Wednesday, 25 May 2016

லக்ஷ்மி கடாட்சம் பெருக சில யோசனைகள்

லக்ஷ்மி கடாட்சம் பெருக சில யோசனைகள்

• அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று
பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும். இப்படி செய்வது  ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும் , முன்னோர்களும் நம்வீட்டை நோக்கி வருகிறார்கள் . அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும் . அவர்கள் சந்தோசப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.

• அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும் .

• அதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது , தன் வலது உள்ளங்கையையாவது முதலில் பார்த்து விட வேண்டும்.

• செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி
திருமகளை வழிப்பட வேண்டும்.

• வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும்,
சந்தோசமும் பெருகும்.

• ஒவ்வொரு பௌர்ணமி  அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து , பால், பாயசம், கல்கண்டு ,கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.

• வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே
கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே
அவர்களுக்குச் சேர வேண்டும், முடிந்தால் அவர்களுக்கு புதியதாக
வாங்கிக்கொடுக்கலாம்..

தவிர்க்க வேண்டிய சில .........

• ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில்
நின்று கொடுக்க கூடாது . கொடுப்பவரும் , வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும் .

• வாசற்படி, அம்மி,ஆட்டுக்கல், உரல் இவைகளில் உட்காரக்கூடாது .

• இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது .

• வெற்றிலை  வாழையிலை இவைகளை வாட விடக்கூடாது
வெற்றிலையை தரையில் வைக்க கூடாது .

• சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது .

• குத்து விளக்கை தானாக அணையவும் விடக்கூடாது , ஊதியும்
அணைக்ககூடாது . புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.

• வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது.எழவு என்றும்
கூறக்கூடாது

• அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது

• துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்ககூடாது .

• உப்பைத் தரையில் சிந்தக் கூடாது .

• ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.
ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

• வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.  நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

• சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு,
யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு
மிகவும் பிடித்தவை.

• தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

• பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி

•வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால் பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

• செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள்
வளர்க்கலாம்.

• சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

• காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்

• தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

• வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.

• மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.

• ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை
செய்யுங்கள்.

• எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

• எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில்
பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

• வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும்,
சந்தோஷமும் பெருகும்.

• எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப்
பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.

• சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில்
மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

• தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.

• குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை
உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.

• அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.
கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

• பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

• அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது

• வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.

• இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.

• வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம். பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக்
கூடாது.

• மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக்
கூடாது.

• விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக்
கொடுக்கக் கூடாது.

• விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.

• கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில்கோலம்
இடுவது அவசியம்.பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின்டோர்
வாசலில் கோலம் வரையலாம்.

• வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

• பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவேண்டும்.

• வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

•அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.

• அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது. நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.

• பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.

• சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.

• ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது. பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.

• தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.

• பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி
படங்கள் மீது விழக்கூடாது

• தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்து விடுகிறாள்.

இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்

சகலதேவதா போற்றி வழிபாடு மந்திரம்

சகலதேவதா போற்றி வழிபாடு மந்திரம்.

எல்லா கடவுள்களின் போற்றி.
தினமும் சொல்ல 1000
கோடி கோவிக்கு சென்ற பலன் கிடைக்கும்

ஓம் ஸ்ரீ கணபதியே போற்றி
ஓம் ஸ்ரீ கற்பக விநாயகனே போற்றி
ஓம் ஸ்ரீ கஜமுகனே போற்றி
ஓம் ஸ்ரீ கந்தா போற்றி
ஓம் ஸ்ரீ கடம்பா போற்றி
ஓம் ஸ்ரீ இடும்பா போற்றி
ஓம் ஸ்ரீ கபாலீஸ்வரா போற்றி
ஓம் ஸ்ரீ ருத்ரனே போற்றி
ஓம் ஸ்ரீ சிவனே போற்றி
ஓம் ஸ்ரீ கற்பகத்தாயே போற்றி
ஓம் ஸ்ரீ காமாட்சியே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரீயே போற்றி
ஓம் ஸ்ரீ மஹாவிஷ்ணவே போற்றி
ஓம் ஸ்ரீ நாராயணனே போற்றி
ஓம் ஸ்ரீ வாஸுதேவனே போற்றி
ஓம் ஸ்ரீ பிரம்மனே போற்றி
ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீ வைதீஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ அண்ணாமலையானே போற்றி
ஓம் ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜனே போற்றி
ஓம் ஸ்ரீ சரபேஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ நந்தீஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ அதிகார நந்தியே போற்றி
ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்திரனே போற்றி
ஓம் ஸ்ரீ பெருமாளே போற்றி
ஓம் ஸ்ரீ சத்திய நாராயணனே போற்றி
ஓம் ஸ்ரீ சந்தான கோபாலனே போற்றி
ஓம் ஸ்ரீ கோவிந்தனே போற்றி
ஓம் ஸ்ரீ கிருஷ்ணா போற்றி
ஓம் ஸ்ரீ ராமா போற்றி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மனே போற்றி
ஓம் ஸ்ரீ ஹயக்ரீவா போற்றி
ஓம் ஸ்ரீ சுதர்ஸனா போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரியே போற்றி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா போற்றி
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி
ஓம் ஸ்ரீ ஆதியந்தப்பிரபுவே போற்றி
ஓம் ஸ்ரீ கருட பகவானே போற்றி
ஓம் ஸ்ரீ துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ சரஸ்வதியே போற்றி
ஓம் ஸ்ரீ மீனாட்சியே போற்றி
ஓம் ஸ்ரீ அன்னபூரணியே போற்றி
ஓம் ஸ்ரீ புவனேஸ்வரியே போற்றி
ஓம் ஸ்ரீ அபிராமியே போற்றி
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி
ஓம் ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே போற்றி
ஓம் ஸ்ரீ பத்ரகாளியே போற்றி
ஓம் ஸ்ரீ ச்யாமளாவே போற்றி
ஓம் ஸ்ரீ பிரத்யங்கராவே போற்றி
ஓம் ஸ்ரீ வாராகியே போற்றி
ஓம் ஸ்ரீ சாகம்பரியே போற்றி
ஓம் ஸ்ரீ மாரியம்மாவே போற்றி
ஓம் ஸ்ரீ மூகாம்பிகையே போற்றி
ஓம் ஸ்ரீ சூலினியே போற்றி
ஓம் ஸ்ரீ பவானியே போற்றி
ஓம் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகையே போற்றி
ஓம் ஸ்ரீ சந்தோஷிமாதாவே போற்றி
ஓம் ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினியே போற்றி
ஓம் ஸ்ரீ சப்த கன்னிகளே போற்றி
ஓம் ஸ்ரீ திருவிளக்கே போற்றி
ஓம் ஸ்ரீ துளசியே போற்றி
ஓம் ஸ்ரீ சூரியனே போற்றி
ஓம் ஸ்ரீ சந்திரனே போற்றி
ஓம் ஸ்ரீ அங்காரகனே போற்றி
ஓம் ஸ்ரீ புதனே போற்றி
ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி
ஓம் ஸ்ரீ சுக்ரனே போற்றி
ஓம் ஸ்ரீ சனிஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ ராகுவே போற்றி
ஓம் ஸ்ரீ கேதுவே போற்றி
ஓம் ஸ்ரீ நாரதா போற்றி
ஓம் ஸ்ரீ இந்திரனே போற்றி
ஓம் ஸ்ரீ வருணனே போற்றி
ஓம் ஸ்ரீ வாயுவே போற்றி
ஓம் ஸ்ரீ அக்னியே போற்றி
ஓம் ஸ்ரீ குபேரா போற்றி
ஓம் ஸ்ரீ யமனே போற்றி
ஓம் ஸ்ரீ ராகவேந்திரா போற்றி
ஓம் ஸ்ரீ வாஸ்து தேவனே போற்றி
ஓம் ஸ்ரீ நாகராஜாவே போற்றி
ஓம் ஸ்ரீ வீரபத்ரனே போற்றி
ஓம் ஸ்ரீ பைரவா போற்றி
ஓம் ஸ்ரீ மாக்கண்டேயா போற்றி
ஓம் ஸ்ரீ ஐயனாரே போற்றி
ஓம் ஸ்ரீ முனிஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ கருப்பண்ணசாமியே போற்றி
ஓம் ஸ்ரீ மதுரைவீரனே போற்றி
ஓம் ஸ்ரீ அகத்திய ரிஷியே போற்றி
ஓம் ஸ்ரீ ஆதிசங்கரனே போற்றி
ஓம் ஸ்ரீ அறுபத்திமூவர்களே போற்றி
ஓம் ஸ்ரீ ஆழ்வார்களே போற்றி
ஓம் ஸ்ரீ மகரிஷிகளே போற்றி
ஓம் ஸ்ரீ சித்தர்களே போற்றி
ஓம் ஸ்ரீ வேதங்களே போற்றி
ஓம் ஸ்ரீ உபநிஷத்துகளே போற்றி
ஓம் ஸ்ரீ இதிகாச புராணங்களே போற்றி
ஓம் ஸ்ரீ காமதேனுவே போற்றி
ஓம் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனாவே போற்றி
ஓம் ஸ்ரீ ஆயுர்தேவீயே போற்றி
ஓம் ஸ்ரீ சகலதேவதா போற்றி போற்றி

Friday, 15 April 2016

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!

1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..

2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.

தண்ணீர் :

3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி
மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.

4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.

5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.

6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.

சிமெண்ட் :

7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.

8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.

9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.

மணல் :

10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.

11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.

13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.

இரும்புக் கம்பிகள் :

14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.

செங்கல் :

17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.

18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.

19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.

20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.

21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.

22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.

23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.

24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.

25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.

26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.

27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.

28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.

29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.

31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.

32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.

33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.

34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.

35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.

36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.

37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.

38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.

39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.

40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.

42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.

43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.

44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.

45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.

கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :

46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.

47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.

48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.

49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.

50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.

Wednesday, 9 March 2016

திருமணத்தடை நீக்கும் சக்தி வாய்ந்த எளிய பரிகாரங்கள்

திருமணத்தடை நீக்கும் சக்தி வாய்ந்த எளிய பரிகாரங்கள்

உரிய வயது வந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆணோ பெண்ணோ யாரும் இந்தப் பரிகாரங்களைச் செய்து பலனடையலாம்.

1.ஏதேனும் ஒரு ஞாயிறு,செவ்வாய் அல்லது  வெள்ளிக்கிழமை  அன்று அம்பாள் ஆலயம் சென்று தேவியின் திருவடியில்  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்று மந்திரம் ஜெபித்தபடியே குங்குமம் இடவும்.பின் சில நிமிடங்கள் அம்மன் முன் அமர்ந்து  அந்தக் குங்குமத்தை எடுத்து ஒரு குங்குமச் சிமிழில் வைத்து வீட்டிற்கு எடுத்து வந்து அந்தக் குங்குமத்தைக் குளித்து முடித்த பின் தினமும் அணிந்து வர விரைவில் திருமணமாகும்.

இதை ஆலயத்தில் செய்ய முடியாதவர்கள் கீழ்க்கண்ட முறைப்படி வீட்டிலேயே செய்து பலன் பெறலாம்.
விளக்கேற்றி பஞ்சு அல்லது தாமரைத்தண்டுத் திரியில் கொஞ்சம் ஜவ்வாது தடவி அந்தத் திரியைக் கொண்டு விளக்கேற்றி  "ஓம் ஆனைமுகன்  வருக கலைமகள்,மலைமகள்,திருமகள் வருக தேவர்கள் யாவரும் சேர்ந்திங்கு வருக" என்ற துதியை 3 தடவை ஜெபித்து விளக்கிற்கு சாம்பிராணி அல்லது ஊதுவத்தி தூபம் காண்பித்து விளக்கின் பாதத்தில்  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்று மந்திரம் ஜெபித்தபடியே குங்குமம் இடவும்.பின் சில நிமிடங்கள் விளக்கின் மும் அமர்ந்து விரைவில் நல்ல இடத்தில் திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டியபின் அந்தக் குங்குமத்தை வழித்து எடுத்து ஒரு குங்குமச் சிமிழில் வைத்துக் கொண்டு அந்தக் குங்குமத்தைக் குளித்து முடித்த பின் தினமும் அணிந்து வர விரைவில் திருமணமாகும்.       

2. ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்கள் 7 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் குரு ஹோரையில் அத்திமரத்தின் அடிப்பகுதியில் 7 மஞ்சள் நிறப் பூக்களைப் பன்னீரில் நனைத்துப் போட்டு வர விரைவில் திருமணமாகும்.

3.ஜாதகத்தில் சந்திர பலம் இல்லாதவர்கள்  செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் விக்கிரகத்திற்கு  5 செந்நிறப் பூக்களை சமர்ப்பித்து வர விரைவில் திருமணமாகும்.

4.ஜாதகத்தில் செவ்வாய் பலம் இல்லாதவர்கள் 5 வாரங்களுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் விக்கிரகத்திற்கு  11 செந்நிறப் பூக்களை சமர்ப்பித்து வர விரைவில் திருமணமாகும்.

குங்குமப்பூ

5. 11 வாரங்களுக்கு வியாழக்கிழமை தோறும் அதிகாலையில் குளிக்கும் நீரில் கொஞ்சம் குங்குமப்பூ போட்டுச் சில நிமிடங்கள் கழித்துக் குளித்து வர விரைவில் திருமணமாகும்.

பிரிஞ்சி இலை

6.ஒரு கவர் அல்லது பேப்பரில் 9 பிரிஞ்சி இலைகளை எடுத்து வைத்துக் கொண்டு உறங்கும் பொழுது தலையணையின் அடியில் வைத்து உறங்கி வர விரைவில் திருமணமாகும்.

7.சனிக்கிரகம் ஜாதகத்தில் சுப பலன்களைத் தராத காரணத்தினால் திருமணத் தடை உள்ளவர்கள் திங்கட்கிழமை தோறும் சிகப்பு நிற ஆடைகள் அணிந்து வரத் சனீச்வரரால் உண்டான தடைகள் விலகி விரைவில் திருமணமாகும்.