Thursday, 31 December 2015

மிகவும் அபூர்வமான ஸ்லோகம்

மிகவும் அபூர்வமான ஸ்லோகம் :

ஆனந்தமாய் வாழ ஆதிசங்கரர் அருளிய நட்சத்திர துதி:

காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடங்களை பாரதத்தின் ஆங்காங்கே ஸ்தாபித்து, ஷண்மதஸ்தாபனத்தை வகுத்த மகான் ஆதிசங்கரர்.

அவர் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு ஸ்லோகம் வீதம் உருவாக்கித் தந்திருக்கிறார்.

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் என்ற தலைப்பில் அவர் அருளியிருக்கும் இந்த ஸ்லோகங்களை அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினமுமே பாராயணம் செய்து வளங்கள் பெறலாம்.

சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வது பெரும் பலனை அள்ளித் தரும். அவ்வாறு பலனடையும்போது பகவானை மறக்காதீர்கள்; ஆதிசங்கரருக்கு நன்றி சொல்லவும் மறக்காதீர்கள்.

அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாயநாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

பொதுப் பொருள்: ஐஸ்வர்யம் மிகுந்தவரே, குணக்கடலே, தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரே, தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு நெருங்கியவராகவும், ஞானிகளுக்கு மிகவும் நெருங்கியவராகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.

பரணி

கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாயமூல காரணீய கால காலதே நம: சிவாய பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

யமனுக்குப் பயந்திருந்த குழந்தையான மார்க்கண்டேயனைக் காத்தருளியவரே, வீரபத்திரமூர்த்தியாக அவதரித்து தட்சனைக் கொன்றவரே, அனைத்திற்கும் மூல காரணமானவரே, காலத்துக்கு மேம்பட்டவரே, கருணைக்கு இருப்பிடமாக விளங்குபவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவேநம: சிவாய துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாயஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

இஷ்டப்பட்ட மிகச் சிறந்ததுமான பொருளைக் கொடுப்பதில் முன்னிற்பவரே, முப்புரத்திலுள்ள அரக்கர் வம்சத்துக்கு தூமகேதுவானவரே, படைக்கும் தொழில் நடப்பதற்கான தர்மத்தைக் காப்பவரே, பூமி, ஆகாயம், நீர், தேஜஸ், காற்று, சூரியன், சந்திரன், புருஷன் ஆகிய எட்டு அம்சங் களையும் தன் உருவாய்க் கொண்டவரே, ரிஷபக் கொடி தரித்தவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாயபாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

மலை போன்ற ஆபத்துகளைப் போக்கடிப்பவரே, மழு ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பவரே, பக்தர்களின் பாவங்களைப் போக்கும் தேவ நதியான கங்கையை முடியில் உடையவரே, பாபங்களைப் போக்குபவரே, சாபத்தினால் ஏற்படும் தோஷங்களை விரட்டுபவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

மிருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாயநாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

ஆகாயத்தைக் கூந்தலாக உடையவரே, ஒளிரும் மங்கள உருவத்தை உடையவரே, சிவ எனும் பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே அனைத்துப் பாபங்களையும் எரிப்பவரே, துர்ஆசை நிறைந்த உள்ளம் உடையவரால் அடையமுடியாதவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய ஸிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாயப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய ஸிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்கள் கொண்டவரே, பெரிய பாம்பினை குண்டலமாகக் கொண்டவரே, வேதங்களின் முறையை வகுத்துக் கொடுத்த பிரும்ம உருவானவரே, யமனுக்கு உயிர் அளித்தவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

தன்னலம் கருதாது செய்யப்படும் கர்மாவை ஏற்றுக்கொள்பவரே, ஆசையைப் போக்கடிக்கிறவரே, ஸாம வேதத்தைப் பாடுவோருக்கு  சவுக்கியத்தைக் கொடுப்பவரே, பொன்னிறமான கவசத்தை உடையவரே, பார்வதிதேவியின் ஸம்பந்தத்தினால் புத்தொளியுடன் திகழும் சிவபெருமானே நமஸ்காரம்.

பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

பிறப்பு, இறப்பு எனும் மிகக் கடுமையான பிணியைப் போக்கடிப்பவரே, ஞானத்தையே ஒரே உருவமாயுடையவரே, என் மன விருப்பங்களை நிறைவேற்றுகிறவரே, ஸாதுக்களின் மனத்தில் குடிகொண்டிருப்பவரே, காமனுக்கு எதிரியான சிவபெருமானே நமஸ்காரம்.

ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

யக்ஷர்களின் அரசனான குபேரனுக்கு நெருங்கிய தோழரே, கருணாமூர்த்தியே, பொன் மயமான வில்லை வலக் கரத்தில் கொண்டவரே, கருட வாகனம் உள்ள மகாவிஷ்ணுவின் இருதய தாபத்தைப் போக்குபவரே, நெற்றிக்கண் கொண்டவரே, மறைகளால் போற்றப்பட்ட திருவடிகளை உடையவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜாத வேதஸே நம: சிவாய அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

வலது கையில் அக்னியை வைத்திருப்பவரே, அக்ஷரம் எனும் பரமாத்மாவைக் குறிக்கும் சொல்லுக்கு உரித்தானவரே, இந்திரனால் வணங்கப்பட்டவரே, சிவ பஞ்சாக்ஷர தீறக்ஷ பெற்றவர்களுக்கு ஆத்ம ஒளியைக் காட்டுபவரே, தர்ம ரூபமான காளையை வாகனமாக உடையவரே, சாதுக்களுக்கு நல்வழியை அருள்பவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

வெள்ளி மலை என்று  பெயர்பெற்ற கயிலையங்கிரியில் வசிப்பவரே, புன்சிரிப்புடன் திகழ்பவரே, ராஜஹம்ஸம் எனும் பட்சி போல தலைசிறந்து விளங்குபவரே, குபேரனின் தோழன் என்பதை வெளிப்படுத்துகிறவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய ஸூல பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

ஏழைகளுக்குக் காமதேனு எனும் தேவலோகத்துப் பசுவை போன்றவரே, புஷ்பங்களை அம்பாக உடைய மன்மதனை எரித்த அக்னியானவரே, தன்னுடைய பக்தர்களுக்கு மேரு மலை போல அபயமளிப்பவரே, அரக்கர் கூட்டமாகிய இருளுக்குக் கடுமையான கதிரவன் போன்றவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

ஸர்வமங்களாம்பிகை எனப் பெயர் பெற்ற அம்பிகையுடன் வாழ்பவரே, அனைத்து தேவ கூட்டங்களுக்கும் மேற்பட்டவரே, அரக்கர் குலத்தை வேரறுப்பவரே, எல்லோருடைய மனத்திலும்
உண்டாகும் வீண் ஆசையை அகற்றுபவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

சித்திரை

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய மாகரந்த ஸாரவர்ஷ பாஸினே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

குறைந்த அளவே பக்தி செலுத்தினாலும் அந்த பக்தர்களையும் வளர்ப்பவரே, குயில் போன்று குரல் உடையவரே, ஒரு வில்வத்தால் அர்ச்சனை செய்தாலேயே அதனால் மகிழ்பவரே, பல பிறவிகளில் செய்த பாபங்களை எரிப்பவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக சீலினே நம: சிவாய பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

அனைத்து ஜீவராசிகளையும் காப்பாற்றுவதில் பெரிதும் அக்கறை செலுத்துபவரே, பார்வதி தேவிக்குப் பிரியமானவரே, பக்தர்களைச் சிறப்பாகக் காத்தருள்பவரே, தவறான செயல்களில் ஈடுபடும் அரக்கர் சைன்யத்தை அழிப்பவரே, சந்திரனை முடியில் தரித்தவரே, கபாலத்தைக் கையில் ஏந்தியவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமூஹதே நம: சிவாய ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

உமாதேவியின் மனத்துக்கு உகந்தவரே, வெள்ளியங்கிரியில் பொலிபவரே, மஹரிஷிகளின் மனைவிகளையே மோகிக்கச் செய்து பாடம் புகட்டியவரே, தன்னிடம் வேண்டுவோருக்கு வேண்டியன அருள்பவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

அனுஷம்

மங்களப் ரதாய கோ துரங்கதே நம: சிவாய கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

மங்களத்தை அருள்பவரே, ரிஷப வாகனத்தை உடையவரே, அலைமோதும் கங்கையை தலையில் தரித்தவரே, எதிர்த்துப் போரிடும் சத்ருக்களை
ஒழிப்பவரே, மன்மதனையும் எரித்தவரே, கையில் மானை உடையவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

பக்தர்கள் விரும்பியதை உடனே வழங்குபவரே, யாகம் செய்பவர்களைக் காத்து அருள்பவரே, ரிஷபக் கொடியுடையோரே, வெள்ளியைத் தோற்கடிக்கும் தேஜஸ் கொண்டவரே, பக்தர் வீட்டில் ஏற்படும் துயரங்களை எல்லாம் அடியோடு வேரறுப்பவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

மூன்று கண்களை உடையவரே, எளியவர்களிடத்தில் கருணை மிகக் கொண்டவரே, தக்ஷ ப்ரஜாபதியின் யாகத்தை நாசம் செய்தவரே, சந்திரன், சூரியன், அக்னி மூவரையும் கண்களாய் உடையவரே, வணங்கிய பக்தர்களை சிறிதும் தாமதமின்றிக் காப்பவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

மங்களத்தைச் செய்பவரும், துயரமெனும் சமுத்திரத்தை கடக்க வைப்பதில் தலை சிறந்த படைவீரன் போன்றவரே, சம்சாரக் கடலில் உழன்று தவிப்பவர்களின் பயத்தைப் போக்குபவரே, தாமரை போன்ற கண்களை உடையவரே, சுகத்தை அருள்பவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

கர்மாவாகிற கயிற்றை அழிக்கிற நீலகண்டரே, சுகத்தைக் கொடுப்பவரே, பவித்ரமான திருநீற்றை கழுத்தில் தரித்தவரே, தன்னுடையது எனும்
எண்ணம் நீங்கப்பெற்ற மகரிஷிகளை ஆட்கொண்டு அருள்பாலிப்பவரே, விஷ்ணுவால் வணங்கப்பட்டவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

சுவர்க்கத்துக்குத் தலைவரானவரே, விஷ்ணுவால் போற்றப்பட்டவரே, ஒழுக்கமுள்ள பக்தர்களின் இதயக் குகையில் சஞ்சரிப்பவரே, தானே பிரம்மம் எனும் அனுபவத்தில் எப்போதும் மகிழ்ச்சி உள்ளவராகி, புலன்களை அடக்கியவரே, பக்தர்களது துயரத்தைத் துடைப்பவரே, உலகத்தையே வெல்பவரான சிவபெருமானே நமஸ்காரம்.

அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

அளவிடமுடியாத தெய்வீக மகிமை பொருந்தியவரே, தன்னைச் சரணடைந்த நல்லோர்களைக் காப்பதில் நாட்டம் கொண்டவரே, தன்னிடத்திலேயே ஒளிரும் அளவில்லாத ஆத்மானுபவத்தை உடையவரே, (மார்க்கண்டேயக்) குழந்தையிடம் தன் பேரன்பைக் காட்டியவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

பரமேஸ்வரரே, உம்முடைய வேலைக்காரர்கள்போல் விளங்கும் பக்தர்களிடம் கருணை காட்டும் பேரன்புக்குரியவனே, இதயத்தால் துதிக்கும் அளவுக்கு அருள்புரிபவரே, நெருப்பைக் கண்ணாக உடையவரே, தேவர்களும் வணங்கித் தொழும் திருவடியை உடையவரே, தன்னுடைய திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்களுக்கு அளவற்ற
மகிழ்ச்சியைக் கொடுப்பவரே, சிவபெருமானேநமஸ்காரம்.

பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

இன்பம், வீடு, தேவலோகத்து அனுபவம் ஆகியவற்றை இப்பூவிலகிலேயே அருள்பவரே, தனக்கு அடக்கமான மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தில் முதல்வரே, தன் பக்தர்களின் துயரத்தைப் போக்குவதில் பேரார்வம் கொண்டவரே, ஸாதுக்களின் மனதாகிய தாமரையில் வசிக்கும் யோகியே, சிவபெருமானே நமஸ்காரம்.

உத்திரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய ஜந்து ஜாத நித்ய ஸௌக்ய காரிணே நம: சிவாய

காலனுக்கே காலனானவரே, பாபத்தைப் போக்குபவரே, மாயையை அடக்கியவரே, எப்போதும் நிலவும் துயரத்தைத் துடைத்து அருள்பவரே, பிறந்த ஜீவனுக்கு நித்ய சவுக்கியம் எனும் பேரின்பத்தை அளிப்பவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

ரேவதி

சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

சூலத்தையும் ஓட்டையும் கையில் வைத்திருப்பவரே, ஜீவர்களைக் காப்பவரே, பிரம்மாவின்
கபாலத்தை உடையவரே, பக்தர்களின் நன்மைக்காக பல அவதாரங்களை எடுத்து நன்மை செய்பவரே, நிறைய புண்ணியம் செய்தவர்களாலேயே அடையக்கூடியவரே, சிவபெருமானே நமஸ்காரம்.

ஓம் நமசிவய.

Wednesday, 30 December 2015

பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு

பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு..

உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது..

உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில் , ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.

அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.
அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..
சில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லெ யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய - பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு.
வாழ்க வளமுடன்.

வசியத்திற்கு பயன் பெறும் இரண்டு அபூர்வ தாந்த்ரீக பொருட்கள்

வசியத்திற்கு பயன் பெறும் இரண்டு அபூர்வ தாந்த்ரீக பொருட்கள்

டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி மற்றும்  இவருக்கும் முன் இருந்து வந்த பல தாந்த்ரீகர்கள் உபயோகித்து வந்த  இரண்டு மிக அபூர்வ விசயங்கள்-

ஒன்று : குள்ள நரி கொம்பு "ஷீயார் சிங்கி" என அழைக்கப்படும் இது வீட்டில் இருக்க சொத்துக்கள் சேரும் மற்றும் பண விரயங்கள் நிற்கும். இயற்கையாக இறந்த குள்ள நரியின் சிறு கொம்பை-இது எல்லா குள்ள நரிக்கும் இருக்காது-ஆகவே உண்மையாக கிடைப்பது மிக கடினம்-ஆனால் பலர் உபயோகித்து வெற்றி கண்டது இது-குறிப்பாக வட நாட்டு தலைவர்கள் மற்றும் பெரும் தொழில் அதிபர்கள் அனைவர் வீட்டிலும் இது கட்டாயம் இருக்கும்-சில ஆண்டுகள் முன்பு வரை.

ஆனால் இப்போது வியாபார நோக்கத்தில் இதற்காக பல குள்ள நரிகள் கொல்லப்படுவதாலும், அரசாங்க கெடுபிடிகளினாலும் மற்றும் இதை எடுக்கத்தெரிந்தோர் மிக அபூர்வமாகிவிட்டதாலும் நிறைய போலிகள் உலவத்தொடங்கி விட்டதாக தகவல்.இதை எடுத்து நம் வீட்டு பணப்பெட்டியில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் சிகப்பு துணியால் முடிந்து வைத்து விட வேண்டும்.இதற்கு சாமானியர்கள் செய்யும் படியான வேறு எந்த பூஜை முறையும் இல்லை. சொத்துக்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், புதிய சொத்து சேர்க்க ஆசைப்படுபவர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதம்.

மேலும் இதை தலைமுறை தலைமுறையாக பத்திரப்படுத்தி நம் சந்ததி வளர உபயோகிக்கலாம். உண்மையானது கிடைக்கப்பெற்றோர், கண்டிப்பாக அதிர்ஷ்டசாலிகள் ஆவர். தனது புத்தகத்தில் இதன் மேன்மையை பற்றி சிலாகித்து எழுதி உள்ளார் டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி.

மற்றொன்று : "பில்லி கா ஜெர்" என அழைக்கப்படும் பூனையின் தொப்புள் கொடி  பொதுவாக நம் முன்னோர்கள் கூற்றுப்படி தலைச்சன் பிள்ளையின் தொப்புள் கொடியை தகப்பன் தாயத்தாக அணிந்து வரும் முறையை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அது போல் பல மடங்கு தன ஆகர்ஷணம்  ெய்ய கூடியது "பில்லி கா ஜெர்". தனது புத்தகத்தில் 'அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று இது என்று கூறியுள்ளார் டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி .

ஆனால் சாத்தியமே இல்லை. பூனையானது தனது குழந்தை பிறந்த உடன் அதன் நாபியை தின்று விடும். இதை எடுப்பது மிக மிக சிரமம். ஆனால் அந்த காலத்தில் பிரத்யேகமாக சிலரை இதற்கென்று வைத்திருப்பார் களாம். அவர்களுக்கு பூனை குட்டியிடும் முன்பு கொடுக்கும் சப்தங்கள் மூலம் அதன் பிரசவ நிலை தெரிந்து பின்பு குட்டிக்கும் தாய்க்கும் சிரமமில்லா வண்ணம் எடுத்து பக்குவப்படுத்துவார்களாம். இப்படி செய்பவர்கள் இப்போதும் சீனாவில் இருப்பதாக கேள்வி. திபெத், தாய்லாந்து போன்றவை மாந்திரீகம், தாந்த்ரீகம், செய்வினை போன்றவைகளுக்கு பிரசித்தம்.