அணிந்து வர விரைவில் திருமணமாகும்.
2. ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்கள் 7 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் குரு ஹோரையில் அத்திமரத்தின் அடிப்பகுதியில் 7 மஞ்சள் நிறப் பூக்களைப் பன்னீரில் நனைத்துப் போட்டு வர விரைவில் திருமணமாகும்.
3.ஜாதகத்தில் சந்திர பலம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் விக்கிரகத்திற்கு 5 செந்நிறப் பூக்களை சமர்ப்பித்து வர விரைவில் திருமணமாகும்.
4.ஜாதகத்தில் செவ்வாய் பலம் இல்லாதவர்கள் 5 வாரங்களுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் விக்கிரகத்திற்கு 11 செந்நிறப் பூக்களை சமர்ப்பித்து வர விரைவில் திருமணமாகும்.
குங்குமப்பூ
5. 11 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் அதிகாலையில் குளிக்கும் நீரில் கொஞ்சம் குங்குமப்பூ போட்டுச் சில நிமிடங்கள் கழித்துக் குளித்து வர விரைவில் திருமணமாகும்.
பிரிஞ்சி இலை
6.ஒரு கவர் அல்லது பேப்பரில் 9 பிரிஞ்சி இலைகளை எடுத்து வைத்துக் கொண்டு உறங்கும் பொழுது தலையணையின் அடியில் வைத்து உறங்கி வர விரைவில் திருமணமாகும்.
7.சனிக்கிரகம் ஜாதகத்தில் சுப பலன்களைத் தராத காரணத்தினால் திருமணத் தடை உள்ளவர்கள் திங்கட்கிழமை தோறும் சிகப்பு நிற ஆடைகள் அணிந்து வரத் சனீச்வரரால் உண்டான தடைகள் விலகி விரைவில் திருமணமாகும்.