Monday, 1 February 2016

செவ்வாய் குணமும் கிரகங்களின் சேர்க்கை

செவ்வாய் குணமும் கிரகங்களின் சேர்க்கை

செயல்காரகன் "செவ்வாய்":

காலபுருசனின் லக்னமும் பூமியை ஒத்த காரகத்துவமும் கொண்ட செவ்வாய், குசன் என்று அழைக்கபடுகிறார் . குஜன் என்றால் சமஸ்கிருதத்தில் "பூமியின் மகன்" (அ) "நிலமகன்" என பொருள். செவ்வாய் ஒரு ஆண் கிரகம் ஆவார். இவர் மேஷம் மற்றும் விருச்சகத்தை ஆட்சி செய்கிறார். இங்கே ஆட்சி என்பது சொந்த வீடு என்பதை விட, செவ்வாய் தன் கதிர்களை பூமிக்கு சரிவிகிதத்தில் கொடுக்குமிடம் என்பதே சரியானது.

செவ்வாய் பற்றிய அறிவியல் விளக்கம்

தற்கால அறிவியல்படி, பூமியின் அளவை மற்றும் கட்டமைப்பை ஒத்த கிரகம் செவ்வாய் ஆகும். எனவே இவரை கால புருசனின் லக்னமாக முன்னோர்கள் வைத்தனர். சூரியனை சுற்ற செவ்வாய் கிட்டத்தட்ட பூமியை விட ஒரு ஆண்டு அதிகமாக எடுத்து கொள்கிறது. விண்வெளியில் சுற்றிவரும் மாசு மற்றும் விண்கற்கள் மற்றும் வால் நட்சத்திர தாக்குதல்களில் இருந்து பூமியை காப்பதால், இவரை "தளபதி" என்று முன்னோர்கள் வர்ணிக்கின்றனர்.

உடலின் சக்திக்கு காரகம் வகிப்பதும் செவ்வாய். அது போலவே இயற்கையாக, செவ்வாய் மனிதரின் இரத்தத்திற்கு காரகம் வகிக்கிறார். இரத்தம் என்பது எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாகும் திரவம் ஆகும். இதுவே கிரியா சக்தியை வெப்ப ஆற்றல் மூலம் உடலெங்கும் வெளிபடுத்தும் தன்மை கொண்டது.
கால புருசனின் ஒன்றாம் வீடான மேஷத்தில் செவ்வாய் அதிக வெப்ப ஆற்றலை வெளிபடுத்தும் தன்மையும், விருச்சகம் என்னும் எட்டாம் இடத்தில் சற்று குறைவான இயக்க தன்மையும் கொண்டு இருக்கிறார்.

சூரியன் நெருப்பு கிரகம் எனில், செவ்வாய் இயற்கையில் ஒரு அனல் கிரகம். சூரியன் நெருப்பை உண்டாகும் தன்மை கொண்டு இருந்தாலும், அந்த வெப்பத்தை கிரியா சக்தியாக மற்றும் கிரகம் செவ்வாய் ஆகும். இதனை நம் உடலின் செய்பாடுகளில் கவனித்து பார்க்க எளிதில் புலப்படும், சூரியனில் இருந்து கிடைக்கும் வெப்ப கதிர்கள் மூலம் பெரும் ஆற்றலை சேமிக்கும் தாவரங்களை உண்ணும் போது, உணவில் இருக்கும் சக்தி இரத்தத்தில் (செவ்வாய்) கலந்து, மனிதனுக்கு இயக்க சக்தியை (கிரியா) கொடுக்கிறது.

செவ்வாய் இரத்தத்தை குறிப்பதால், இவர் நமது ரத்த சமந்தமான உறவான "சகோதர உறவை" குறிக்கிறார். மேலும் செவ்வாய் பூமியின் நிலப்பரப்பை ஒத்த நிலப்பரப்பை கொண்டதால், செவ்வாய் காலி நிலத்தையும் குறிக்கிறார்.
செவ்வாய் ஒரு இயற்கை அசுப கிரகம். இவரின் காரக ஒவ்வாமை கொடுக்கும் கிரகங்களான சனி, புதன், ராகு மற்றும் கேது ஆகும். சுக்கிரன் பகவான் செவ்வாய் பகவான் காரகதுவதை சம அளவில் பாதிக்கிறார். இங்கே காரக ஒவ்வாமை என்பது பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கே என்பதை நினைவில் கொள்ளவும்.

கேந்திரத்தில் செவ்வாய்

செவ்வாய் கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெரும் போது ருச்ச யோகம் ஏற்படுதிகிறார். ருச்ச என்றால் "கூர்மையான" (அ) " பிரகாசமான" என்று பொருள். லக்ன கேந்திரத்தில் செவ்வாய் அட்சி அல்லது உச்சம் பெற்று, அவரின் திரிகோணத்தில் குரு, சூரியன் அல்லது சந்திரன் இருக்க, ஜாதகர் தீர்க்கமான முடிவெடுத்து, ஒரு குழுவை அல்லது ஒரு சமூகத்தை காக்கும் மற்றும் வழி நடத்தி செல்லும் தளபதி போன்ற ஆற்றல் பெறுவார்.
செவ்வாய் பிற கிரகங்களுடன் சேர்க்கை

குருவுடன் செவ்வாய் :

செவ்வாய் குருவின் தொடர்பை பெற, செவ்வாயின் முரட்டு தனம் விலகி சாந்தம் பெறுகிறார். இங்கே குரு மனித மூளை எனவும், செவ்வாய் (இயக்கம்) மூளையின் கட்டுபாட்டில் இருக்கும் போது, அவசரமில்லா திடமான முடிவெடுத்து அதனை செயல் படுத்தும் நிலையை ஜாதகர் அடைவார். குருவுடன் சேர்க்கை அல்லது கேந்திரத்தில் செவ்வாய் இருக்க குரு மங்கள யோகம் ஏற்படுகிறது, இதனால் குருவின் காரகமான பொன் சேருதல் மற்றும் செவ்வாய் காரகமான நிலபுலண்கள் வாங்கும் தன்மை கொடுக்கிறார்.

சந்திரனுடன் செவ்வாய் :

சந்திரன் வீட்டில் கடகத்தில் நீசம் பெறும் செவ்வாய் தன் பலத்தை இழக்கிறார். எனவே செவ்வாய் காரகதுவங்களான வீரம், தைரியம், போர்குணம், வழிநடத்தி செல்லுதல்மற்றும் சகோதரம் போன்றவை குறைவாகவும் அல்லது இல்லாமலும் இருக்கும். நீச செவ்வாயின் கேந்திரத்தில் இருக்குன் சந்திரன் செவ்வாயின் நீச்சதை பங்கம் செய்து, குறிப்பிட்ட வயதுக்கு பிறகு, தன் காரகதுவதை ஜாதகரிடம் வெளிபடுத்துவார். மேலும் சந்திரனின் கேந்திரத்தில் செவ்வாய் இருக்க சந்திர மங்கள யோகம் ஏற்படுகிறது. இந்த யோகத்தின் பயனாக, தெளிவான மனமும், நல்ல எண்ணங்களும் ஏற்படும், ஏற்ற்றுமதி இறக்குமதி தொழில் பிரகாசிக்கும் ஆற்றலும் ஏற்படும். விவசாயம், பால் பண்ணை, கலை தொழில் சிறக்கும். இதில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று இருக்க, மக்கள் முன்னிலையில் நல்ல பெயரை சம்பாதிக்கும் நிலையை தருகிறது.

சனியுடன் செவ்வாய் :

சனியுடன் சேரும் செவ்வாய் அல்லது சம சப்த பார்வை பெறும் செவ்வாய், அதன் காரகத்துவம் முடுக்கபட்டு, விபத்துகளை, அறுவை சிகிச்சைகளை மற்றும் இயக்கி சீற்றங்களை உருவாகுகிறார். அது போலவே சனியின் காரகத்துவம் பாதிக்கப்பட்டு, வறுமை, நாத்திக தன்மை, தொழிலாளர் போராட்டம், விஷத்தன்மை கொண்ட நோய்கள், தீவிரவாத மற்றும் நாத்திக சதி செயல்கள் அரங்கேறுவார். இந்த சேர்க்கையுடன் சுக்கிரன் சமந்தபட, தவறான அல்லது முறையற்ற காதல் மற்றும் காம எண்ணங்களில் ஜாதகரை ஈடுபடுத்துவார்.

ராகுவுடன் செவ்வாய் :

செவ்வாய் ராகுவுடன் சேரும் போது, விபத்து தைரியம் குறைதல், உடல் மெலிதல், ரத்த புற்று மற்றும் சகோதர பங்கம் ஏற்படுத்துகிறார். குருவின் பார்வை அல்லது செவ்வாய் பாவக மாற்றம் சுபத்தை தரும்.

கேதுவுடன் செவ்வாய் :

செவ்வாய் கேதுவுடன் சேரும் போது நில தகராறு மற்றும் வழக்கு, இரத்த சோகை, சகோதர கருத்து வேற்றுமை உண்டு பண்ணுகிறார். தீர்க்க முடிவில்லாமல் ஒரு செயலில் இறங்கி பிரச்சனைகளை சந்திக்கும் நிலையை இவ்வமைப்பு ஏற்படுகிறது.

புதனுடன் செவ்வாய் :

செவ்வாய் புதனுடன் சேர்ந்து சிந்தையில் குழப்பத்தையும், கல்வி தடை மற்றும் விதண்டாவாதம் செய்தல் மற்றும் பொய் பேசும் குணத்தை கொடுக்கிறது. புதன் பலம் குறைந்து செவ்வாய் உடன் சேர, தீவிரவாத இயக்கங்களில் சேரும் நிலையும் ஏற்படுத்திவிடுகிறது.

சுக்கிரனுடன் செவ்வாய் :

செவ்வாய் சுக்கிரனுடன் சேர, அங்கு செவ்வாய் அல்லது சுக்கிரன் ஆட்சி, உச்சம் அல்லது நட்பு பெற, பிருகு மங்கள யோகம் உருவாகிறது. இது பல அடுக்கு மாடி கட்டடங்களுக்கு சொந்தகாரரகவும், பங்களா மற்றும் கார் போன்றவை கொடுத்து, சொகுசு வாழ்க்கை ஏற்படுத்தி கொடுக்கிறது. சுக்கிரன் மற்றும் செவ்வாய் சந்திரன் அல்லது சூரியன் தொடர்பை பெற, அதீத காம உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

சூரியனுடன் செவ்வாய் :

சூரியனுடன் சேரும் செவ்வாய் அஸ்தங்கம் பெறாமல் இருக்க, ஆளுமை தன்மை மற்றும் செயல் திறன் அதிகரிக்க செய்கிறார். செவ்வாய் அஸ்தங்கம் அடைந்தால், அறுவை சிகிச்சை மற்றும் ரத்த இழப்பு கொடுக்கிறார்.

செவ்வாய் உப ஜெய ஸ்தானமான 3, 6, 11ல் தனித்து இருக்க சுபத்தையும். கேந்திரம் மற்றும் திரிகோணத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று, குரு, சந்திரன் மற்றும் சூரியன் தொடர்பை பெற நற்செயலும் செய்கிறார். செவ்வாய் பதில் திக்பலம் பெறுகிறார். அவ்வாறு இருக்கும் ஜாதக அமைப்பு, அரசியல் அல்லது அரசாங்க தொடர்ப்பை ஜாதகருக்கு ஏற்படுத்தி கொடுக்கும்.

செவ்வாய் தாக்கத்தை போக்கும் எளிய பரிகாரங்கள்

செவ்வாய் காரகம் பாதிக்கபட்டவர்கள், செவ்வாய் கிழமை முருக வழிபாடும், கந்த சஷ்டி கவசம் பாடுதலும் அல்லது கேட்பதும், சிவ வழிபாடும், சண்ட பைரவர் வழிபாடு, மேலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்தலும் மிகுந்த பலனளிக்கும்.

குருவும் குணமும் கிரகங்களின் சேர்க்கை

குருவும் குணமும் கிரகங்களின் சேர்க்கை

குரு – சூரியன்:

பெரியவர்களிடம் பக்தி சிரத்தை உடையவர்களாகவும், கல்வியில் திறமை கொண்டவர்களாகவும், தெய்வபக்தி மிகுந்தவர்களாகவும், பூஜை வழிபாடுகளில் சிரத்தை கொண்டவர்களாகவும் தார்மிக சிந்தனை உடையவர்களாகவும் திகழ்வார்கள். செல்வச் செழிப்புடன் இருக்கும் இவர்கள், படித்த பெரிய மனிதர்களின் நட்பைப் பெற்றிருப்பர். ஆசானாகவும், புத்திசாலியாகவும் இருப்பர். சண்டையிடுவதில் விருப்பம் கொண்ட வர்களாக இவர்கள் இருப்பதால், ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றிருப்பர். செய்நன்றி மறவாத குணம் கொண்டிருப்பர்.

குரு – சந்திரன்:

சிவந்த மேனியுடன் திகழும் இவர்கள் அழகான, அகன்ற கண்களைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் ஓரளவு நம்பிக்கை உடையவராக இருப்பர். கவலைகளை மறந்து சதா சிரித்துப் பேசும் குணமுடையவர். உறவினர்களாலும் நண்பர்களாலும் புகழ், பெருமைகளைப் பெற்றவராகவும், சாமர்த்தியசாலியாகவும் திகழும் இவர்கள் எல்லோருடனும் சகஜமாகப் பேசிப் பழகுவார்கள். கல்வி ஞானம் பெற்றவர்களாகவும், எடுத்த காரியத்தை முடிக்கும் சுபாவம் கொண்டவர்களாகவும்் இருப்பார்கள். மனதுக்குள் கோபம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

குரு – செவ்வாய்:

சிவந்த கண்களுடனும், கல்வி பயில்வதிலும், சாஸ்திர ஆராய்ச்சியிலும் திறமை வாய்ந்தவராகவும், தரும சிந்தனை, பரோபகாரம் ஆகிய குணங்களுடன் அழகாகவும், செல்வந்தர் களாகவும் விளங்கும் இவர்கள், தங்க நகைகளி னால் பொருள் ஈட்டுவதில் ஆர்வம் கொண்டிருப்பர். தெய்விக சிந்தை உடைய இவர்கள், ஆலய வழிபாடுகளில் அதிக ஈடுபாடு் கொண்டிருப்பர். கோயில் கட்டுதல் போன்ற சமூக நலம் சார்ந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். மற்றவர்களால் பெரிய மனிதராக மதிக்கப்படுவர்.

குரு – புதன்:

ஆசார சீலராகவும், மன தைரியம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நல்ல குணங்களுடன் நீதி நேர்மையைக் கடைப்பிடிக்கும் இவர்கள், புத்திக்கூர்மையுடன் வியாபார நுணுக்கங்களை அறிந்தவர்களாகவும் இருப்பர். கீர்த்தியுடன் திகழும் இவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டு. நல்ல குணங்களைப் பெற்றிருக்கும் இவர்கள் மனைவியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பர். சரும வியாதிகள் தோன்றக்கூடும் என்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். மற்றவர்களை  வசியப்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமாகப் பேசக் கூடிய திறமையைப் பெற்றிருப்பார்கள்.  மதுரமான வார்த்தைகளைப் பேசுபவராகவும் இருப்பர்.

குரு – சுக்ரன்:

குரு-சுக்ரன் சேர்க்கையானது அவ்வளவாக சிலாக்கியம் இல்லை. இந்த சேர்க்கை பெற்ற ஜாதகர்கள் கோபம், அகங்காரம் கொண்டவர்களாகவும், மற்றவர்களால் தூற்றப்படுபவர்களாகவும், நன்றி மறப்பவர்களாகவும் இருப்பார்கள். தான் நியாயமாக நடந்து கொள்ளாவிட்டாலும் மற்றவர்களுக்கு நியாயத்தை உபதேசிப்பதில் தயங்கமாட்டார்கள்.

குரு – சனி:

இந்த சேர்க்கையும்கூட அவ்வளவு சிலாக்கியமில்லை. அசைவ உணவில் விருப்பம் கொண்டிருப்பர். இவர்களின் வாழ்க்கையில் ஏழ்மையும் வறுமையுமே நிறைந்திருக்கும்.தைரியசாலிகளான இவர்கள், அலட்சியமாகவும் தற்பெருமையாகவும் பேசுவார்கள்.இவர்களுக்கு ஸ்திர புத்தி இருக்காது. எப்பொழுதும் வெளியில் சுற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கும் இவர்களிடம் உண்மையான வார்த்தைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், எதிர்பாராத வகையில் இவர்களுக்கு பண வரவும், சொத்துக்களின் சேர்க்கையும் உண்டாகும்.

குரு – ராகு:

கல்வியில் ஊக்கம், வியாபார நுணுக்கங்களை துல்லியமாக அறியும் திறன் கொண்ட இவர்கள், ஜோதிட சாஸ்திரம் நன்கு அறிந்தவராகவும் பலன் கூறுபவராகவும் இருப்பார்கள். சங்கீதத்தில் பிரியமும், சாத்தியம் இல்லாத காரியங்களைக்கூட  சாதிக்க முயற்சி செய்பவராகவும் இருப்பார்கள். சாஸ்திரங்களைக் கற்பதுடன் பிறருக்கும் உபதேசித்து தானும் கடைப்பிடிப்பர். பேச்சு சாமர்த்தியமும் மற்றவர்களின் குணமறிந்து பழகும் தன்மையும் பெற்றிருப்பர்.

குரு – கேது:

ஆசார சீலர்களாகவும், வேதம் சாஸ்திரங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர்களாகவும், பல புத்்தக ஆராய்ச்சிகளைச் செய்பவர்களாகவும், உயர் பதவி, அந்தஸ்து, நேர்மை, வாக்கு நாணயம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். உறவினர், நண்பர்களை ரட்சிக்கும் மனம் பெற்றிருப்பர். திறமைசாலியாகவும் அழகாகவும், திகழும் இவர்கள் சங்கீதத்தில் பிரியமும் யாத்திரை செய்வதில் ஆர்வமும் கொண்டிருப்பார்கள். புத்திர ப்ராப்தி இல்லை என்றே சொல்லலாம். மாடு, ஆடுகளை வளர்ப்பதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். பிறருடைய வேலைகளில் தலையிட்டு, தானே முன்னின்று செய்து முடிப்பவராகவும் இருப்பர்.

களத்திர தோசம்:

களத்திர தோசம்:

களத்திர தோசம் என்பது திருமண தாமதம், திருமணம் அமையாத நிலை, திருமணம் நடந்தும் பிரச்சனைகள், பிரிவு, மறுமணம் ஆகியவையே.

அதற்கான சில விதிகள் இதோ.

1) களத்திர காரகன் சுக்கிரன் (அ) களத்திராதிபதி கன்னியில் அமரக்கூடாது. அது களத்திரதோஷத்தை உண்டு பன்னும்.

2) எந்த ஒரு கிரகங்களாயிருந்தாலும் கேந்திர, திரிகோணங்களில் அமர்ந்தால் பலம் வாய்ந்தவர்களாகி விடுவார்கள். பொதுவாக 7ம் அதிபதியை விட 11ம் அதிபதி பலம் பெற்றால் மறுதார அமைப்பை ஏற்ப்படுத்தி விடும். 11ம் இடம் மறுதாரத்திற்க்குரிய இடம்.

3) பொதுவாக சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோசத்தை உண்டு பன்னுவார்கள். காலம் க்டந்த திருமணம், திருமணம் நடக்காத நிலை, திருமணம் நடந்தாலும் சற்று சன்னியாச வாழ்க்கை தான்.

4) களத்திர பாவத்திற்கு (அ) களத்திராதிபதிக்கு (அ) சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோசம் தான்.

5) 2ல் வக்கிரகிரகங்கள் இருந்தாலும், 2ம் இடத்தை வக்கிரகிரகங்கள் பார்த்தாலும், 2ம் அதிபதி பகை நீசம் பெற்று கெட்டிருந்தாலும் குடும்பம் அமைவதை தடை செய்யும், திருமணம் காலதாமதமாகும்.

6) சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கை பல தாரத்தை உண்டு பண்ணும்.

7) பொதுவாக களத்திர காரகன் சுக்கிரன், களத்திர ஸ்தானாதிபதி, சந்திரனுக்கு 7ம் இடத்ததிபதி, சுக்கிரனுக்கு 7ம் அதிபதி ஆகிய அனைவருக்கும் களத்திரத்தில் பங்கு உண்டு. அனைவரையுமே ஆராய வேண்டும்.

8) 7ம் இடத்திற்கு அம்சாதிபதி நின்ற அம்சாதிபதி அலி கிரகமானாலும் மறுமணத்திற்க்கு வித்திடும்.

கோடீஸ்வர யோகம்

கோடீஸ்வர யோகம்

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பலர் அன்றாடத் தேவைகளுக்கே போதிய வருமானமின்றிப் போராட்டத்துடன் வாழ்கின்றனர். உண்மையில், அன்றாட வாழ்க்கைக்குப் போராடும் பலருக்கு கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எப்போது என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுவதுதான், நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.

பிறப்பால் கோடீஸ்வர யோகம் :

கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகு சிலருக்கே அமையும். நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பலம் பெற்ற ஜாதகர் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார். முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பர். குருவும் 9ம் அதிபதியும் இணைந்து கேந்திர, திரிகோணத்தில் இருந்தால், பிறப்பால் கோடீஸ்வரர். லக்னாதிபதி மற்றும் 4ம் அதிபதிகள் பலம்பெற்று இணைந்து தசை நடந்தால் பல வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை பெருஞ்செல்வந்தராகவும் வாழ்வார்.

9ம் அதிபதியுடன் சுபகிரகங்கள் இணைந்து லக்னாதிபதி பலம் பெற்றால், தந்தை முன்னேற்றம் பெற்று, அவர் மூலம் பணம், புகழ் பெறுவர். 9ம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று கேந்திரத்தில் இருப்பது பலவித பாக்கியங்களைத் தரும். சுப கிரகங்கள் ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை, நீச பங்கம் முதலான வகைகளில் பலம் பெற்று கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும், சுபகிரக தசைகள் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் நடைபெற்றாலும் சுகமும், செல்வமும் பெற்றிடுவர். 2, 9, 11ம் அதிபதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருந்தால், குடும்பத்தினரால் பாக்கியம் அனைத்தும் கிடைக்கப்பெற்று, பெரும் செல்வந்தராக வாழ்க்கை நடத்துவர்.

ராசி, லக்னாதிபதி தசை:

ஒவ்வொருவருக்கும் ராசியைப் போல லக்னம் உண்டு. பிறந்த நாளில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் ராசியையும், பிறந்த நேரத்தைக் கொண்டு லக்னத்தையும் அறிந்துகொள்ளலாம். மேஷம் விருச்சிகத்துக்கு செவ்வாய் தசை, ரிஷபம் துலாமுக்கு சுக்கிர தசை, மிதுனம் கன்னிக்கு புதன் தசை, மீனம் தனுசுக்கு குரு தசை, மகரம் கும்பத்துக்கு சனி தசை, சிம்மத்துக்கு சூரிய தசை, கடகத்துக்கு சந்திர தசை என லக்னாதிபதி, ராசி அதிபதிகளின் தசை நடக்கும்போது ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும். சாதாரண நிலையில் இருப்பவரும் சுபகிரக பார்வை பலம் பெற்று லக்னாதிபதி, ராசி அதிபதி தசை நடந்தால், பெருத்த முன்னேற்றத்தை எளிதில் அடைவாா்்கள். அதேபோல், 2, 10, 11ம் அதிபதிகளின் தசை சுப பலம் பெற்று நடைபெற்றால், செல்வச் சேர்க்கை, தொழிலால் லாபம், குடும்ப முன்னேற்றம் போன்றவை உண்டாகும்.

குரு, கேதுவினால் கோடீஸ்வர யோகம்:

குருவிற்கு கேந்திர (1, 4, 7, 10) திரிகோண (1, 5, 9) இடங்களில் கேது நிற்பதும், குரு 5, 7, 9ம் பார்வையால் கேதுவைப் பார்ப்பதும், உயர்தர கோடீஸ்வர யோகத்தைத் தரும். குரு, கேது கெடாமலும், குரு, கேது கேந்திர திரிகோணங்களில் இணைந்து நின்றாலும்் தன் புத்தி, உழைப்பால் கோடீஸ்வரராகிவிடுவர். குரு, கேது இணைவும், கேதுவுக்்கு குரு பார்வை ஏற்படுவதும் குரு தசையிலோ, கேது தசையிலோ சாதாரணமானவரையும் எதிர்பாராத நிலைக்கு உயர்த்தி, புகழுடன் கோடீஸ்வரராக்கிவிடும். 6, 8, 12ல் குரு இருந்து, கேது 6, 8, 12 ஆகிய மறைவிடங்களில் இருந்து குருபார்வை பெறுவது யோக பலனைக் குறைக்கவே செய்யும்.

தொழிலால் கோடீஸ்வரர்:

10ம் அதிபதி, 11ம் அதிபதி பலம் பெற்று சுபகிரக பார்வை பெற்றாலும், 10, 11ம் அதிபதி இணைந்து 4, 9 இடங்களில் இருந்தாலும், 4, 9ம் அதிபதியின் பார்வை பெற்றாலும் தொழில் வருவாய் மூலம் கார், பங்களா என்று சுகமாக வாழ்வர். 10, 11ம் அதிபதிகள் பாதிக்கப்படாமல் இருந்து தசை நடைபெற்றால் தொழில் மூலம் புகழ், செல்வம் சேரும். 4ம் இடத்துக்கு பலம் பெற்ற சுபகிரக பார்வை ஏற்பட்டாலோ, 4ல் லக்னாதிபதியோ, 2, 5, 9, 11ம் அதிபதிகள் நின்றாலோ வாழ்க்கையில் சுகத்துக்குப் பஞ்சம் இருக்காது. பஞ்சமாதிபதி, தனஸ்தானாதிபதி தசை, சுபகிரக பார்வையுடன் நடைபெற்றால், சொகுசான வாழ்க்கை ஏற்பட்டு, கோடீஸ்வரனாகும் யோகம் உண்டாகும்.

யாரால் யோகம்?

11, 9ம் இடங்களில் சூரியன் பலம் பெற்றால் தந்தையாலும், சந்திரன் பலம் பெற்றால் தாயாலும், செவ்வாய் பலம் பெற்றால் நண்பர், கணவர், உடன்பிறப்பாலும், புதன் பலம் பெற்றால் மாமனாலும், சொந்த அறிவாலும், குரு பலம் பெற்றால் முன்னோர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், புத்திரர்களாலும், சுக்கிரன் பலம் பெற்றால் மனைவியாலும், சனி, ராகு, கேது பலம் பெற்றால் வேலையாட்கள் மூலமும், நேர்மையற்ற வழியிலும் செல்வம் சேரும். 2, 7, 9ம் அதிபதிகள் இணைந்து 4, 11ம் வீடுகளில் நின்றால் வசதியான, அழகான கோடீஸ்வரரைத் திருமணம் செய்வர்.

விபரீத ராஜ யோகம் :

‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். 3, 6, 8, 12ம் இடங்கள் மறைவு ஸ்தானம். 3ம் அதிபதி 6, 8, 12ம் இடத்திலோ, 6ம் அதிபதி 3, 8, 12ம் இடத்திலோ, 8ம் அதிபதி 3, 6, 12ம் இடத்திலோ, 12ம் அதிபதி 3, 6, 8ல் மாறி நின்றாலோ, 3, 6, 8, 12ம் அதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தால் புகழுடன் கோடீஸ்வரராக வாழ்க்கை கிடைத்துவிடும். பாதகாதிபதி நீசம், வக்ரம் போன்று வலுவிழந்து தசை நடந்தாலும், ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும். சுபகிரக, கேந்திர, திரிகோண அதிபதிகள் ராசியில் நீசம் பெற்று அம்சத்தில் பலம் பெற்றாலும், சுபயோக பலன்களையே தருவர்.

கோடீஸ்வரராக வழிமுறைகள்:

சராசரி வாழ்க்கைக்கே போராடுகிறோம்; இந்த நிலையில், நாம் எங்கே கோடீஸ்வரராவது என்றே பலர் நம்பிக்கை இழந்துவிடுகின்றனர். முறையான உழைப்பாலும், புதிய சிந்தனையாலும், எந்தத் தொழில் மூலமாகவும் கோடீஸ்வரராகி விடலாம். பலரின் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எல்லோர் வாழ்விலும் நல்ல நேரம் உண்டு. வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமலேயே தவறவிடுகின்றனர்.

அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பது, ஏங்குவதைவிட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும்.
பல வருடங்கள் சேமித்த பொருளைக் கொண்டும், கடன் வாங்கியும் புதிய தொழில் தொடங்கும்போது, முதலில் ஜாதகத்தில் தொழில் தொடங்கும் நேரம் தற்போது உண்டா, தொழிலால் லாபம் கிடைக்குமா, கூட்டுத் தொழில் வெற்றி தருமா என்பதையெல்லாம் கருத்தில் கொள்வது பாதுகாப்பானது. அவசரக் கோலத்தில் தொழில் தொடங்கி, முடங்கிப் போனவர்கள் ஏராளம்.

கோசாரத்தில் 10ல் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி மற்றும் ஏழரைச் சனி காலங்களில் தொழில் சம்பந்தமான பிரச்னையால் தொழில் நஷ்டம், தொழில் மாற்றம், இடமாற்றம் கண்டிப்பாக ஏற்படும். அத்தகைய காலங்களில் புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்த்தல் நலம். குரு வருடந்தோறும் மாறுவதால், பொதுவாக குருபலம் இருக்கிறது என்று புதிய தொழில் தொடங்கிவிடக்கூடாது.

கோசார பலனை மட்டும் பார்க்காமல் 3, 6, 8, 12ம் அதிபதி தசை, பாதகாதிபதி தசை, மாரகாதிபதி தசைகளைத் தவிர்த்தும், நடக்கும் தசையின் நிலையை ஜாதகத்தில் முறையாகத் தெரிந்துகொண்டும் புதிய முடிவுகளை எடுத்தால், தோல்விகளைத் தவிர்க்கலாம்.

கோடீஸ்வர யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், புதாதித்ய யோகம் போன்ற ராஜயோக பலன்கள் இருந்தும் அதற்குரிய தசை, பலம் இவற்றை அறிந்து சுப பலன்களை மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளைப் பலர் அமைத்துக் கொள்ளாமல் விடுவதால், யோகங்களின் பலன்கள் முழுதாகக் கிடைப்பதில்லை.

உங்களை நீங்கள் சரிசெய்து கொண்டால் அடுத்த நொடியேகூட உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து நீங்களும் கோடீஸ்வரராகிவிட முடியும்.