Tuesday, 23 February 2016

சிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள்

சிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. சிறுநீரக நோய்கள்பற்றிய விழிப்பு உணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே சிறுநீரக தினத்தின் நோக்கம். இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி சிறுநீரக தினம்.

சிறுநீரகத்தால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.செழியன் பேசுகிறார்.

''மனிதனுடைய தண்டுவடத்தின் இருபுறமும் பக்கவாட்டில் பீன்ஸ் விதை வடிவில் அமைந்திருக்கும் உறுப்பு சிறுநீரகம். பொதுவாக பெரியவர்களின் சிறுநீரகம் 11 முதல் 14 செ.மீ. நீளமும், 6 செ.மீ. அகலமும் இருக்கும். ஆண்களின் சிறுநீரகம் ஒவ்வொன்றும் 125 முதல் 170 கிராம் எடை கொண்டது. பெண்களுக்கு 115  முதல் 155 கிராம் எடை இருக்கும்.  இதயத்தில் இருந்து வெளியாகும் ரத்தத்தில் 20 முதல் 25 சதவிகிதத்தை சிறுநீரகம் பெறுகிறது. தினமும் நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் தண்ணீரை சுத்திகரித்து, வெளியேற்றி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் நெஃப்ரான்கள் உள்ளன. இவைதான் ரத்தத்தில் இருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்று கின்றன. இது தவிர, மேலும் பல பணிகளை சிறுநீரகம் செய்துவருகிறது.

சிறுநீரகப் பிரச்னை ஆரம்பத்திலேயே தெரியாது. பிரச்னை முற்றிய நிலையில்தான் அதன் அறிகுறிகள் தெரியவரும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டால், அது சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும். அதனால் இதை 'சைலன்ட் கில்லர்’ என்றுகூட சிலர் வர்ணிப்பார்கள். சிறுநீரகத்தைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. சிறுநீரகத்தைப் பாதுகாக்க எளிய 7 பொன் விதிகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடித்தாலே போதும்.

1. ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தல்

உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும். உங்கள் ரத்த அழுத்த அளவு 129/89 என்ற அளவில் இருந்தால், உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் இதைத் தவிர்க்கலாம். உங்கள் ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும்.

2. ரத்தத்தில் சர்க்கரை அளவு

சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாக செயலிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

3. ஆரோக்கிய உணவு மற்றும் உடல் எடைக் கட்டுப்பாடு

சத்தான சமச்சீரான உணவைச் சாப்பிட்டு, உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பது சிறுநீரகப் பாதிப்புடன் தொடர்புடைய சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பையும் தவிர்க்கும். உடல் எடை அதிகரிப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ரத்த அழுத்தத்தை உப்புச் சத்து தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். பதப்படுத்தப்பட்ட மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து, காய்கறி மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். இது உடம்பில் ஏற்கெனவே அதிகப்படியாகச் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும். 'ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே.

வாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் என்று மாற்று மருத்துவத்தில் கூறப்படுகிறது. வாழைத் தண்டில் உள்ள டையூரிடிக்ஸ் (Diuretics) என்கிற பொருள் அதிக சிறுநீர் கழித்தலைத் தூண்டி, சின்னச் சின்னக் கற்களை வெளியேற்றிவிடுகிறது. 

4. குடிநீர் அளவு

வெப்பப் பிரதேசமான நம்முடைய நாட்டில் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். (சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அளவு முறை பொருந்தாது. எனவே அவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும்). அதற்காக ஒரே மூச்சில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவதும் தவறு. ஒரு நாளில் அவ்வப்போது அளவான முறையில் தண்ணீர் அருந்துவதுதான் சரியான முறை.

இன்றைய சூழலில் நிறைய பேர் ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால், அவர்களுக்கு தாகம் எடுப்பது இல்லை. ஏ.சி. அறையில் இருந்தாலும் சரி, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படித் தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் வெளியேற்றம் சீராக நடக்கும். சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் பெருமளவில் குறையும். சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

5. புகை பிடிக்காதீர்கள்!

புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

6. சுய மருத்துவம் வேண்டாம்

மூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும். மாற்று மருத்துவம் என்ற பெயரில் தகுதிஇல்லாத ஒரு சிலர் தயாரிக்கும் லேகியங்களில் அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இந்த உலோகங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடியவை. எனவே, கவனம் தேவை.

7. உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அறிய...

சிறுநீரக நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய எந்தத் தொழில்நுட்பமும் இல்லை. எனவே, 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உடையவர்கள் மற்றும் ஒரு முறைக்கு மேல் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள் - சீரான கால இடைவெளியில், சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

ரத்தம் - சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனையுடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் சிறுநீரகச் செயல்பாட்டினைத் தெரிந்துகொள்ளலாம்.

இதயம், கல்லீரல் பாதிப்பு, அதிக ரத்த சோகை போன்றவையும்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கும். 50 வயது கடந்த ஆண்களுக்கு விந்துச்சுரப்பியில் (ப்ராஸ்டேட்) ஏற்படும் வீக்கத்தால் சிறுநீரகப் பிரச்னை வரலாம். எனவே, இவர்கள் மருத்துவரின் ஆலோசனையை முன்கூட்டியே பெறுவது நல்லது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால், வாரத்துக்கு மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சில சமயம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளவுக்குக்கூட இது கொண்டுபோய் விட்டுவிடும். எனவே, ஏழு பொன்விதிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால் சிறுநீரகப் பிரச்னை வராமல் காத்துக்கொள்ள முடியும்.

வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடும் முறை!

வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடும் முறை!

உலகில் வாழ்ந்து வரும் மாந்தர்கள் அனைவரையும் அவரவர் முற்பிறவி கர்மாக்களின்படி படைத்து வருபவர் அயன் என்ற பிரம்மன்.

அவ்வாறு படைக்கப்பட்ட மாந்தர்களை காத்து வருபவர் மால் என்ற மஹாவிஷ்ணு.

மாந்தர்களின் அனைத்து கர்மவினைகளையும் அழித்து முக்தியைத் தருபவர் ருத்ரன்.

இந்த மும்மூர்த்திகளையும் அந்த சதாசிவன் சார்பாக நிர்வாகித்து வருபவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்.ஸ்ரீகால பைரவப் பெருமானின் உயர்ந்த அவதாரமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!!

நமது மூளையில் இருக்கும் ரத்த சிகப்பணுக்களை இயக்குபவர் சூரியபகவானே! ஒவ்வொரு ஜாதகருக்கும் ஆத்மாக்காரகனாக இருந்து நமது ஆத்மாவை இயக்கி வருபவர் சூரியபகவான்;அப்பேர்ப்பட்ட சூரியனுக்குள் இருந்து அருள்பாலித்து வருபவள் ஸ்ரீகாயத்ரிதேவி;

ஆனால்,சூரியனின் பிராண தேவதையாக இருப்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்! அனைத்து குலதெய்வங்களுக்கு அருளாற்றலை நொடி தோறும் வழங்கிக் கொண்டிருப்பவரும் இவரே!பழங்காலத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்களும் மற்றும் ஏராளமான குறுநில மன்னர்களும் தமது பொக்கிஷ அறையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை ஸ்தாபித்து,வழிபட்டு வந்துள்ளனர்;

இந்த வழிபாடு அவ்வளவு ரகசியமாக செய்து,வளமோடும், வலிமையோடும்,
சகல சம்பத்துக்களோடும் வாழ்ந்து வந்துள்ளனர்;

இந்த வழிபாட்டைப் பின்பற்றுபவர்கள் ஒரு போதும் அசைவம் சாப்பிடக்கூடாது;ஆண்கள் எனில்,மதுப்பழக்கம் அறவே இருக்கக்கூடாது;எவ்வளவுக்கெவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டைச் செய்து வருகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு விரைவான பலன்கள் நமக்குக் கிட்டும்;

எவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டை செய்கிறோமோ, அவ்வளவு விரைவாக நமது பொருளாதார நெருக்கடிகள் விலகும்;

கடன்கள் தீரும்;

அரசு வேலை கிடைக்கும்;

நிறுவனம் வளர்ச்சியடையும்;

வராக்கடன் வசூலாகும்;

ஆரோக்கியம் மேம்படும்;

தெரியாத குலதெய்வத்தை அறிந்து கொள்வீர்கள்;

கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்;

பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவர்;

அவ்வாறு ஒன்று சேர்ந்தப் பின்னர் ஒருபோதும் அவர்களிடையே மனக்கசப்பு வராது

குழந்தைகளின் முரட்டுசுபாவம் படிப்படியாக மாறும்;

சுருக்கமாகச் சொன்னால் நமது நியாயமான லட்சியங்கள்/கோரிக்கைகள் நிறைவேறும்;கடந்த மூன்று வருடங்களில் இந்த வழிபாட்டை உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் செய்து வருகின்றனர்;அவ்வாறு தொடர்ந்து வீட்டில் வழிபட்டதால், ஒவ்வொருவருக்குமே மேற்கூறிய பலன்களில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பலன்கள் கிடைத்துள்ளன;கிடைத்து வருகின்றன;

18 வயது நிரம்பிய எவரும் இந்த வழிபாட்டை தினமும் பின்பற்றலாம்;தம்பதியர் ஒன்றாக தினமும் இந்த வழிபாட்டை தினமும் பின்பற்றி வந்தால் சற்றும் எதிர்பாராத அபரிதமான பலன்கள் கிட்டும்;சாதி,சமய வேறுபாடுகள் இன்றி பக்தி உணர்வு உள்ள எவரும் இந்த வழிபாட்டைப் பின்பற்றலாம்;

கையால் செய்யப்பட்ட வெல்லக்கட்டிகள் குறைந்தது இரண்டு;
மஞ்சள் துண்டு, (வசதியுள்ளவர்கள் மஞ்சள் பட்டுத்துண்டு),மண் அகல்விளக்கு ஒன்று,சுத்தமான பசுநெய் குறைந்தது 250 மிலி,சந்தன வாசம் தரும் பத்தி பாக்கெட் பெரியது இரண்டு,அரைக்கப்பட்ட சந்தனம் குறைந்தது ரூ.10/-க்கு,எவர்சில்வர் கிண்ணம் ஒன்று,காகிதத்தில் செய்யப்பட்ட தட்டுக்கள் 100(கிராமப்பகுதியில் வசிப்பவர்கள்/வீட்டிற்குள்ளேயே வாழைத்தோட்டம் வைத்திருப்போர் வாழை இலையை தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.(இவைகள் அனைத்தையும் மூன்று மாதத்திற்குத் தேவையான அளவுக்கு வாங்கி வைத்துக்கொள்வது உத்தமம்)

தினமும் காலை 4.30 மணி முதல் காலை 8 மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்துவருவது உத்தமம்.

வீட்டின் பூஜையறையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் போட்டோவை வடக்கு நோக்கி வைத்துக் கொள்ள வேண்டும்;அந்தப் படத்தின் அருகில் கிழக்கு நோக்கி( ஒரு மஞ்சள் துண்டின் மீது-இந்த வழிபாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்;

ஒருபோதும் வேறு எந்த காரியத்திற்கும் இதைப் பயன்படுத்தக்கூடாது) அமர்ந்து கொள்ள வேண்டும்; செவ்வரளி மாலையை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்க வேண்டும்;(தினமும் முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை மட்டுமாவது). கிழக்கு நோக்கி மண்விளக்கில் நெய்தீபம் ஏற்ற வேண்டும்; சந்தனத்தை தண்ணீரில் குழைத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் நெற்றியில் நமது மோதிர விரலால் வைக்க வேண்டும்;

பிறகு அவரது பாதத்திலும்,பிறகு ஸ்ரீஸ்ரீசொர்ணதாதேவியின் நெற்றி,சூலாயுதம்,அமிர்தகலசம் போன்றவைகளில் வைக்க வேண்டும்;குங்குமம் வைக்கக் கூடாது;பிறகு,சந்தனப் பத்தியை பொருத்தி அவருக்குக் காட்ட வேண்டும்;பத்தி ஸ்டாண்டில் வைத்துவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி/1008 போற்றியை ஜபிக்க வேண்டும்.(வாய்விட்டுப் பாடக்கூடாது)

இவ்வாறு பாடுவதற்கு முன்பே,வீட்டில் சமையல் முடிந்திருந்தால்,நாம் சாப்பிடுவதற்கு முன்பாக ஒரு கிண்ணத்தில் சாதத்தை வைக்க வேண்டும்;அத்துடன் கொஞ்சம் வெல்லத்தூளைச் சேர்க்க வேண்டும்;இந்த வெல்லத்தூள் சேர்த்த சாதக்கிண்ணத்தை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்;பல வீடுகளில் மேலே கூறியபடி வழிபாடு செய்யும் போது சமைத்திருக்க மாட்டார்கள்;

எனவே, இந்த வழிபாடு முடித்துவிட்டு, எப்போது சமையல் நிறைவடைகிறதோ அப்போது மேலே கூறியவிதமாக படையலை வைக்க வேண்டும்.

இரவில் தூங்குவதற்கு முன்பு(வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி சுற்றிப் போடுவதற்கு முன்பு)  படையலாக காலையில் வைத்த வெல்லம் கலந்த சாதத்தை கிண்ணத்தில் இருந்து இன்னொரு கிண்ணம் அல்லது காகிதத் தட்டில் கொட்டி,வீட்டிற்கு வெளியே ஓரமான இடத்தில் வைத்துவிட வேண்டும்.பல நாட்கள்/வாரங்கள் கழித்து பைரவர் வந்து இந்தப் படையலைச் சாப்பிடுவதைக் காண்பீர்கள்; அதுவரை ஒவ்வொரு நாளும் நாம் வீட்டிற்கு வெளியே படையல் வைப்பதோடு நமது வழிபாடு நிறைவடைந்துவிடுகிறது.

இந்த வழிபாட்டுமுறையை செய்து வரும் நாட்களில் தீட்டு நிகழ்ச்சிகளில்(ஜனனம்,ருது,சிவனடி சேர்தல்) கலந்து கொண்டால் 30 நாட்களுக்கு இந்த வழிபாட்டுமுறைக்கு விடுமுறை விடுவது அவசியம்;

பல குடும்பங்களுக்கு ஒரே ஒரு அறைதான் வீடாகவே இருக்கிறது;அவர்கள் அந்த ஒரே ஒரு அறையில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்;பெரும்பாலும் இல்லத்தரசிகளே செய்வது நன்று;அவ்வாறு இல்லத்தரசிகள் வழிபாடு செய்து வரும் நாட்களில்,உடன் தமது மகளுக்குப் பயிற்றுவிப்பது நன்று; ஏனெனில்,மாதத்தில் சில நாட்களில் தனக்குப் பதிலாக தமது மகளைக் கொண்டு(மாற்று ஆள்) வழிபாடு செய்து கொள்ளலாம்;

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது,ஒவ்வொரு 180 நாட்களுக்கு ஒருமுறையும்,நமது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்துவிடும்;அல்லது நமது நியாயமான நீண்டகால ஏக்கங்கள் நிறைவேறத் துவங்கும்;

குறைந்தது மூன்று ஆண்டுகள் வரையிலும்,அதிகபட்சம் நமது ஆயுள் முழுவதும் வீட்டில் இந்த வழிபாட்டைச் செய்து வர சகல சம்பத்துக்களும் நம்மைத் தேடி வரும்;அவ்வாறு வரும் சம்பத்துக்கள் மூன்று தலைமுறை வரை நிலைத்து நிற்கும்;

தொலைதூர மாநிலங்கள், அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மேலே கூறிய பொருட்களில் ஏதாவது ஒருசில பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுவர்;அவர்கள் நெய்தீபம் ஏற்றிவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி/1008 போற்றி/சொர்ணபைரவ அஷ்டகம் இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் தினமும் பாடிவருவது போதுமானது.

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்கப்படும் செவ்வரளி மாலையை 24 மணி நேரத்திற்குள் எடுத்துவிட வேண்டும்;காய்ந்த பூக்கள் ஒருபோதும் அவரது படத்தின் மீது இருக்கக் கூடாது;இவருக்கு ஒருபோதும் மல்லிகைப் பூக்கள் அணிவிக்கக்கூடாது.

கோவிலில் வழிபட ஏற்றவர் ஸ்ரீகாலபைரவர்;வீட்டில் வழிபட உகந்தவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

Monday, 22 February 2016

சந்திரகலை என்றால் என்ன?

சந்திரகலை என்றால் என்ன?
=========================

இடது நாசிச்(.இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்( .வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும். நன்றி.

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.

நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்

நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும்
காற்று குளிர்ச்சியாக இருக்கும்.வலது நாசி
சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக
இருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக்
காற்று வந்தால் சுழிமுனை என்பர்.பொதுவாக
மழைக் காலங்களில் இயற்கையாகவே
சூரியகலையில் ஓடும். ஆதிக வெயில்
அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும். இது
இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும்.

ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும்
சமநிலையில் இருக்க வேண்டும்.இதில்
எந்த குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில்
பல உபாதைகள் ஏற்படும். ஒருவருக்கு
சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று
நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம்
சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள்
தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில்
மரணம் சம்பவிக்கும். மூச்சுப் பயிற்சி மூலம்
சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால்
ஆயுள் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க
ஆயுள் குறையும். சுவாசத்தை அடக்குவதால்
ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள்
உயிருடன் வாழ்கின்றன. நாம் நடக்கும் போது
16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12
அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும்,
உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு
கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம்
நடைபெறுகிறது.

சுவாசம் 11 அங்குலமாக குறைந்தால் உலக
இச்சை நீங்கும்.
10 அங்குலமாக குறைந்தால் ஞானம்
உண்டாகும்.
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி
காண்பான்.
7 அங்குலமாக குறைந்தால் ஆறு
சாஸ்திரங்கள் அறிவான். 6அங்குலமாக
குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாக குறைந்தால் காய சித்து
உண்டாகும்
4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து
உண்டாகும்.
3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட
சஞ்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு
கூடுபாய்தல் சித்திக்கும்.
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்,
உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை
அன்னபாணம் நீங்கும்

இந்த சூரிய சந்திரக்கலை மூச்சு
ஓட்டங்களால் நமது உடம்பில் உள்ள
குண்டலினி சக்தி உடலின் தட்பவெப்ப
நிலையில் 98.4 டிகிரியாக ஒரே சீருடன்
வைத்து உடலை இயங்கச் செய்கிறது. இந்தத்
தத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு
பிராணிகளின் உடல் வெப்பநிலைகள்
வெவ்வேறு விதமாக அமைகிறது. ஒவ்வொரு
ஜீவன்களிலும் உறைந்து உள்ள குண்டலினி
சக்தியானது அந்த அந்த உடலுக்கு ஏற்ற
தட்பவெப்ப நிலையைச் சீர்படுத்தி சமமாக
இயங்கச் செய்கிறது. அதாவது உயிர்களின்
இயக்கத்தை குண்டலினி சக்தியே
நடத்துகிறது.

முறைப்படியான யோகாப்பியாசம் செய்து
சுழுமுனை நாடியை இயங்கச் செய்யும்
யோகிகளுக்கு சுவாசம் இருநாசிகளிலும்
சமமாக ஓடும். யோகாப்பியாசத்தில் நின்று
பன்னிரெண்டு ஆண்டுகள் இந்திரியத்தை
வெளியேற்றாமல் பிரம்மச்சரியம்
கடைபிடிப்பவாகளுக்கு மேதாநாடி இயங்க
ஆரம்பிக்கும். இப்படி மேதாநாடி இயக்கத்தில்
இருக்கும் நபர் முந்தைய பிறவியில் இனிவரும்
பிறவி வினைப்படி அனுபவிக்க வேண்டிய
இன்ப துன்பங்களை அறியக்கூடிய முக்கால
ஞானமும் ஏற்படும்.

இவர்களுக்கு ஜீவசக்தியானது ஓஜஸ்
சக்தியாக மாறி தேஜஸ் ஆக வெளியப்படும்.
இடகலை பிங்கலை, சுழுமுனை, சரஸ்வதி,
லட்சுமி, மேதா ஆகிய ஆறு நாடிகளும் புருவ
நடுவில் உள்ள ஆஞ்ஞா சக்கரத்தில்
சந்திக்கின்றன. இந்த ஆறு நாடிகளும்தான்
நமது உடலில் உள்ள 100க் கணக்கான
நாடிகளையும் நரம்புகளையும் ஏதோ ஒரு
விதத்தில் சம்பந்கப்படுத்தி இயங்க
வைக்கிறது. எனவே தான் பதஞ்சலி யோக
சூத்திரத்தில் புருவ மத்தியில் கவனம்
செலுத்தி தியானம் செய்யும் படி கூறப்பட்டு
உள்ளது.

அப்படி நாம் தியான யோகத்தைப் பழகும்
போது இயற்கையாகவே பிரம்மச்சரிய
ஒழுக்கம் வந்தமையும் இத்தகைய
பிரம்மச்சரிய நெறி உடனடியாக வரவில்லை
என்றாலும் படிப்படியாக கண்டிப்பாக
வந்தமையும். அப்படி படிப்படியாக
வந்தமையும் காலகட்டத்திற்குள்ளேயே சில
மந்திரப் பயிற்சிகளை நாம் எடுத்துக்
கொண்டால் ஆவிகளுடன் மேலும் அமானுஷ்ய
சக்தியைப் பெறலாம்.

ஓஜஸ் சக்தி:--
---------------------

செயலாலும் சிந்தனையாலு<ம் சிற்றின்பத்தில்
செலவிடப்படும் சக்தியைத் தடுத்துச் சேர்த்து
வைத்தால் அது ஓஜஸ் சக்தியாக மாறுவதாக
யோகிகள் கூறுகின்றனர்.

முதுகெலும்பின் கடைசி எலும்புக்கு அடியில்
மூலாதாரத்தில், வட்டமிட்டுக் கிடக்கும் ஒரு
சிறு பாம்பு உறங்குவதாக யோகி
சித்திரிக்கிறான். அதைக் குண்டலினி
என்கிறான். பிரம்மச்சரியத்தால் குண்டலினி
எனப்படும் இந்த ஓஜஸ் சக்தியை யோகி
தண்டுவடம் வழியாக மேலே அனுப்பி,
மூளையின் அடியில் உள்ள பினியல் என்னும்
நாளமில்லா சுரப்பியில் ஆன்ம சக்தியாகச்
சேர்த்து வைக்கிறான். எவ்வளவுக்கெவ்வளவு
ஓஜஸ் மூளையில் சேர்த்து
வைக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவ
ு வலிமையும், புத்திக் கூர்மையும் ஆன்ம
சக்தியும் பெற்றவனாக மனிதன்
விளங்குகிறான். ஒரு மனிதன் அழகிய
நடையில் சிறந்த எண்ணங்களைப் பேசலாம்;
ஆனால் அவை மக்களைக் கவராமல்
இருக்கின்றன. மற்றொருவன் அவ்வளவு
அழகாகப் பேசாமல் இருந்தாலும், அவனுடைய
சொற்கள் மக்களை வசப்படுத்துகின்றன.
அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் சக்தி
இருக்கிறது. இதுதான் ஒஜஸின் சக்தி.

சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்:--
--------------------------------------------------------------
சாகாத்தலை ஆகாசம், வேகாக்கால் வாயு,
போகாப்புனல் அக்கினி. சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திர தத்துவம். வேகாக்கால்
என்பது மயேசுரபாகம் மயேசுரதத்துவம்.
போகாப்புனல் என்பது சதாசிவபாகம்,
சதாசிவதத்துவம். இம்மூன்றும்
சாகாக்கல்வியைத் தெரிவிக்கின்றது.

ஆத்மதத்துவாதி சிவகரணம் 36-ம் நிர்மல குரு
துரியாதீதம் 7-ம் சேர்ந்து ஆனநிலை 43-ல்
ஒவ்வொரு நிலையிலும் இவைகளுண்டு.
மேலும் சாகாத்தலை, வேகாக்கால்,
போகாப்புனல் என்கிற தத்துவங்கள்
பிண்டத்தில் 4 இடத்திலும், அண்டத்தில் 4
இடத்திலும் ஆக 8 இடத்திலும் உண்டு.

இவைகள் பிண்டருத்திரர்கள் அண்டருத்திரர்கள்
முதலிய ருத்திர மயேசுர சதாசிவ
பேதமென்றறிக. சாகாக்கல்வியைக் குறித்த
இந்த நாற்பத்துமூன்று நிலைகளில்
முதனிலையின் அனுபவத்தைப் பெற்றுக்
கொண்டவன் பிரமன். அவனுக்கு ஆயுசு 1
கற்பம். இப்படி 43 நிலைகளும்
ஏறியனுபவத்தைப் பெற்றவன்
காலங்கடந்தவன், காலரகிதன். சாகாத்தலை
வேகாக்கால் போகாப்புனல் என்பவற்றிற்குப்
பொருள் சிலர் உப்பு வகைகளின் பேதமென்று
சொல்லுவது பிசகு. அவைகளினுண்மைப்
பொருளை மேற்குறித்தபடி யோகக் காட்சிகளில்
அனுபவிக்கலாம். ஆகையால் இவைகள் யோக
அனுபவங்களே யென்று அறியவேண்டும்.